............................................................
''சிக்கனமும், சிறு சேமிப்பும்..
.....................................................
சிக்கனம் என்பதற்கு ஆங்கில அகராதியில் "Frugality" என்று கூறுவார்கள். சிக்கனம் என்பதை பலவாறு நாம் விளக்கலாம்.
உலகின் மாபெரும் பொருளாதார மேதைகளுள் ஒருவராகிய வாரன் பஃபெட் ( Warren Buffet) சேமிப்புப் பற்றிக் கூறும் போது, இப்படிச் சொல்கின்றார்,
"உங்களின் வருமானத்தில், முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்; உங்கள் வருமானத்தில், சேமிப்புப் போக மீதியைச் செலவு செய்யுங்கள்"
சேமிப்பின் அடிப்படையே சிக்கனம் தான். வளங்களை வீணடிக்காமல், திறமையாகக் கையாள்வதை இது குறிக்கும்.
அதாவது அவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்வது. சிக்கனமும், சேமிப்பும் ஒரு குடும்பத்துக்கு மட்டும் பயன் அளிப்பதில்லை.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது
பொதுவாக, செலவு செய்வதைக் கஞ்சத்தனம், சிக்கனம், ஆடம்பரம், ஊதாரித்தனம் என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
கஞ்சத்தனம் என்பது,
அவசிய தேவைகளைக் கூட நிறைவேற்ற மனம் இல்லாதவர்களைக் குறிக்கும். இது அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
சிக்கனம் என்பது,
தகுதியறிந்து செலவு செய்வது. இது சுமூகமான வாழ்க்கைக்கு சிறந்த வழி.
மூன்றாவதாக ஆடம்பரம் என்பது,
மற்றவர்களிடம் வசதியானவன் எனக் காட்டுவதற்காக தகுதிக்கு மீறி செலவு செய்வது.
நான்காவதாக உள்ள ஊதாரித்தனம் என்பது,
கண்மூடித்தனமாக தேவையில்லாத செலவுகளை செய்வது. இது அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
சேமிப்புப் பழக்கத்தை எறும்பு, தேனீக்கள் ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொள்ளலாம். நமது முன்னோர்கள் இப்பழக்கத்தைச் சரியாகச் செய்தனர். பணத்தை மட்டும அல்லாமல், பண்டங்களையும் சேமித்தனர்.
இன்றையக் காலகட்டத்திலும் நம் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, இருக்கும் போதே சேமித்துக் கொள்ளும் பழக்கத்தை, சிறு வயது முதல் குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். நாமும் பழக வேண்டும்.
ஆம்.,நண்பர்களே..,
குடும்பத்தில் அனைவரும் சிக்கனமாக இருந்தால் தான் சேமிப்பு உருவாகும்..
இன்று வரை சிக்கனம் என்றால் என்ன? என்று கேட்பவராக இருந்தாலும் பரவாயில்லை.
இனியாவது சேமிக்கத் தொடங்குங்கள்.
சிக்கனமும், சிறு சேமிப்பும் தான் மகிழ்வான வாழ்விற்கு வழி வகுக்கும்.
(பகிர்வு - தகவல் உலா ..
Open this link to join my WhatsApp Group: https://chat.whatsapp.com/Bg8BxKcNCdgA0CCwVdqHRt