தமிழ் திரையுலகில் சூர்யாவின் 25 ஆண்டுகள்
கட்டுரை பிருந்தா சாரதி
திரையுலகில் ஒரு நடிகராக 25 ஆண்டுகள் தொடர்வதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் சூர்யா ஒரு பதிவிட்டிருக்கிறார்.
' உண்மையில் அழகான ஆசிர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள்... கனவு காணுங்கள்....
நம்புங்கள்.... ' என்பதுதான் அந்தச் செய்தி!
1997 இல் 'பூவெல்லாம் கேட்டுப் பார்' திரைப்படம் வெளியானபோது சூர்யாவுக்கு நடிக்கத் தெரியவில்லை என்றார்கள்.
அவர்தான் 'சூரரைப் போற்று' திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான #தேசிய_விருதினை அண்மையில் பெற்றார்.
ஆஸ்கர் பரிந்துரைக் குழுவில் இடம்பெற அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இது அவருக்குக் கிடைத்த ஓர் உலகலாவிய அங்கீகாரம் .
தன் பயணத்தில் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிப்பின் நுட்பங்களை மேலும் மேலும் உணர்ந்து வெளிப்படுத்துபவராக உயர்ந்துகொண்டே வருகிறார் சூர்யா.
ஏற்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்வதற்கு அவர் எடுக்கும் முயற்சிகள் அழுத்தமானவை. வணிக சினிமாவிற்கான 'ஸ்டைல்' , கலைப்படத்திற்கான 'உண்மையை அருகில் கொணர்தல்' ஆகிய இரு பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற நடிகர் சூர்யா.
இயக்குனர் என். லிங்குசாமி இயக்கத்தில்
'அஞ்சான் ' திரைப்படத்தில் வசனகர்த்தாவாக சூர்யாவோடு பணியாற்றினேன். இப்போது இயக்குனர் பாலா இயக்கத்தில்
'வணங்கான்' திரைப்படத்தில் ஒரு நடிகனாக அவருடன் பணியாற்றுகிறேன்.
'பூவெல்லாம் கேட்டுப் பார்' படத்தில் இருந்த சூர்யா இன்று அடைந்துள்ள உயரத்திற்காக அவர் பட்ட சிராய்ப்புகள், அடிகள், வலிகள் எத்தனையோ?
தனக்குள் இருக்கும் தயக்கங்களையும் மனத்தடைகளையும் களைந்தால்தான் யாரும் எச்செயலையும் சிறப்பாகச் செய்யமுடியும். மற்ற செயல்களை விட நடிப்பிற்கு இது மிகவும் முக்கியம்.
தோல்விகள், அவமானங்கள், காயங்கள் இல்லாமல் எந்த உயரமும் சாத்தியம் இல்லை. அப்படித் தான் அடைந்த உயரத்திற்கான சூத்திரத்தை இரண்டு வார்த்தைகளில் அழகாகக் கூறியுள்ளார் சூர்யா.
'கனவு காணுங்கள்.... நம்புங்கள்.... '
வெற்றிக்கான அடிப்படைச் சூத்திரம் இது.
Dream & Beleive
இதயம் ❤️ நிறைந்த வாழ்த்துக்கள் சூர்யா! உங்கள் உயரங்கள் இன்னும் வளரட்டும். உங்கள் ஆற்றலின் உச்சம் தொடுக!
*
அன்புடன்,
பிருந்தா சாரதி
*
#suriya25years #bestactor #NationalAward #oscar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக