மொத்தப் பக்கக்காட்சிகள்

எப்படித் தோன்றியது? இந்திய சதுரங்கம் Chess

எப்படித் தோன்றியது?

கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் பதிவு. (சிறிய திருத்தங்களுடன்).

இன்று அண்ணன் கே.என். சிவராமன் இரண்டு நூல்களைப் பரிசு அளித்தார். 
சீனிவாச ராமானுஜம் அவர்கள் மொழிபெயர்த்த,
சுந்தர் சருக்கையின் 
'அறிவியல் என்றால் என்ன?' 
ஒரு தத்துவ விளக்கம். 

மற்றொன்று..
தாமஸ் ஆர்.டிரவுட்மன் எழுதிய 'யானைகளும் அரசர்களும்.. சுற்றுச்சூழல் வரலாறு, தமிழில்: ப.ஜெகநாதன், சு.தியோடர் பாஸ்கரன். இந்த நூலை ஆங்கிலத்தில் பார்த்தபோதே வாசிக்க வேண்டும் என்று பேராவல் கொண்டேன். 
தமிழில் கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. 

இன்றைய நாளின் பொருத்தப்பாடு கருதி, அந்த நூலில் சதுரங்கம் தொடர்பாய் சொல்லப்பட்டு இருக்கின்ற செய்திகளை நண்பர்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

----
இப்போது இருக்கும் பன்னாட்டுச் சதுரங்க ஆட்டம் இந்திய ஆட்டமான சதுரங்கத்தில் இருந்து பிறந்தது. 
இது ஒரு போர்க்கள ஆட்டம் சமநிலையான போராட்டக் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. 
இதில் எண்ணிக்கையும் படை வீரர்களும் சமநிலையில் இருக்கும். ஆடுகளமும் அவ்வாறே இருக்கும். இதனால் ஆடுபவர்களின் அறிவுத்திறன் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றது. 
உலகம் முழுவதிலும் இந்த ஆட்டம் பரவி,  உலகளாவிய தன்மை பெற்றுவிட்டது. 
நாம் அதை உணராவிட்டாலும், நால்வகைப் படை என்னும் கருத்து இன்றைய உலகத்தில் பொதுவாக இருக்கின்றது.

தேர்ப்படை மறைந்து போனதற்கான அடையாளமாக, 
அதைப் பற்றிப் பேசாத
 'ஹர்ஷ சரிதம்' உள்ளது. 
இது சதுரங்க ஆட்டத்தின் காலத்தைப் பற்றிய தடயத்தைக் கொடுக்கின்றது. 
இது 'அஷ்டபதம்' என்று குறிப்பிடப்பட்ட (8x8) அங்குலப் பலகையில் ஆடப்பட்டது. 
சதுரங்க ஆட்டத்துக்கு வெகு காலத்துக்கு முன்பாகவே இந்தப் பலகை இருந்தது என்பது,
கி.பி முதலாம் நூற்றாண்டின் பதஞ்சலியின் பாணினியின் இலக்கணத்துக்கான விளக்கத்தில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது. 

இந்த ஆட்டப் பலகையை, சதுரங்கத்தைத் தவிர மற்ற சில விளையாட்டுகளுக்கும் பயன்படுத்தி இருக்கின்றார்கள். அத்தகைய ஆட்டங்களைக் காட்டும் கற்சிலைகளும் உள்ளன. 

இது போன்ற ஆட்டக் கட்டங்கள், விஜய நகரத்திலும் பண்டைய இடங்களிலும் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன என்பது மைக்கேலா சோரின் (Micaela Soar 2007) ஆய்வில் இருந்து தெரிகின்றது. 

ஆனால், சதுரங்கம் ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னால் இருந்ததற்கான தடயம் ஒன்றும் இல்லை. 

சதுரங்க ஆட்டம் தோன்றிய பின், இந்தியாவில் அதன் வேறுபட்ட வடிவங்கள் தோன்றின. 
இவற்றில் முதன்மையானது நால்வர் ஆடும் சதுரங்கம். 
இதில் ஆட்டக்கார ஜோடிகள் ஒவ்வொருவரும் 
இருவர் ஆடும் சதுரங்கத்தில் உள்ள படைகளில் 
பாதியை வைத்து இருப்பார்கள்.

இவை வலது பக்கத்தின் முதல் இரண்டு இடங்களில் ஒவ்வொன்றும் பலகையின் நான்கு பக்கங்களுக்கு ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். 
உருட்டப்படுகின்ற தாயம்தான் 
காய் நகர்த்தலை முடிவு செய்யும். 

ஆனால், அதற்கு முன்னர் 
இந்த ஆட்டம் முற்றிலும் அறிவைச் சார்ந்ததாக இருந்தது. பின்னாட்களில் இந்த சதுரங்கம் நால்வர் ஆட்டமாக மாறி 
இருவர் ஆடும் ஆட்டம் '
புத்திபலா - நுண்ணறிவுப்படை' என்ற புதிய பெயரில் அழைக்கப்பட்டது. 

இந்த ஆட்டம்  நுண்மையான அறிவைச் சார்ந்தது என்பதை 
இப் பெயர் குறிக்கின்றது. 

இந்த ஆட்டம் மேற்கு நோக்கி பாரசீகம், அரேபியா பிறகு ஸ்பெயின், மற்ற ஐரோப்பியப் பகுதிகள், கிழக்கு நோக்கி திபெத், தென் கிழக்கு ஆசியா, சீனா ஆகிய இடங்களுக்குப் பரவியது. 

இந்த இரு பகுதிகளிலும் இவை வெவ்வேறு வடிவம் பெற்றன.

 கிழக்குப் பகுதியின் இந்திய சதுரங்கம் புதிய உள்நாட்டு வகைகளை உருவாக்கியது. 
மேற்கில் இருவர் ஆடும் ஆட்டத்திறன் ஒரே வடிவம் பெற்று நிலைத்து விட்டது. 

அரபு மொழி பேசும் பகுதியில் இருந்த சதுரங்க ஆட்டக்காரர்களுள் ஒருவரான 
பாக்தாத் நகரில் வாழ்ந்த அல் அட்லி (Al-Adli) (கி.பி840) இந்த விளையாட்டைப் பற்றி ஒரு நூல் எழுதி உள்ளார். 

அந்த நூல் அழிந்துவிட்டாலும், 
சில பகுதிகள் பின்னர் வந்த சதுரங்க ஆட்டம் பற்றி எழுதியவர்களால் பாதுகாக்கப்பட்டது. 

மூன்று நகர்த்தல்கள் இந்தியாவில் இருந்து வந்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்றும், அது போல் வேறு எங்கும் இருந்தது இல்லை என்றும் அவர் சொன்னதாக மேற்கோள் காட்டப்படுகின்றது.

 முதலாவது, கலிலா -வா-திம்னா (கலியா, திம்னா என்ற இரு நரிகளுக்கு இடையே நடக்கும் பேச்சு) இந்தியாவில் இளவரசர்களுக்கு உலக அறிவை ஊட்டும் பஞ்சதந்திரம் நூலைப் போல,
பாரசீகத்திலும் அரபு மொழி பேசும் பகுதியில் உள்ளவர்களுக்கும் உரியது கலிலா வா திம்னா. 

இரண்டாவது 
ஒன்பது குறியீடுகள் மற்றும் சுழியங்கள் (இதன் மூலம் ஒருவர் முடிவற்று எண்ணலாம்).

மூன்றாவது சதுரங்கம். 

மேற்கு நோக்கிய இவற்றின் பரவல் பாரசீகத்தின் மன்னர்களான சசானியர்கள் மூலமாக நடந்தது. சசானிய மன்னர் முதலாம் குஸ்ரூ (கி.பி.531-579) என்பவருக்கு 
இந்திய மன்னர் ஒருவரின் தூதுவரின் மூலமாக சதுரங்கம் வந்ததற்கு நம்பத் தகுந்த சான்று உள்ளது. 

