*அரசனை நம்பி...!*
சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு எனது துணைவியாருக்கு திடீர் உடல்நல க்குறைவு ஏற்பட்டது. வழக்கம்போல சர்க்கரை அளவு பிரச்சனை என நினைத்து செயிண்ட் இசபெல் மருத்துவ மனையில் சேர்த்தோம்.
இரத்த அழுத்தம் 120/80 க்கு பதிலாக மிகவும் கீழ் நிலைக்கு சென்றது. தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு மறுநாள் சற்று தேறினார்.
அடுத்தடுத்து மீண்டும் நாடித்துடிப்பு நிலைத்தன்மை இல்லாததால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மறுநாள் மாலை 6 மணியளவில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அடுத்த நாள் ஆஞ்சியோ சோதனையில் மூன்று பிளாக் இருப்பதாக கூறினார்கள்.
ஆபத்தான சூழலில் அதற்குரிய உயர்சிகிச்சை கொடுப்பட்டது.
அடுத்தடுத்து ஆபத்துகளை கடந்து கடந்த 3 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டு வருகிறார்.
இசபெல் மற்றும் காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை கட்டணம் மட்டும் 6,50,000/- ஐ தாண்டியது.
தொகை சற்று அதிகம் என்பதால் மிகுந்த நெருக்கடியில் மொத்த தொகையை கட்டி விட்டு வெளியேறினேன்.
இந்த பதிவை போடவேண்டாம் என்று இருந்தேன்.
இருப்பினும் எனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதால் பதிவிடுறேன்.
*எனது குடும்பத்திற்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக ஸ்டார் ஹெல்த் காப்பீடு செய்து வருகிறேன்.*
*கடந்த பல மாதங்களுக்கு முன்பு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு 5 லட்சம் வரை அரசு காப்பீடு அட்டை தந்தனர். இதை வாங்கி இதன் பயன்பாடு குறித்து அறியாமல் ஸ்டார் ஹெல்த் காப்பீட்டை புதுப்பிக்காமல் விட்டுவிட்டேன்.*
*இருப்பினும் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தினர் என்னை தொடர்ந்து மாதக்கணக்கில் புதுப்பித்துக்கொள்ளுமாறு தொடர்ந்தனர்.*
*#அரசு காப்பீடு அட்டை கிடைத்த பிறகு தேவையில்லை என புதுப்பிக்கவில்லை.*
*ஒரு கொடுமை* என்னவெனில் இந்த
அரசு காப்பீடு* அட்டையை மருத்துவ மனை காப்பீட்டு அதிகாரிகள் ஏற்கவில்லை.*
சிகிச்சை தீவிரம் என்பதால் அரசு காப்பீடு அட்டையை வைத்து விவாதமோ எதிர்பார்ப்போ இல்லாத மனநிலைக்கு வந்துவிட்டேன்.
அரசு காப்பீடு அட்டையில் எந்த மருத்துவமனையில் எந்த மாதிரியான சிகிச்சைகள் கவர் ஆகும். எது எல்லாம் ஆகாது என ஒரு பெரும் குழப்பமும் தெளிவும் இல்லாமல் இருப்பது என்னையும் பாதித்தது.
விபரம் அறிந்து சென்னை பிரஸ் கிளப் பொறுப்பாளர்கள்
விமலேஸ்வரன் மற்றும் ஹமீது ஆகியோர் தானாக முன்வந்து பத்திரிகையாளர்களுக்கான அரசு காப்பீடு அதிகாரிகள் மற்றும் இயக்குனர்களிடம் எனக்காக பேசி பார்த்தார்கள்.
அவர்களிடம் அரசு காப்பீடு அதிகாரிகள் கூறிய பதில் சமாளிப்புகளாகவே இருந்ததே தெளிவாக இல்லை.
மொத்தத்தில் அரசு காப்பீடு அட்டையை நம்பி ஸ்டார் ஹெல்த்தை புதுப்பிக்காமல் விட்டதால் எனக்கு இழப்பு பல லட்சம்.
"அரசனை நம்பி
புருசனை கைவிட்ட" பழமொழி எனக்கு
மிகவும் பொருந்துகிறது.
இனியாவது அரசுகாப்பீடு அட்டையில் கிடைக்கும் மருத்துவ சலுகை விபரங்களை எளிய முறையில் அனைவருக்கும் தெரியபடுத்துவது நன்மை பயக்கும்.
காவேரி மருத்துவ மனையில் எனது துணைவியாருக்கு நல்ல சிகிச்சை வழங்கிய மருத்துவர் கே.பி. சுரேஷ்குமார் மற்றும் அவரது குழு மருத்துவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பு: மற்றவர்களுக்கு எப்படியோ...எனக்கு உதவாத "பத்திரிகையாளர்களுக்கு என தந்து அருளிய"
இந்த அரசு காப்பீடு அட்டையை தமிழக அரசுக்கே மீண்டும் அனுப்ப இருக்கிறேன்.
.........நட்புடன்
சிந்து பாஸ்கர்
---------------+--
---------------
*மூத்த பத்திரிகையாளர் திரு சிந்து பாஸ்கர்*
*Sindhu Baskar* ஐயா முகநூல் பதிவிலிருந்து பகிர்வு -99410 86586
அனைவரும் நிறுவனத்தின் காப்பீடு அட்டை மற்றும் அரசு காப்பீடு அட்டை இருந்தாலும் தனியார் நிறுவனத்தில் ஒரு காப்பீடு ஐந்து லட்சம் ரூபாய் பத்து லட்சம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக