மொத்தப் பக்கக்காட்சிகள்

டிபிஎஸ் வங்கி, திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு புத்துயிர்..! DBS Bank India

டிபிஎஸ் வங்கி,  திட்டங்கள் மற்றும் சேவைகளுக்கு புத்துயிர் அளிக்கிறது..!

டிபிஎஸ் வங்கி (DBS Bank), இந்தியாவில் கடந்த 27 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. கடந்த 1994 ஆம் ஆண்டு  மும்பையில் அதன் முதல் அலுவலகத்தையும் 1995  ஆம் ஆண்டில்  அதன் முதல் வங்கிக் கிளையையும் திறந்தது.

2019 மார்ச் மாதத்தில் டிபிஎஸ் வங்கி, உள்நாட்டில்  அதன் 100% சொந்தமான துணை நிறுவனமான  டிபிஎஸ் இந்தியா லிமிடெட் (DBS Bank India Limited -DBIL)- அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது ஒரு முன்னணி உலகளாவிய வங்கியின் முழு உரிமையாளராக, உள்நாட்டில் இணைக்கப்பட்ட துணை நிறுவனமாக செயல்படத் தொடங்கியது. இந்தியாவின் ஒரே பெரிய வெளிநாட்டு வங்கியாக இருந்தது.

 டிஜிட்டல் முதல் வங்கி (Digital-First Bank) அணுகுமுறையை மையமாகக் கொண்டு, டிபிஎஸ் ஏற்கனவே இருக்கும் மற்றும் புதிய எல்விபி வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தது. மேலும், வங்கியின் திட்டங்களை அதிகம் பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. வலிமையான நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு (Current & Savings Account  - CASA) உடன், வங்கி அதன் சில்லறை வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. வங்கியானது, தங்க நகை அடமானக் கடன்கள், வணிக வாகன கடன்கள் மற்றும் கல்விக் கடன்கள் போன்றவற்றை அதன் கிளைகள் மற்றும் டிஜிட்டல் முறையில் பைஜிட்டல் (phygital) ஆக  வழங்கி வருகிறது. சலுகை மற்றும் திட்டங்களை நீட்டிக்கப்பட்ட கிளை நெட்வொர்க்குடன்  இணைத்துள்ளது.


தங்க நகைக் கடன் வணிகத்திற்கு ஊக்கம்..

எல்விபி ஒரு விரிவான தங்க நகைக் கடன்  வணிக்கத்தைக் கொண்டிருந்தாலும், டிபிஎஸ் வங்கியின் டிஜிட்டல் சலுகைகள், தங்க நகைக் கடன் திட்டத்தின் வரம்பை மேலும் விரிவுபடுத்தி உள்ளது. டிபிஎஸ், தங்க நகைக் கடன்கள், விவசாயிகளுக்கு விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களுக்கு கடன் உதவி அளிப்பதற்கான எளிதான மற்றும் தொந்தரவு இல்லாத வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்தக் கடன்கள் அனைத்துக் கிளைகளிலும் கிடைக்கின்றன. மேலும் விவசாயிகள் தங்களுடைய தங்க ஆபரணங்களின் மூலம் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக தொகையை பெற உதவுகிறது. டிபிஎஸ் தங்கக் கடன்கள் 30 நிமிடங்களில் உடனடியாக வழங்கப்படுகிறது. ஒரு கிராமுக்கு கவர்ச்சிகரமான  தொகை, குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் செயலாக்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடி வழங்குகிறது. வங்கி வழங்கிய தங்க நகை அடமானக் கடன்  மதிப்பு சுமார்  ரூ.4,500 கோடியாக உள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கான சேவைகளில் கூடுதல் கவனம்..!

இந்தியாவில் உள்ள பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர் நுகர்வோருக்கு டிபிஎஸ் பல்வேறு வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த காலத்தில் இது முதன்மையாக ஒரு நிறுவன வங்கியாக இருந்தது. இப்போது, டிபிஎஸ் வங்கி இந்தியா, சில்லறை மற்றும் சிறு-நடுத்தர நிறுவன கடன்களை கணிசமாக அதிகரித்து வழங்கி வருகிறது. வங்கி அதன் திட்டங்கள், புவியியல் கவனம் (Geography Focus), கட்டண நிர்ணயம் மற்றும் வாடிக்கையாளர் பிரிவு ஆகியவற்றை அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 சதவீதம் கார்ப்பரேட் மற்றும் 60 சதவீதம் நுகர்வோர் வங்கி மற்றும்  எஸ்எம்இ (SME) -களுக்கு மாற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது. டிபிஎஸ் வங்கியானது நீடித்த வாடிக்கையாளர் உறவுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை ஆதரிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

சீரான ஒருங்கிணைப்பு செயல்முறை…!

2020 நவம்பர் மாதம், லட்சுமி விலாஸ் வங்கி (LVB), டிபிஐஎல் உடன் இணைக்கப்பட்டது. இணைப்புத் திட்டம், இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரங்களின் கீழ், 1949, இந்திய வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், பிரிவு 45ன் கீழ், 2020  நவம்பர் 27 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த ஒருங்கிணைப்பு என்பது டிபிஎஸ் வங்கி இந்தியாவுக்கு தென்னிந்தியாவில் வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளது. அதன் மொத்த நெட்வொர்க்-ஐ 19 மாநிலங்களில் சுமார் 600 கிளைகளாக அதிகரித்தது. திட்டம் & செயல்முறை, அமைப்புகள் & தொழில்நுட்பம், மக்கள் மற்றும் பிராண்ட் (Product and Process, Systems and Technology, and People and Brand) ஆகிய நான்கு தூண்களைச் சுற்றி ஒருங்கிணைப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது - இவற்றில் பெரும்பாலானவை நடப்பு 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஆண்டு 2021-22 சிறப்பம்சங்கள்..!

டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் ,தனது நிதி நிலை முடிவுகளை மார்ச் 31, 2022 அன்று அறிவித்தது. செயல்திறன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

  • வழங்கப்பட்ட நிகர கடன்கள்: ரூ. 43,898 கோடி
  • திரட்டப்பட்ட மொத்த டெபாசிட்கள்: ரூ. 48,978 கோடி
  • நிகர வருவாய்கள்: ரூ.2,892 கோடி
  • நிகர லாபம்ரூ. 167 கோடி
  • ஒட்டு மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio) 16.29% ஆக உள்ளது. இதில் CET 1  என்பது 13.71% ஆக இருக்கிறது.

·         சொத்தின் தரம்: நிகர வாராக் கடன்கள், 2022 மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 1.61%  ஆக உள்ளது. வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (provision coverage ratio) 87% ஆக உள்ளது..

டிபிஎஸ் பற்றி (About DBS):

டிபிஎஸ் ஆசியாவின் முன்னணி நிதிச் சேவைக் குழுவாகும். இது 18 நாடுகளில் இயங்கி வருகிறது. அதன் உலகளாவிய தலைமைத்துவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட டிபிஎஸ், யூரோமணி நிறுவனத்தால் ""உலகின் சிறந்த வங்கி" ("World's Best Bank") என்றும், தி பேங்கரால் ""ஆண்டின் உலகளாவிய வங்கிகள்" ("GlobalBanks of the Year") என்றும், குளோபல் ஃபைனான்ஸ் அமைப்பால் ""உலகின் சிறந்த வங்கி" ("Best Bank in the World")" என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும், 2009 முதல் 2022 வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக குளோபல் ஃபைனான்ஸ் அமைப்பிடமிருந்து 'ஆசியாவின் பாதுகாப்பான வங்கி (Safest  Bank in Asia" விருதை டிபிஎஸ் பெற்றுள்ளது. ஃபோர்ப்ஸ்-ன் உலகின் சிறந்த வங்கிகள் பட்டியலில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக  டி.பி.எஸ்  நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.

 டிபிஎஸ் முழு அளவிலான நுகர்வோர், எஸ்எம்இ மற்றும் கார்ப்பரேட் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. ஆசியாவில் பிறந்து வளர்ந்த வங்கியாக, பிராந்தியத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த சந்தைகளில் வணிகத்தின் நுணுக்கங்களை டிபிஎஸ் புரிந்துகொண்டுள்ளது. டிபிஎஸ் ஆனது வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவுகளை உருவாக்கி வருகிறது.

ஆசியாவில் அதன் விரிவான செயல்பாட்டு நெட் ஒர்க் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றுடன், டிபிஎஸ் அற்புதமான தொழில் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் 30,000+ ஊழியர்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு வங்கியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் தகவலுக்கு,  www.dbs.com. ஐப் பார்வையிடவும்.

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...