தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க், சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறை கடன்கள் மற்றும் கிளை, இணைய வழி விரிவாக்கத்துக்கு முக்கியத்துவம்..!
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் (Tamilnad Mercantile Bank -TMB), சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறை (Retail, Agriculture and MSME - RAM) கடன்கள் மற்றும் கிளை, இணைய வழி (Physical and Digital - Phygital)) விரிவாக்கத்துக்கு விரைவில் அதிக முக்கியத்துவம் கொடுக்க உள்ளது அதுவும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க இருக்கிறது.
நூற்றாண்டு கால வரலாறு கொண்ட தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்ட இந்த வங்கியின் மொத்த கடன்களில் சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறை கடன்களின் பங்களிப்பு 88% ஆக உள்ளது.
வங்கியின் மொத்த வணிகத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 75% -க்கு அதிகமாக உள்ளது.; மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்கு 85.03% -க்கு மேல் உள்ளது. தமிழ்நாடு போன்ற அதிக கிளைகளை கொண்டுள்ள மாநிலங்களில் இந்த வங்கிக்கு வளர்ச்சிக்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ துறை கடன்களை இந்த வங்கி மிகவும் சரியாக புரிந்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 15.21% -க்கு மேல் இந்தப் பிரிவில் வளர்ச்சிக்கண்டுள்ளது.
டி.எம்.பி மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியாக உள்ளது. இதற்கு மொத்தம் 509 கிளைகள் உள்ளன. இதில் 106 கிளைகள் கிராமப்புறங்களிலும் 247 கிளைகள் சிறிய நகரங்களிலும் 80 கிளைகள் நகரங்களிலும் 76 கிளைகள் மெட்ரோ நகரங்களிலும் உள்ளன.
இந்த வங்கி, தமிழ்நாட்டில் மிகவும் வலிமையாக உள்ளது. அந்த மாநிலத்தில் டி.எம்.பி-க்கு 369 கிளைகள் உள்ளன. மேலும், 949 தானியங்கி ஏ.டி.எம் மையங்கள் உள்ளன. மற்றும் 255 பணம் மறுசுழற்சி இயந்திரங்கள் (Cash Recycler Machines), 91 இ- லாபிகள் (E-Lobbies), 3,939 பாயிண்ட் ஆப் சர்வீஸ் (PoS) உள்ளன.
முன்னுரிமை கடன்கள் வழன்குவதற்காக சிறிய நகரங்ள் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள சிறிய வாடிக்கையாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினரை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. டி.எம்.பி வங்கி, சில்லறை வணிகத்தை மேம்படுத்த மிகவும் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் கார் கடன்கள், தனிநபர்கள் கடன்களை அதிக அளவில் வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த வங்கி வீட்டுக் கடன் வழங்குவதையும் துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளது.
டி.எம்.பி கட்டண அடிப்படையிலான வருமானத்தை அதிகரிக்க டெபிட் கார்ட்கள், கிரெடிட் கார்ட்கள், பொதுக் காப்பீடு பாலிசிகள், ஆயுள் காப்பீடு பாலிசிகள், டீமேட் டெபாசிட்டரி சேவைகள், பில்களுக்கான கட்டண சேவை ஆகியவற்றை அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் புதியவர்களுக்கு அளிக்க கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
வங்கித் துறையில் கிளைகல் விரிவாக்கம் மற்றும் இணைய வழி சேவைகள் மூலம் நிலையான மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை அடைய டி.எம்.பி இலக்கு நிர்ணயம் செய்து செயல்பட்டு வருகிறது. இதற்கான அதிக புதுமையான தொழில்நுட்ப வசதிக்காக முதலீடு செய்ய உள்ளது.
டி.எம்.பியின் டிஜிட்டல் வங்கி சேவைகள் சிறப்பாக நடந்து வருகிறது. இதன் மூலம் அது வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு மிக்க சேவைகளை அளித்து வருகிறது. அதன் தாய் மாநிலமான தமிழ்நாடு தவிர்த்து ஏற்கெனவே கிளைகளை கொண்டுள்ள மாநிலங்களான குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் வணிகத்தை பரவலாக்கம் செய்ய உள்ளது. 2022 மார்ச் நிலவரப்படி வங்கி திரட்டி மொத்த டெபாசிட்கள் ரூ,.44,930 கோடிகளாகவும் வழங்கப்பட்ட கடன்கள் ரூ. 33,490 கோடிகளாகவும் உள்ளது.
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் பங்கு, 2022 செப்டம்பர் 15 அன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் புதிய பங்கு வெளியீட்டுக்கு (IPO) மொத்தம் 2.86 மடங்குகள் ஆதரவு கிடைத்திருந்தது.