தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க், ரூ.831.60 கோடி நிதி திரட்டும் நோக்கில் 2022 செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை புதிய பங்கு வெளியீட்டை (ஐ.பி.ஓ IPO) வெளியிட்டது.
இந்தப் பங்கு வெளியீட்டுக்கு பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த புதிய பங்கு வெளியீட்டில் மொத்தம் 1,58,40,000 பங்குகள் வெளியிடப்படுகிறது. வெளியிடப்படும் பங்கு அளவை விட 2.86 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அதாவது 2.49 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.
சிறு முதலீட்டாளர் பிரிவில் 6.48 மடங்கு பங்குகள் வேண்டிவிண்ணப்பங்கள் வந்துள்ளன.
நிறுவனம் அல்லாத பங்கு முதலீட்டாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்கு அளவை விட 2.94 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன.
தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 1.62 மடங்கு பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்துள்ளன.