மொத்தப் பக்கக்காட்சிகள்

தமிழ்நாட்டின் சிறந்த தொழில்முனைவோர்களை கௌரவிக்கும் டைகான் சென்னை 2022

தமிழ்நாட்டின் சிறந்த தொழில்முனைவோர்களை கௌரவிக்கும் டைகான் சென்னை 2022



~550- க்கும் கூடுதலான  பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த விருது வழங்கும் விழாவிலஂ முருகப்பா குழுமத்தின் திரு. எம்.எம். முருகப்பன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது வழங்கப்படஂடது 


சென்னை: 7 அக்டோபர் 2022:  


தேசிய அளவில் மிகப்பிரபலமான, மாபெரும் தொழில்முனைவோர் கொண்டாட்டமாக நடத்தப்படும் டைகான் சென்னை 2022 நிகழ்வில் பல்வேறு வகையினங்களின் கீழ், சமுதாயத்திற்கு தாங்கள் வழங்கிய பங்களிப்பிற்காகவும் தங்களது நிபுணத்துவ பிரிவுகளில் நிகழ்த்திய சாதனைகளுக்காகவும், சாதனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நாடெங்கிலுமிருந்து பங்கேற்ற பல வெற்றிகரமான தொழில்முனைவோர்கள், தொழில்துறை தலைவர்கள், சிறப்பான வளர்ச்சி கண்டு சிகரத்தை எட்டிப்பிடிக்க முனையும் ஸ்டார்ட்அப்களின் நிறுவனர்கள், கல்வியாளர்கள் மற்றும் பேரார்வம் கொண்ட வளரும் தொழில்முனைவோர்கள் உட்பட, 550 க்கும் அதிகமான பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்துகொண்டனரஂ. இந்நிகழ்ச்சியில் TiE குளோபல் அறங்காவலர் குழு தலைவர் பி.ஜே.அருண் மற்றும் TiE குளோபல் அறங்காவலர் குழுவின் துணைத் தலைவர் முரளி புக்கப்பட்டினம் ஆகியோர் தலைமை விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.



வரம்பற்ற மீள்திறன் (Resilience Unlimited) என்ற கருப்பொருளைக் கொண்ட இம்மாநாடு, கோவிட் பெருந்தொற்று மற்றும் அதன் பின்விளைவுகளால், தொழில்முனைவு சார்ந்த சூழலமைப்பில் நிகழ்ந்து வரும் மாற்றங்களை முன்னிலைப்படுத்தியதுசென்னையின் தொழில் மற்றும் தொழில்முனைவு தளங்களைச் சேர்ந்த பல புகழ்பெற்ற, கௌரவம் மிக்க தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றது, இதன் தனிச்சிறப்பை உணர்த்துவதாக அமைந்துள்ளதுதொழில்துறையில் சாதனை படைத்த முன்னோடிகள், பிரபலமான முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள், பேரார்வத்துடன் செயலாற்றும் ஸ்டார்ட்அப்களின் நிறுவனர்கள் மற்றும் C – நிலை நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர். வென்ச்சர் முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள், ஒழுங்குமுறை அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் வங்கியாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடவும் மற்றும் தொடர்புகளையும், பிணைப்புகளையும் உருவாக்கவும் ஒரு அற்புதமான வாய்ப்பை இந்நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு வழங்கியதுஇத்தகைய தனிச்சிறப்பான, பிரத்யேகமான தளத்தை அமைத்து தந்ததற்காக TiE சென்னை அமைப்பின் சிறப்பான முயற்சிகளை கலந்துகொண்ட அனைவரும் மனமார பாராட்டினர்.  


டைகான் சென்னை 2022 நிகழ்வில் விருது வென்ற சாதனையாளர்கள்:



1.       வாழ்நாள் சாதனை விருதுதிரு. எம்.எம். முருகப்பன், தலைவர், கார்போரண்டம் யுனிவெர்சல் லிமிடெட்  (CUML) முருகப்பா குழுமம்: பல்வேறு தொழில் பிரிவுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் தலைமையேற்று வழங்கியிருக்கும் பங்களிப்பிற்காகவும் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களின் மேலாண்மை, வளர்ச்சி, தரம், அளவை உயர்த்துதல் மற்றும் ஆளுகை என அவைகளின் பல்வேறு அம்சங்கள் மீது சிறப்பான உள்நோக்குகளை வழங்கும் பன்முகத்திறன் கொண்ட ஆளுமைக்காகவும், அனுபவத்திற்காகவும் இந்த வாழ்நாள் சாதனை விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.



 


2.       இந்த ஆண்டின் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதுகௌதம் சரயோகிகோ கலர்ஸ் நிறுவனம்: இவரது தனிச்சிறப்பான பிசினஸ் திறனுக்காகவும் மற்றும் ஆடைகள் தயாரிப்பு தொழில்துறைக்கு வழங்கிய மதிப்புமிக்க பங்களிப்பிற்காகவும் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது


3.       ஆண்டின் சிறந்த ஸ்டார்ட்அப் விருதுமதுமிதா U, தி இண்டஸ் வேலி


4.       ஆண்டின் அதிக மீள்திறன் கொண்ட ஸ்டார்ட்அப் விருதுஹரி கணபதி, பிக்யுவர் ட்ரெய்ல் நிறுவனம்


5.       ஆண்டின் சிறந்த பெண் தொழில் முனைவோர் விருதுபத்மினி ஜானகி, மைண்டு & மாம்



6.       ஆண்டின் டீபஂடெகஂ ஏதுவாக்குனர் விருதுடாக்டர். சத்யா சக்ரவர்த்தி


டை சென்னை அமைப்பின் தலைவர் திரு. சி.கே. ரங்கநாதன் இந்நிகழ்வில் உரையாற்றுகையில் கூறியதாவது: "விருது வழங்கும் இந்நிகழ்வு, எனக்கு பெருமகிழ்ச்சியளிக்கிறதுஇந்த ஆண்டுக்கான டைகான் சென்னை நிகழ்வின் வெற்றியாளர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்வதற்கு உகந்த தருணம் இது. இம்மாநாட்டின் 15-வது ஆண்டு பதிப்பினை சிறப்பாக நடத்தும் இந்நேரத்தில், தங்களது தொழிலை மேலும் மேம்படுத்திக்கொள்ள பேரார்வம் கொணஂட தொழில் முனைவோர்களுக்கு ஒரு முக்கியமான செயல்தளமாகவும், அமைப்பாகவும் TiE சென்னை தொடர்ந்து இருக்கும் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயமில்லை. ஒரு வெற்றிகரமான தொழில்முனைவு பயணத்தை நோக்கி அவர்களை சரியாக வழிநடத்தும் பணியினை TiE சென்னை, இனிவரும் காலங்களிலும் உறுதியாக மேற்கொள்ளும். தமிழ்நாட்டைச் சேர்ந்த தரம் மிக்க தொழில்முனைவோர்களும் தொழில் தலைவர்களும் நம் தேசத்தின் தொழில்முனைவு சமூகத்தை இன்னும் வலுப்படுத்தும் வகையில் முன்னேறிச் செல்லும் நேரத்தில், தொழில்துறைக்கும் மற்றும் பொது சமூகத்திற்கும் இவர்கள் வழங்கியிருக்கும் பங்களிப்பை இவ்விருதுகள் மூலம் கௌரவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன்."



 முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த கார்போரண்டம் யுனிவெர்சல் லிமிடெட்  (CUMI) –ன் தலைவர் திரு. எம்.எம். முருகப்பன், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் வாழ்நாள் சாதனை விருது குறித்து கூறியதாவது: "தொழில்துறையின் ஜாம்பவான்கள் மற்றும் எனது சகத்தோழர்கள் மத்தியில் இத்தகைய விருதை வழங்கி என்னை கௌரவித்ததற்காக TiE சென்னை அமைப்பிற்கு நான் உண்மையிலேயே நன்றிகடன் பட்டிருக்கிறேன். கடந்த பல ஆண்டுகளாக, எனது பணியாளர்களும், நானும் ஒருங்கிணைந்து தொழில்துறைக்கு மதிப்பினை சேர்த்து வழங்க முற்பட்டிருக்கிறோம்; நேர்மை, பொறுப்பு, பேரார்வம், மரியாதை மற்றும் தரம் ஆகிய பண்புகளால் சமுதாயத்தை மேலும் உயர்த்துவதற்கு உதவுகின்ற சேவைகளின் ஒரு வலுவான அமைப்பை உருவாக்குவதே எங்களது குறிக்கோளாகவும், செயல்பாடாகவும் இருந்து வந்திருக்கிறதுஇவ்விருது, எங்களது அனைத்து முயற்சிகளுக்கான அங்கீகாரமாக வழங்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறதுஇனிவரும் காலங்களிலும் இதே வேகத்தோடும், உற்சாகத்தோடும் இக்குறிக்கோளை முன்னெடுக்க நாங்கள் முற்படுவோம்." 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...