,
பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30.9.22 அன்று வெளியிடப்படுவது தங்கள் அனைவருக்கும் தெரியும்.
பொன்னியின் செல்வனின் சரித்திர புதினத்துக்கு முன் நடந்த நிகழ்வுகளை நான் எனது மலர்ச்சோலை மங்கையில் (பொன்னியின் செல்வனுக்கு முன்) பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பே வடித்துள்ளேன். பொன்னியின் செல்வன் சரித்திரத்தை நன்கு புரிந்து கொள்வதற்கு அதற்கு முன் நடந்த சம்பவங்களை சொல்லும் இந்தப் சரித்திரப் புதினம் உதவும்.
இதுவரை பல பதிப்புகள் வந்தவிட்ட மலர்ச்சோலை மங்கை எனும் இந்தப் அற்புதமான சரித்திரப் புதினம் வானதி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது.
மலர்ச்சோலை மங்கை (பொன்னியின் செல்வனுக்கு முன்) வானதி பதிப்பகத்தில் கிடைக்கும். தொடர்புக்கு
வானதி பதிப்பக தொடர்பு எண் : 044-24342810
முகவரி : 23, தீனதயாளு தெரு
தியாகராஜா நகர்
சென்னை - 600017
மின்-அஞ்சல் : vanathipathippagam@vsnl.net
முன்னுரை யை இத்துடன் இணைத்து உள்ளேன்.
என்றும் உங்கள் அன்புத் தோழன்
டாக்டர் எல். கைலாசம் 9444088535
@@@@@@@@@
மலர்ச்சோலை மங்கை
(பொன்னியின் செல்வனுக்கு முன்)
முன்னுரை
நான் சரித்திரநவினம் எழுத ஆசைப்பட்ட போது எனக்கு பலரும் பலவிதமான புத்தி
சொன்னார்கள். "உனக்கு ஏன் இந்த விவரீத ஆசை? சரித்திரகதை எல்லாம் இந்த ராக்கட் வேக உலகத்தில் படிக்க மாட்டார்கள். உனது பொன்னான நேரத்தை அனாவசியமாக வீண் செய்யாதே" என்றார்கள். ஆனாலும் எனக்கு எழுதும் ஆசை விடவில்லை. பல தடவை பொன்னியின் செல்வனையும் சில தடவை பராந்தகன் மகளையும் படித்த எனக்கு கான மயிலாட கண்டிருந்த வான்கோழியைப் போல எழுதும் ஆசை அடங்கவில்லை. நான் சரித்திரஆர்வம் கொண்ட பலரை சந்தித்தேன். அனுஷா வெங்கடேஷ் போன்ற அன்புள்ளம் கொண்ட ஒரு சிலரைத் தவிர என்னை யாரும் பொ¢தாக ஊக்குவிக்கவில்லை. கலைமகள் ஆசிரியர்கீழாம்பூர் சங்கர சுப்பரமணியம் சரித்திரகதை எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார். சிறிது
காலம் கதை ஆசையை தள்ளி வைத்தேன். ஆனாலும் காட்டுக்குள் மறைத்து வைத்த
நெருப்பைப் போல சரித்திரகதை ஆசை எனது மனதில் கனிந்து கொண்டு இருந்தது.
திடீரென்று ஒரு நாள் நடமாடும் சரித்திரநாயகன் விக்கிரமனை சந்தித்தால் என்ன?
என்று தோன்றியது. உடனே அதை செயல் படுத்தினேன். சரித்திரநாயகனைப் பார்த்ததும் என்னுடைய எண்ணம் மாறியது. பெரும் பலம் கிடைத்தது. அந்த பெருமகனாரை சந்தித்த விவரம் பற்றி தனியாக இணைத்துள்ளேன். எனக்கு பெரும் பலம் கிடைத்த பிறகு, பல சரித்திரநூல்களைப் படித்தேன். முக்கியமாக நீலகண்ட சாஸ்த்திரியாரின் சோழர்களைப் பற்றிய புத்தகமும், பண்மொழி புலவர் அப்பாதுரை
அவர்களின் தென்நாட்டுப் போர்களங்கள் நல்ல ஞானத்தை கொடுத்தன. எழுதவும் துணிந்தேன் இந்தக் கதை பொன்னியின் செல்வன் கதைக்கு முன்னோட்டம் என்று சொல்லலாம். பொன்னியின் செல்வனின் கதையில் வந்த சரித்திரமாந்தர்களின் இளமைக் காலம் இந்த நெடுங்கதையில் மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. பராந்தக சோழ சக்கரவர்த்தி காலத்தில் இருந்து அரிஞ்சயர் காலம் வரை நடந்த சரித்திரஉண்மைகளை விருவிருப்பான நடையில் கற்பனை கதா பாத்திரங்களையும் இணைத்து மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதி உள்ளேன். என்னுடைய முக்கிய நோக்கம் நமது பராம்பரிய சரித்திரம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே.
இந்த புதினம் எழுத எனக்கு மிகவும் துணை புரிந்த சுந்தர் கிருஷ்ணன், ஆர். ஸ்ரீதர், டாக்டர் கணபதி சுப்பையா, டாக்டர் மாதவ சோம சுந்தரம், சண்முகம், கர்னல் சந்தானவரதன்,பர்வத வர்தினி முரளிகிருஷ்ணன், ஷோபா ராமகிருஷ்ணன், சிவராம் கண்ணன், விஜயகுமார்,எஸ்.பி.எஸ், முருகானந்தம் பாலகிருஷ்ணன், செங்கோட்டை ஸ்ரீராம், ஜி. மோகன், ஜி.ராமசந்திரன், பி. விஸ்வநாதன், உஷா பார்த்தசாரதி, ரூபன் சாமுவேல் வின்சென்ட், கர்னல் சந்தானவரதன் மற்றும் எனக்கு பலவிதங்களில் துணை புரிந்த அன்பு சகோதர சகோதரிகளுக்கு
எனது மனமார்ந்த நன்றியை தொ¢வித்துக் கொள்கிறேன்.
சரித்திரநவினம் எழுதுவது, சரித்திரகதை புனைவது போல அல்ல. அதற்கு மிகவும்
கடின உழைப்பும் ஆழ்ந்த படிப்பும் தேவை என்பது மலர்ச்சோலை மங்கையை வடிக்கும் போது எனக்கு புரிந்தது. இந்த முக்கிய தருணத்தில் எனக்கு சரித்திரஞானத்தை ஊட்டிய சரித்திரக்கதை ஆர்வலர் முருகதாஸ் அவர்கள் அன்புடன் நினைவு கூறுகிறேன். இது என்னுடைய முதல்முயற்சி. மலர்ச்சோலை மங்கையின் நிறைகளை மற்றவர்களிடம் சொல்லவும் குறைகளைவாசகர்கள் பொ¢து படுத்தாமல் மலர்ச்சோலை மங்கைக்கு ஆதரவு தருமாறும் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை டாக்டர் எல்.கைலாசம்
15/08/2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக