இன்று உலக மூங்கில் தினம்
World Bamboo Day
உலக மூங்கில் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 18 - ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது.
மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஆனால் உலக வர்த்தக அளவான 10 பில்லியன் டாலர் தொகையில் சீனா சுமார் 50% பங்கை பெற்று முன்னணியிலுள்ளது.
மூங்கிலை
பச்சைத் தங்கம்
ஏழைகளின் மரம்
வனவாசிகளின் வாழ்வதாரம்
என்றும் அழைக்கபடுகின்றது. மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிக அளவு கரியமில வாயுவை ( கார்பன் டை ஆக்சைட் ) எடுத்துக்கொண்டும், அதிக அளவிலான பிராணவாயுவை (ஆக்சிஜன்) வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் அதிகமாக வளர்ந்த இடம் குளிர்ச்சியாக இருக்கும்.
ஆனால் மூங்கில் வளர்ப்பில்நம் நாட்டு மக்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை என்பது தான் உண்மை. மூங்கில் வளர்ப்பை ஏனோ மக்கள் விரும்புவதில்லை.
நம் நாட்டைப் பொறுத்தவரை, இன்னும் கூடை, ஏணி, தடுப்பு போன்ற சாதாரண உபயோகத்திற்குத் தான் மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களில் நாற்காலி, மேசை, ஒட்டுப் பலகை. ஜன்னல் மறைப்புகள் என்ற அளவில் சில முன்னேற்றம் உள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்களை மூங்கிலைக் கொண்டு கட்டுகின்றனர் என்பது மகழ்ச்சி தரும் செய்தி.
இயற்கை இந்தியாவிற்கு கொடுத்த கொடை "மூங்கில்". மத்திய அரசாங்கம் "தேசீய மூங்கில் இயக்கம்" (National Bamboo Mission) என்ற இயக்கத்தின் மூலம் பிரபலப்படுத்துகிறது. அதை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக