Heart
உலகின் இதய நோய் மையமாக மாறும் இந்தியா
உலக அளவில் இதய நோயின் மையமாக இந்தியா மாறி வருகிறது என மருத்துவரின் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மை காலத்தில் திடீர் மாரடைப்பு காரணமாக பலர் உடனடியாக உயிரிழந்து வருகிறார்கள்
இதற்கு முக்கிய காரணமாக சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறிப்பாக காற்று மாசுபடுதல் மன அழுத்தம் மற்றும் மன நெருக்கடி மோசமான உணவு பழக்கம் உடற்பயிற்சி இல்லாத நிலை போன்றவை காரணமாக அமைகின்றன.
எனவே ஜங்கு உணவுகளை தவிர்த்து இயற்கையான உணவுகளை சாப்பிடுங்கள்.
தினம் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி மேற்கொள்வது நல்லது.
எந்த ஒரு பிரச்சனையும் மனதில் போட்டுக் கொள்ளாமல் வாழ்க்கை என்றால் பிரச்சனை வரத்தான் செய்யும். அதற்கு ஏற்ப நாம் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.
எந்த விஷயத்திலும் பிடிவாதமாக தொடர்ந்து இருக்கக் கூடாது .சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போவது தான் பிரச்சினையில் இருந்து காப்பாற்றும்.