*_புரட்டாசி சனிக்கிழமைகளில் நெல்லையில் இருந்து நவதிருப்பதி கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள்_*
_தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் நவதிருப்பதி ஸ்தலங்கள் அமைந்துள்ளன. 108 திவ்ய தேச ஸ்தலங்களில் இடம்பெற்றுள்ள இத்தகைய கோவில்கள் ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி இரட்டை திருப்பதி, பெருங்குளம், தென்திருப்பேரை திருக்கோளூர் மற்றும் ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.._
_புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தர்கள் இந்த திருத்தலங்களில் தரிசனம் செய்யும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.._
_வருகிற 24-ந் தேதி மற்றும் அக்டோபர் 1, 8, 15 ஆகிய தினங்களில் நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக நபர் ஒன்றுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.._
_முன்பதிவு செய்து நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தும் புரட்டாசி சனிக்கிழமை அன்று இயக்கப்படும் பேருந்துக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.._
_மேலும் 4 புரட்டாசி சனிக்கிழமைகளிலும் நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவில், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், திருக்குறுங்குடி நம்பி கோவில் மற்றும் அத்தால நல்லூர் பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கும், தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் வெங்கடாஜலபதி கோவில் ஆகிய பகுதிக்கும் நெல்லை சந்திப்பு பகுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.._