உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.
1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.
2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.
3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?
4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.
5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?
6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?
8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.
9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.
10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
---------------------------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல் செய்யமாட்டார்கள் ...
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...
கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை பண்ணாணாம்...!
ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ??? 😡😡😡
குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....😡😡😡😡
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா..?? 🤨🤨🤨
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...
ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...
இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....
இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக