தீராத பிரச்சனை என்று
எதுவும் இல்லை...
சிந்தித்துச் செயல்படுங்கள்...
தீர்ந்து விடும்
உங்கள் பிரச்சனை...
2. நாம் செய்யும் காரியத்தை மட்டும்
வைத்துக் கொண்டு...
இந்த உலகம் நம்மை அளவிடுவதில்லை..
அதில் கிடைக்கும் பலனை வைத்தே அளவிடுவார்கள்...!
3. ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு...
அவனுடைய எண்ணங்களையும்... செயல்களையும்
ஆராய்ந்தால் போதும்
4. உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்...
மனக்காயத்திற்கு அனைத்தையும்
மறந்திடுங்கள்...!
5. குறை இல்லாதவன் மனிதன்
இல்லை...
அதை குறைக்கத்
தெரியாதவன்
மனிதனே இல்லை...!
6. மற்றவர்கள் உங்களைப் பற்றிக் குறை கூறினால்...
ஆத்திரப்படாதீர்கள்...
அது சரி என்றால் திருத்திக் கொள்ளுங்கள்...
தவறென்றால் சிரித்து விடுங்கள்...
எல்லாம் நன்மைக்கே...!
7. நாம் எங்கு நிற்கிறோம் என்பது அல்ல...
எந்தத் திசையில் சென்று கொண்டு இருக்கின்றோம் என்பதே வெற்றிக்கு வழி.
காலத்தின் மதிப்பு தெரிந்தால்...
வாழ்வின் மதிப்பு தெரிந்துவிடும்...!
8. எதிர்பார்த்து ஏமாறுவதை விட... எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வது எவ்வளவோ மேல்...
வலி இல்லாத வாழ்க்கைக்கு...
அதுவே வழி...!
10. காயங்களுக்கு நியாயங்கள்
தேடாமல்..
கடந்து போகக் கற்றுக் கொள்ளுங்கள்....
11. மாறக்கூடியதை மாற்றுங்கள்...
மாறாததை ஏற்றுக்கொள்ளுங்கள்... ஏற்றுக்கொள்ள முடியாதவற்றை... உங்களிடமிருந்து நீக்கிவிடுங்கள்...!
12. மனநிலை சமநிலையில்
இருப்பவர்களால் மட்டுமே...
என்றுமே உயர்நிலையை
அடைய இயலும்...
எதற்கும் உணர்ச்சி வசப்படாதீர்கள்..!
13. உங்களுக்கு எவ்வளவு தெரியும்
என்பது அல்ல...
உங்களுக்குத் தெரிந்ததைக் கொண்டு
எவ்வளவு செய்து முடித்தீர்கள்?
13. நாம் வாழும் வீட்டில் எத்தனை
வசதி இருக்கின்றது என்பதை விட...
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றோம்...
என்பதே சிறந்த வாழ்க்கை
14. பேசுவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை... யோசித்துக்கொள்ளுங்கள்...
ஏனென்றால் உங்கள் வார்த்தைகள்... மற்றொருவரின் மனதில் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை விதைக்கக்கூடும்...
15. எந்த ஒரு செயலிலும் தடைகள் வந்தால்...
தகர்த்து விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று இல்லை.
அதனைத் தவிர்த்து விட்டும் செல்லலாம்...!
16. வாழ்க்கையில் அறிவை விட...
புரிதல் தான் மிகவும் ஆழமானது...
நம்மை அறிந்தவர்கள் பலர் இருப்பார்கள்....
நம்மைப் புரிந்தவர்கள் ஒரு சிலரே இருப்பார்கள்...
அந்தச் சிலரை எந்தச் சூழ்நிலையிலும் விட்டு விடாதீர்கள்...!
17. வருமானத்திற்கேற்ற வாழ்க்கையை வாழுங்கள்
வாழப் பழகுங்கள்...
அதுவே உங்களை தரமானதாக உயர்த்திக்கொண்டு போகும்...!
18. தகுதி இல்லாத பழக்கங்களை இழக்கத் தயங்காதீர்கள்... தகுதி இல்லாததை நீக்கினால் தகுதி உடையது உங்களிடம் தானாக வந்துசேரும்...!
எங்கள் கோகுலம் குடியிருப்பு
வாட்ஸ் அப் குழுவில் கடந்த சில நாட்களில் வந்த கருத்து உரைகள்
தொகுப்பு
அருணகிரி
02.09.2022