மொத்தப் பக்கக்காட்சிகள்

4156 கல்வி நிறுவனங்களுக்கு தேசிய இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நாடாளுமன்ற இளையோர் நாடாளுமன்ற விவகாரத் துறை சார்பில் தேசிய இளையோர் நாடாளுமன்றம் நடைபெற்றது

56 மாணவ மாணவியர் அனல் பறக்கும் விவாதங்களை நடத்தி நாடாளுமன்றத்தைக் கண்முன் கொண்டுவந்தனர்

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியும் இந்திய அரசின் நாடாளுமன்ற விவகார அமைச்சகமும் இணைந்து 27.08.2022 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியை நடத்தின. 

இந்திய சுதந்திரத்தின் அமுதத் திருவிழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயகத்தின் மாண்பை மாணவர்களிடம் உணர்த்தும் பொருட்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் துறைத் தலைவருமான முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் முனைவர் சே.மு.அப்துல்காதர் தலைமையுரையாற்றினார்.

 துணை ஒருங் கிணைப்பாளர்கள் இ.எஸ்.அப்சல், எம். சாகுல்ஹமீது ஆகியோர் நிகழ்வின் நோக்குரை நிகழ்த்தினர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் எம். கே.எம்.முஹம்மது நாசர், பொறியாளர் எல்.கே.எம்.ஏ.முஹம்மது நவாப் ஹுசைன், பேராசிரியர் எஸ். அபுபக்கர் மற்றும் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரித் துணைச் செயலாளர் வாவு இஷ்ஹாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரை வழங்கிய பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் இளையோர் நாடாளுமன்ற நிகழ்வைத் தொடங்கிவைத்துச் சிறப்புரையாற்றும் போது இந்திய அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை 2022-2023 கல்வியாண்டில் இந்தியாவில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ மாணவியருக்கு இந்திய ஜனநாயகத்தின் மாண்பினை உணர்த்தும் பொருட்டு தேசிய இளையோர் நாடாளுமன்ற நிகழ்வுப் போட்டியை நடத்துகிறது.

 இந்த ஆண்டு 8409 கல்லூரிகள் நாடு முழுக்க இத்திட்டத்திற்கு விண்ணப்பித்தில் 4156 கல்வி நிறுவனங்களுக்கு தேசிய இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சியை நடத்த அனுமதி தந்தது. அதில் திருநெல்வேலி மாவட்டத்தில், நான் பயின்ற சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மட்டுமே தேர்வாகியுள்ளது.இன்றும் இக்கல்லூரியில் மாணவர் பேரவை உயிர்ப்போடு இருக்கிறது, மாணவர்களுக்குச் சரிசமமாக மாணவியரும் 50 விழுக்காடு பேரவையை அலங்கரிக்கிறார்கள். கல்லூரி வளர்ச்சி குறித்து விவாதித்தார்கள். 

பல சாதனைகள் படைக்கிறார்கள் என்பதைக் காணும்போது பெருமையாக உள்ளது. உயரிய மதிப்பீடுகளையும், இறைநம்பிக்கையையும் வாழ்வின் சவால்களைத் துணிச்சலோடு எதிர்கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறார்கள். எல்லோரிடமும் இணைந்து ஒற்றுமையாக ப் பணியாற்றும் ஆற்றலையும் பெறுகிறார்கள்.இந்த இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நல்ல நாவலர்களை, நல்ல தலைவர்களை உருவாக்கப்போகிறது. தேசம் குறித்து சிந்திக்கும் உயர்ந்த நோக்கமுடைய மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் புதிது புதிதாய் இந்த மாணவர் கூட்டத்தில் இருந்து உருவாகப் போகிறார்கள் என்று எண்ணுகிறேன்.

மாணவர்களைச் சிறந்த ஆளுமைகளாக மாற்றும் நான் முதல்வன் திட்டத்தைத் தமிழக முதல்வர் தொடங்கிவைத்து கல்லூரி மாணவர் கல்வி கற்க மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையை வழங்குகிறது.

மேனாள் மாநிலங்களவை உறுப்பினர்  விஜிலா சத்யானந்த் சிறப்புரையாற்றும் போது, அரசியல் புறந்தள்ளக்கூடியதன்று, தலைமைப் பண்போடு மாணவர்கள் திகழ இதுபோன்ற இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் துணைபுரியும் என்று குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவை மேனாள் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றும் போது, தமிழக சட்டப்பேரவைப் பணியில் 39 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். 7 ஆண்டுகள் சட்டப்பேரவைச் செயலாளராக கலைஞர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் போன்றோரோடு பணியாற்றியிருக்கிறேன். எந்தப் பணி தரப்பட்டாலும் முழுமையான ஈடுபாட்டோடு, முழு கவனத்தோடு பணியாற்ற வேண்டும் என்று நினைப்பேன். மக்களால் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதே ஜனநாயக ஆட்சிமுறை. மக்கள் நினைப்பதை மக்கள் பிரதிநிதிகள் செய்துமுடிக்கிறார்கள். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து 3% மக்களுக்கே விழிப்புணர்வு இருக்கிறது. படிக்கும் மாணவர்கள் அதை அறிந்தால்தான் மற்றவர்களுக்குச் சொல்லமுடியும். கல்லூரிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களைத் தலைவர்களாக்கும் என்று பேசினார்.

ஊடகவியலாளர்கள் சார்பில் புதிய தலைமுறை செய்தியாளர் நாகராஜன் கலந்துகொண்டு, மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் கொண்டு செல்வதில் ஊடகங்கள் சிறப்பிடம் பிடிக்கின்றன. சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்ள ஊடகங்கள் உதவுகின்றன என்று குறிப்பிட்டார்.

மாணவர்கள் காரசார விவாதங்கள்
சபாநாயகர், பிரதமர், எதிர்கட்சித் தலைவர். அமைச்சர்கள், எதிர்கட்சி உறுப்பினர்கள் பொறுப்புகளில் 56 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு 5G தொழில்நுட்பம், விவசாயிகள் பிரச்சனைகள், மருத்துவ சேவை, கல்வி தொடர்பான விவாதங்களைக் காரசாரமாய் மேற்கொண்டனர். நிகழ்வின் இறுதியில் இளையோர் நாடாளுமன்ற விவாதம் குறித்து சிறப்பு விருந்தினர்கள் கருத்துரை வழங்கினர்.

 தமிழ்த் துறை இணைப்பேராசிரியர் முனைவர் அ.மு. அயூப் கான் கருத்துரை வழங்கினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது காஜா  நன்றியுரை கூறினார்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...