தமிழ்ப் புத்தகத் திருவிழா-2022*
பெங்களூரு டிச.25, 2022-ஜன.1, 2023
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 25 முதல் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதிவரை பெங்களூரில் தமிழ்ப் புத்தகத் திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளன.
கருநாடகத்தில் தமிழர்களுக்கு தமிழ்க்கற்றல் மற்றும் மொழியால் ஒன்றுபடுதலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இத்திருவிழா நடத்தப்படுகிறது.
இத்திருவிழாவில்...
* அள்ள அள்ள குறையாத அறிவுச்செல்வமாய் தமிழ்ப் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும்
* இலக்கியச்செறிவுள்ள பேச்சாளர்களின் உரைவீச்சுகள், நூல் வெளியீடுகள், மாணவர்களின் தமிழ்க்கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன
* கருநாடகத் தமிழர்களின் வரலாற்று ஏடுகளை படம் பிடிக்கும் ஆவணக் களஞ்சியமாக தமிழ்ப் புத்தகத் திருவிழா சிறப்புமலர் வெளியிடப்படுகிறது.
* கருநாடகத்தில் தமிழ், தமிழர்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அறிஞர்கள், அறிவியலறிஞர்கள், இலக்கியவாதிகள், பேராளர்கள், விற்பன்னர்கள், தொழில்முனைவோர், இதழாளர்கள் பாராட்டப்படுவார்கள்.
*கருநாடகத் தமிழரின் வரலாற்றில் திருப்புமுனையாக அமையவிருக்கின்ற தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*
*எங்களின் முதல் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்...!*
*இனி ஆண்டுதோறும் நடக்கும் பாருங்கள்..!*
தமிழுணர்வுடன்,
முத்துமணி நன்னன்,
செயலாளர், தபுதி-2022
பெங்களூரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக