ஏற்றுமதி - இறக்குமதியை ரூபாயிலேயே மேற்கொள்ளலாம் - மத்திய வர்த்தகக் கொள்கையில் மத்திய அரசு திருத்தம்
ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப் பரிவர்த்தனையை ரூபாயிலேயே மேற்கொள்ளும் வகையில் மத்திய அரசு வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் புதிய திருத்தம் செய்துள்ளது.
இனி இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் வெளிநாடுகளுடனான பணப் பரிவர்த்தனையை இந்திய ரூபாயிலேயே மேற்கொள்ள முடியும்.
தற்போது இந்தியா அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பெரும்பான்மையாக அமெரிக்க டாலரில் மேற்கொண்டு வருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் குறைகிறது.
மேலும், அமெரிக்கடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது.
இது தவிர, அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் பிரச்சனை நிறைந்ததாக உள்ளது.
இந்தச் சூழலை மாற்றி அமைக்கும் முயற்சியில் ரிசர்வ் வங்கி இறங்கியது. இந்திய வங்கிகள் வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம் வெளிநாடுகளுடன் இந்திய ரூபாயிலேயே வர்த்தகம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக