மொத்தப் பக்கக்காட்சிகள்

நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 கிச்சன் கார்டன்

நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்3.0 செயல்திட்ட அறிமுகத்தோடு இணைந்து தொடங்கப்படும் நவீன்ஸ் கிச்சன் கார்டன்

~உயர்தர காய்கறிகளை தங்கள் வீட்டிலேயே உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையில் 1000 த்திற்கும் மேற்பட்ட காய்கறிசெடிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன~

 

 சென்னை, செப்டம்பர் 9


சென்னை மாநகரில் மக்களின் அதிக நம்பிக்கையும், மரியாதையையும் பெற்றிருக்கின்ற ரியல் எஸ்டேட்  நிறுவனமான நவீன்ஸ், ஒருவார காலம் நடைபெறுகின்ற நவீன்ஸ் கிச்சன் கார்டன் என்ற பசுமை முனைப்புத்திட்டம் இன்று, செப்டம்பர் 9, வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது. உயர்தர காய்கறிகளை வீட்டிலேயே சுயமாக உற்பத்தி செய்ய மக்களை ஊக்குவிக்கும் வகையில் 1000க்கும்மேற்பட்ட காய்கறி செடிகளை மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்நிறுவனம். சென்னை மேடவாக்கத்தில், நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 என்ற பெயரில் உலகத்தரத்திலான குடியிருப்பு சமூக வளாகம் தொடங்கப்படுவதை ஒட்டி, இந்த பசுமை சாகுபடி திட்டத்தை இது மேற்கொண்டிருக்கிறது. 

 

தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கீரைகள், புதினா,துளசி, அவரை, பீன்ஸ்கள், கத்தரிக்காய் மற்றும் இன்னும் பலவகையான காய்கறிச் செடிகள் இந்த முனைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன. செடிகள் மற்றும் மரங்கள் வளர்ப்பின் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டுமென்ற உணர்வை மக்கள் மத்தியில் அதிகரிப்பதும், கரியமிலவாயு வெளியீடுகளை குறைப்பதும் நீடித்த நிலைப்புத்தன்மை வலுப்படுத்துவதும் இந்த தனித்துவமான,புதுமையான திட்டத்தின் நோக்கமாகும். மேலும், ஆரோக்கியமான வேளாண் விளைபொருட்களை தாங்களே பயிரிடுவதற்கான ஒரு வாய்ப்பை பெருநகரங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்க முற்படும் நவீன் கிச்சன் கார்டன் என்பது, நம் நாட்டு பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் உணவு பொருட்கள் தயாரிப்பை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புகளில் ஒரு சிறிய முன்னேற்ற நடவடிக்கையாகும்;அது மட்டுமின்றி குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்து, வீடுகளில் வளர்க்கப்படும் தோட்டத்திலிருந்து அதிகளவு கிடைப்பதையும் மற்றும் உணவுப் பாதுகாப்பு சமூகத்தில் உறுதி செய்யப்படுவதையும் இது சாத்தியமாக்கும்.

 

