மொத்தப் பக்கக்காட்சிகள்


 
அகில இந்தியா(Lic of India) முழுவதும் 13,26,000 பேர் முகவர்களாக பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய நீண்ட நாளான 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த செப்டம்பர் 1 முதல் அனைத்து கிளை அலுவலகம் முன்பாக கோரிக்கை முழக்க அறப்போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
அதன் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை 30.09.2022 பகல் 12.00 மணியளவில் சென்னை LIC Anna Nagar Branch எதிரில் IInd Avenue, Anna Nagar, சென்னை 600 040 முன்பாக நூற்றுக்கணக்கான முகவர்கள் கலந்து கொண்டு ஆர்பாட்டம் செய்ய உள்ளார்கள்.
 
போராட்டத்திற்கான கோரிக்கைகள்


பாலிசிதாரர்களுக்காக.....

1) பாலிசிக்கான போனசை உயர்த்த வேண்டும்.

2) பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்.

3) வெளிநாட்டு பாலிசிதாரருக்கு ஏதுவாக சேவை அளிக்கப்பட வேண்டும்.

4) அனைத்து வித விண்ணப்பங்களுக்கும் ஒப்புகை ரசீது (Acknowledgement) தர வேண்டும்.

5) 5 வருடங்களுக்கு மேற்பட்ட பாலிசிகளை புதுப்பிக்க அனுமதிக்க வேண்டும்.

6) சிட்டிசன் சார்ட் படி குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து சேவைகளும் வழங்கப்பட       வேண்டும்.

7) பாலிசிதாரர்களின் கருத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

8) பலமுறை KYC க்காக ஆவணங்கள் கேட்பதை தவிர்க்க வேண்டும்.

9) ஒரே இடத்தில் பாலிசி அச்சடிப்பது மற்றும் அனுப்புவதை நிறுத்த வேண்டும்.பழைய             முறையையே பின்பற்ற வேண்டும்.

10) புதிய பாலிசி மற்றும் பாலிசியின் சேவைகள் மீதான GST வரியை நீக்க வேண்டும்.
முகவர்களுக்காக.....

ஏஜெண்டு களுக்கான கோரிக்கை

1) பணிக்கொடையை ரூ.5 லட்சத்தை விரைவாக வழங்கிட வேண்டும்

2) IRDAI Gazette (2013 & 2016) உத்தரவின்படி கமிஷனை உயாத்தித்தர வேண்டும்.

3) மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்
. 4) குழு காப்பீடு வயது மற்றும் தொகையை உயர்த்த வேண்டும்.

5) முகவாண்மைக் குழு காப்பீடு உயர்த்தப்பட வேண்டும். (Agency Term Insurance}

6) மன்ற உறுப்பினர் விதிமுறைகளில் JAC பரிந்துரை செய்தபடி மாற்றம் கொண்டு வரவேண்டும்.

7) நேரடி முகவர்களுக்காக கூடுதல் பயன்களை வழங்கிட வேண்டும்.

8) முகவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கடன் வழங்கிட வேண்டும்.

9) வீட்டு வசதிக் கடன் 5% வட்டியில் வழங்கப்பட வேண்டும்.

10) பிரீமியம் பாய்ண்ட் (Premium Point) ஒரு ரசீதிற்கு ரூ.20 ஆக உயர்த்த வேண்டும்.

11) முகவர் நல நிதி திட்டம் (Welfare Fund) அமைக்க வேண்டும்.
12) முகவர்களை தொழில் முறையாளராக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

13) முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.

CLIA க்களுக்காக.....

1) 5 வருடம் CLIA முடித்தவர்களுக்கு முகவர் மன்ற விதிகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

2) CLIA மூலமாக வருகின்ற அனைத்து விதமான வருமானத்தையும் முன்பணம் பெறுவதற்கு
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

Key Takeaways from the Federal Reserve's 2024 December Meeting

5 Key Takeaways from the Federal Reserve's December Meeting *Hawkish Policy Shift:* - The Federal Reserve cut its benchmark rate by *25 ...