( பாரசீகத்தார் இதை 'சத்ரங்' என்றும் அரபியர்கள் 'ஷத்ரத்" என்றும் கூறுவர்) இவை இந்தியப் பெயரில் இருந்து வந்தவை. 

இத்தூதுவர்தான் பஞ்ச தந்திர நூலை பஹ்லவி மொழியில் ஆக்கம் செய்தார் என்பதற்குச் சான்று உள்ளது.

சதுரங்கம் ஈரானில் இருந்து அரபியர்க்கு வேகமாகப் பரவியது. அரபிய சதுரங்கத்தைப் பற்றியும், சதுரங்க ஆட்டத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் ஒரு நூல் எழுதினர். 
அல் அட்லி இது போன்ற நூல்கள் எழுதியவர்களுள் ஒருவர். 

பின்னர், சதுரங்கம் ஸ்பெயினையும் ஐரோப்பாவையும் சென்று அடைந்தது. 

இந்தப் பயணத்தில் ஆட்டத்தின் தொடக்கத்தில் வைக்கப்படும் காய்கள் எதிலும் மாற்றம் இல்லை. ஆனால், காய்களின் பெயர்களும் நகர்த்தல்களின் பெயர்களும் பல கட்டங்களில் மாற்றப்பட்டன. 

இந்திய வடிவத்தில் இருந்து மேற்கு உகில் வடிவமைக்கப்பட்ட பன்னாட்டு வடிவத்தை 
தொடக்கம் மற்றும் இறுதிக் கட்டங்களை கீழ் வருமாறு தொகுத்து அறியலாம்.

சதுரங்கப்படை   -    சதுரங்க ஆட்டம்
காலாட்படை       -    சிப்பாய்
ரதம்                        -    ரூக், யானை, ரதம், கோட்டை
குதிரை                  -    குதிரை
யானை                  -   மந்திரி
அரசன்                   -   அரசன்
மந்திரி                   -   அரசி

குறிப்பாக, தேரும்யானையும் மாற்றப்பட்டன. 
தேரை,
ரூக் எனக் குறிப்பிட்டனர்.
இதற்கான காரணமும் பொருளும் விளங்கவில்லை. 

ஐரோப்பாவில் ரூக் அல்லது கோட்டை பாரசீகத்தில் யானையாகவே இருந்தது. 
அரபு மொழியில் அல்ஃபில். 
இது ஸ்பாயினிய மொழியில் அப்படியே நிலைத்து விட்டது. 
மந்திரி (சமஸ்கிருந்த்தில் மந்த்ரின் அல்லது அமாத்யா). 
பாரசீக மொழியில் வாசிர். 
அரபு மொழியில் ஃபிர்ஸான்.

ஆனால், இது ஐரோப்பாவில் அரசியாக மாறிவிட்டது.

 காய்களிலேயே வலிமையற்றது அரசன். 
இது ஒரே ஒரு கட்டம் மட்டுமே நகர முடியும். 

ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டில் ஆட்ட விதிகளில் ஏற்பட்ட மாற்றம் 
அரசியை சதுரங்கப்பலகையிலேயே வலிமை உள்ளதாக்கி விட்டது. 

அந்த நேரத்தில் நடந்த இதுவும் ஏனைய மாற்றங்களும் சேர்ந்து, ஆட்டத்தின் புதிய வடிவத்தை வகுத்தன. 

இந்தியாவில் நால்வகைப் படை அதன் அமைப்பை ஏற்படுத்தி இருந்தாலும்,
அந்த அமைப்பு வெகுவாக மாறி 
இனி விளங்கிக்கொள்ள முடியாதபடி ஆகிவிட்டது. 
பெயர்கூட மாறிவிட்டது. 

செஸ், செக் போன்ற சொற்கள், அரசனைக் குறிக்கும் 'ஷா' என்ற பாரசீகச் சொல்லைச் சார்ந்தது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? ச.ஶ்ரீதரன், நிதி ஆலோசகர்

இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்?  By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் ,  https://www.walletwealth....