ஒரே விஷயம் Emothional Brain கொண்டு சிந்திக்கப் படுவதற்கும் Logical Brain கொண்டு சிந்திக்கப் படுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு செயலையும் இதைக் கேட்கலாமா, இதைச் செய்யலாமா, தவறாகப் போய்விடுமோ..தோல்வியாகி விடுமோ என்ற ஐயத்துடன் உணர்ச்சி பூர்வமாக அனுகாமல் இதைச் செய்தால் அல்லது இதைக் கேட்டால் எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள், என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வோமே என்ற மனநிலையுடன் எந்த ஒரு செயலையும் லாஜிக்கலாக அனுகிப் பாருங்கள்.
ஏனென்றால் அப்படி மூளையின் லாஜிக்கல் பகுதி கொண்டு சிந்திக்கும்போது நிராகரிப்புகளை, தோல்விகளை உணர்வு பூர்வமாக இல்லாமல் லாஜிக்கலான கேள்விகளாக எதிர் கொண்டு அதன் காரணங்களுக்கான தீர்வுகளை உங்கள் மூளை தேர்ந்தெடுத்துக் கொடுக்கும்.
அதனால் அந்த விசயம் நடக்கவில்லை என்றாலும் அதற்கான மாற்று வழியை உங்கள் மனம் சிந்திக்குமே தவிர அது ஒரு அவமானமாக உங்கள் நினைவில் பதியாது.
எது வேண்டும் நமக்கு?!
-dr.Fajila Azad,International Lifecoachh