MF மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்கும் சிறப்பான வழிகள்..!
நாணயம் விகடன் & ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தை உருவாக்குதல்..!' என்ற நிகழ்ச்சிகள் 2022 செப்டம்பர் 3-ம் தேதி மாலை மதுரை யிலும், 4-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை திருநெல்வேலியிலும் நடைபெற்றன.
திரு. கு.ஞானசம்பந்தன், திரு. சௌந்தர மகாதேவன்
மதுரையில் நடந்த நிகழ்ச்சி யில் நடிகரும் பேச்சாளரும், பேராசிரியருமான திரு. கு.ஞானசம்பந்தன் சிறப்புரை ஆற்றினார். திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சியில் பேராசிரியரும் பேச்சாளரு மான திரு. சௌந்தர மகாதேவன் சிறப்புரை ஆற்றினார்.
சேமிப்பு,முதலீடு, நிதி மேலாண்மை குறித்து இந்த இருவரும் சிரிக்கச் சிரிக்க சொன்ன பல விஷயங்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.
திரு. கே.எஸ்.ராவ்
மதுரையில் முதலில் பேசிய ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் சீனியர் வைஸ் பிரசிடென்ட் திரு. கே.எஸ்.ராவ், முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொன் னார். ''நம் வாழ்க்கையில் நாம் செய்யும் மிகப் பெரிய செலவு, மத்திய அரசாங்கத்துக்கு வரி கட்டு வதாக இருக்கிறது. சில திட்டங்களில் முதலீடு செய் வதன்மூலம் வரிச் சலுகை பெற்று, கணிசமான தொகையை நம்மால் மிச்சப் படுத்த முடியும்'' என்றார்.
திரு. பி.வி.சுப்ரமணியம்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேச மும்பையில் இருந்து வந்திருந்தார் நிதி நிபுணரும், எழுத்தா ளருமான திரு. பி.வி.சுப்ரமணியம். ''எனக்கு 50 வயது. இனிமேல் நான் முதலீட்டைத் தொடங்கலாமா'' என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். ''50 வயதானால் என்ன? நீங்கள் 75 வயது வரை இருக்கப் போகிறீர்கள். நீங்கள் நல்ல லாபம் பெற இந்தக் காலம் போதுமே!'' என்று நான் பதில் சொல்வேன்.
முதலீட்டை 25 வயதில் ஆரம்பிப்பது கட்டாயம். அதற்காக 50 வயதைத் தாண்டியவர்கள் முதலீடு செய்யக்கூடாது என்று அர்த்தம் இல்லை. அந்த வயதில் எந்தளவுக்கு நீங்கள் ரிஸ்க் எடுக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்'' என்றார்.
''மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, அதற்கென இருக்கும் விநியோகஸ்தர்கள் (டிஸ்ட்ரிபியூட்டர்கள்) மூலம் வாங்குவதே சரி. வங்கிகளின் வேலை டெபாசிட் திரட்டுவது மற்றும் கடன் தருவதுதான். வங்கியில் பணி புரியும் அதிகாரிகள் நம் எதிர்காலத் தேவை அறிந்து, சரியான ஃபண்ட் திட்டங்களை நமக்குப் பரிந்துரைப்பார்கள் என்று சொல்ல முடியாது. தவிர, ஒன்றிரண்டு ஆண்டுகளில் அவர்கள் வேலை மாற்றலாகி சென்றுவிடவும் வாய்ப்புண்டு. எனவே, வங்கிகள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம். மேலும், பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறதா, வீழ்ச்சியில் இருக்கிறதா என்பதை எல்லாம் பார்க்காமல், நல்ல பங்குகளில், நல்ல ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்வதுதான் சரியாக இருக்கும்'' என்றார்.
திரு. எஸ்.குருராஜ்
ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் திரு. எஸ்.குருராஜ், ''நம் வேலை, நம் மனைவி, நம் நண்பர்கள் எனப் பலரும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. என்றாலும், அவர்களுடன் பொறுமையாகப் பழகுவதன்மூலம் அவர்களை ஓரளவு எப்படிக் கட்டுப்படுத்த முடியும் என்பதைத் தெரிந்துகொள் கிறோம். அது மாதிரித்தான் பங்குச் சந்தையும். பேராசைப்படாமல் நீண்ட காலம் அதனுடன் பழகுவதன்மூலம் அதை நமது நண்பராக்கி, லாபம் சம்பாதிக்க முடியும்'' என்றார்.
ஓய்வுபெறும் நிலையில் இருப்பவர்கள், டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டை (ஃபிக்ஸட் மெச்சூரிட்டி ஃபண்ட்) எப்படி பயன்படுத்தி பயன் பெறலாம் என்பதையும் சொன்னார் அவர்.
திரு. க.சுவாமிநாதன்
இந்த நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலை சிறப்பாக நடத்தித் தந்தார் ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தமிழகப் பிரிவின் தலைவர் திரு. க.சுவாமிநாதன்.