நவீன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஆர். குமார் இது குறித்து பேசுகையில் "சமூகத்திலிருந்தும், சுற்றுச்சூழலிலிருந்தும் கிடைத்த ஆதாயங்களை அவைகளுக்கே திரும்பதர வேண்டுமென்ற முயற்சியை எப்போதும் எடுத்துவரும் நவீன்ஸ், நிலைப்புத்தன்மை உள்ள இல்ல உருவாக்கம் என்ற குறிப்புகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில் எப்போதும் தீவிர முனைப்புடன் இருந்து வந்திருக்கிறது. நகரங்களில் வசிக்கும் நமது குடியிருப்புவாசிகள்  சிறப்பான இல்லங்களையும் மற்றும் அதே நேரத்தில் சிறந்த உணவுகளையும் கொண்டிருக்க வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் ஊக்குவிப்பதற்கான மற்றுமொரு நல்ல முனைப்புத்திட்டம் நவீன்ஸ் கிச்சன் கார்டன் அறிமுகம் செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலோடு ஒத்திசைவான வாழ்க்கை அவசியம் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. IGBC பசுமை சாம்பியன்களாக ரியாலிட்டி துறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்விடம் என்ற குறிக்கோளின் அடிப்படையில் பல புதுமையான செயல்திட்டங்களை முதன்முறையாக நவீன்ஸ் செயல்படுத்தியிருக்கிறது. EV நிலையங்கள், தண்ணீர் மறுசுழற்சிஆலைகள், சோலார் பேனல்கள், கட்டுமான செயல்பாடுகளில் இயற்கை ஆதார வளத்தின் உபயோகத்தை மட்டுப்படுத்துவதுஆகிய சுற்றுச்சூழலுக்கு தோழமையான பல திட்டங்களும், உத்திகளும் நவீன்ஸ் உருவாக்கும் கட்டிட வளாகங்களில் செயல்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழலுக்கு தோழமையான வாழ்க்கை முறைகளை நவீன்ஸ் எப்போதும் ஆதரித்திருக்கிறது மற்றும் சமூகத்தினரிடையே அதனை ஊக்குவித்து வந்திருக்கிறது.இந்த ''நவீன்ஸ் கிச்சன் கார்டன்'' என்ற புதியமுனைப்புத்திட்டத்தின் மூலம் எமது குறிக்கோளை இன்னும் தீவிரமாக முன்னெடுப்பது எங்கள் முயற்சியாக இருக்கும்; அத்துடன் நமது வருங்கால தலைமுறைகளுக்கு பசுமையான, பாதுகாப்பான வாழ்விடத்தை உருவாக்குவதும், அதனை பராமரிப்பதும் எமது நோக்கமாகும்.''  

 


தரமான மற்றும் பசுமையான வாழ்க்கை வழிமுறையின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மிகச்சிறந்த இல்லங்களை உருவாக்குவதற்காக பிரபலமாக அறியப்படும் நவீன்ஸ்-ன் ஸ்டார்வுட் டவர்ஸ் 3.0 என்பது, இதே குறிக்கோளை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனிச்சிறப்பான செயல் திட்டமாகும். வாடிக்கையாளர்களுக்கு வீடு வாங்குவதில் செழுமையான, இனிமையான அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் 9.85 என்பது மிகப்பெரிய பரப்பளவில் 2BHK அளவில் 588 அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டதாக இந்த பிரிமீயம் ப்ராப்பர்ட்டி உருவாக்கப்படுகிறது. சமீபகாலத்தில் மிகப்பிரம்மாண்டமான வளர்ச்சியை பெற்றிருக்கும் மேடவாக்கத்தில் அமைந்திருக்கும் ஸ்டார்ட் டவர்ஸ் 3.0, இங்கு வசிக்கப் போகும் குடியிருப்பாளர்களுக்கு மிகச் சிறப்பான இணைப்பு வசதியையும் மற்றும் உட்கட்டமைப்பு ஆதாயங்களையும் வழங்கும். ஸ்மார்ட்

தொழில்நுட்பத்தால்ஏதுவாக்கப்படும் இந்த சொகுசு வசதிகள் கொண்ட செயல் திட்டம், அறிமுக சிறப்பு சலுகையாக வெறும் ரூ. 56 லட்சம் (அனைத்தையும் உள்ளடக்கிய விலை) என்ற கவர்ச்சிகரமான விலையில் நிகரற்ற பாதுகாப்பையும் அமைதியான சூழலையும் பெருநகர பரபரப்பான சந்தடிகளிலிருந்து விலகியிருக்கும் இனிய அமைவிட வசதியையும் வழங்குகிறது. இந்த சிறப்பு சலுகை விலையானது செப்டம்பர் 9 முதல் தொடங்கி வெறும் 3 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்

 

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

வணிக நிறுவனங்கள், தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய கவர்டன் இன்சூரன்ஸ்..!

வணிக நிறுவனங்கள் , தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய புதிய இன்சூரன்ஸ் தரகு சேவைகள் வழங்கும் நிறுவனம் – "...