ஒரு பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்று பயப்படாதீர்கள். எங்கே பிரச்னை என்பதை மட்டும் சரியாக அனுமானிக்க முயலுங்கள் என்கிறது வாழ்வியல்.
எந்த பிரச்னைக்கும் தீர்வு இருக்கிறது என்று சொல்லிக் கேட்கும் போது நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் பல பிரச்னைகளையும் தீர்க்க முடியாமல் அல்லாடலாகத்தானே இருக்கிறது என்று பலருக்கும் தோன்றக் கூடும்.
சில நேரங்களில் உங்களுக்குப் பிரச்னையாகத் தெரியக் கூடிய ஒன்று பலருக்கும் சாதாரணமாக கடக்க கூடிய ஒன்றாகத் தெரியும். ஏன் உங்களுக்கே உங்களை அதிகமாக அழுத்தக் கூடிய சில விஷயங்களை இதை பிரச்னை என்று சொன்னால் மற்றவர்கள் கிண்டலுக்கு ஆளாக வேண்டி இருக்குமோ என்ற எண்ணம் எழுந்திருக்கும். நீங்களேகூட மற்றவர்கள் பெரும் பிரச்னையாக சொல்லக் கூடிய பல விஷயங்களை, இதில் என்ன பிரச்னை இருக்கிறது என உங்களுக்குள் நகைத்து விட்டு அதைக் கடந்து சென்றிருப்பீர்கள்.
இதனாலேயே பெரும்பாலான பிரச்னைகள் தீர்வு மேடைக்கு வராமலேயே சற்றும் பரிசீலனை செய்யப் படாமலேயே நிராகரிக்கப் பட்டு என் விதி இவ்வளவு தான் என்ற புலம்பலோடு ஆற்றாமையில் தனக்குள்ளேயே புதைக்கப் பட்டு விடுகின்றன. தவிர, இன்னும் பல பிரச்னைகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் தீர்வு புலப்படாமலேயே மனஅழுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
மேலோட்டமாக நீங்கள் பார்க்கும் போது இது தான் பிரச்னை என நீங்கள் கருதக் கூடிய ஒன்று. பிரச்னையின் reflection ஆக இருக்க அதன் 'ஆணி வேர்' வேறு ஒன்றாக இருக்கலாம். அதனால் பிரச்னைக்குத் தீர்வு இல்லை என எந்த சந்தர்ப்பத்திலும் தளர்ந்து போய் விடாமல் பொறுமையாக பிரச்னையை வேறு கோணத்தில் இருந்து அலசும் போது உண்மையான பிரச்னையும் அதன் தீர்வும் உங்களுக்கு சரியாகப் புலப்படும்.
if you could findout what really a problem is, the solution would be very simple
-dr. Fajila Azad, Internaional Life Coach
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக