மொத்தப் பக்கக்காட்சிகள்

Women பெண் பார்க்கும் படலம் அருணகிரி. சங்கரன்கோவில்

பெண் பார்க்கும் படலம்

கண்ணில் பட்ட பதிவை இங்கே பகிர்ந்து இருக்கின்றேன். எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனால், வாழ்க்கையை உற்றுக் கவனித்து, கூர்ந்து பார்த்து,
இந்தப் பதிவை எழுதி இருக்கின்றார். அவருக்கு நம்முடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

இனி பதிவைப் படியுங்கள்;
உங்கள் கருத்துகளை எழுதுங்கள்;
உங்கள் தளங்களில் பகிர்ந்து பரப்புங்கள்.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்ன என்பதையும் சொல்லுங்கள்.

கண்ணில் பட்ட பதிவு

பெண் பார்க்கும் படலத்தில்

1 அவன் உயரம் ஒரு சென்டிமீட்டர் கம்மியா இருக்கு- வேண்டாம்!

2 போலீஸ் மாப்பிள்ளை – வேண்டாம்!

3 வக்கீல் மாப்பிள்ளை – வேண்டாம்!

4 சொந்த பிசினெஸ்ஸா ? ஏகப் பட்ட கடன் இருக்கலாம் – அதனால் வேண்டாம்!

5 எட்டாம் தேதியில் பிறந்திருக்கார் – அதனால் வேண்டாம்!

6 தலைப் பையனுக்கும் தலைப் பெண்ணிற்கும் ஆகாது- வேண்டாம்!

7 விசாகம் நட்சத்திரம் மூத்த மைத்துனருக்கு ஆகாது – வேண்டாம்!

8 மூலம் கண்டிப்பாய் ஆகாது- வேண்டாம்!

9 பையன் ரொம்ப கட்டையா இருக்கான் – வேண்டாம்!

10 காக்கா கருப்பு பரவாயில்லை , அதை விடக் கருப்பா இருக்கார்- வேண்டாம்!

11 மாப்பிள்ளை சிவப்பு தான் , ஆனால் லட்சணம் இல்லை- வேண்டாம்!

12 ஜாதகம் சரியில்லை , அதனால் வேண்டாம்!

13 சுக்கிரன் ராகு சேர்ந்து இருக்கு – அதனால் வேண்டாம்!

14 ராகு கேது தோஷம் இருக்கு – வேண்டாம்!

15 கால சர்ப்ப தோஷம் கடுமையாய் இருக்கு – வேண்டாம்!

16 குண்டு உடம்பாய் இருக்கு – அதனால் வேண்டாம்!

17 வயசு வித்தியாசம் ரொம்ப சாஸ்தியா இருக்கு – வேண்டாம்!

18 ஒரே பையன் தான் , அம்மா செல்லம் போல – அதனால் வேண்டாம்!

19 ரொம்பப் பெரிய இடமா இருக்கு – அதனால் வேண்டாம்!

20 குடியிருக்க வீடு கூட இல்லை – அதனால் வேண்டாம்!

21 பையன் வாங்கிற சம்பளம் வாடகைக்கே பத்தாது – அதனால் வேண்டாம்!

22 குடும்பப் பின்னணி சரியில்லை – அதனால் வேண்டாம்!

23 நாங்க சைவம் – நீங்க அசைவம் – அதனால் இப்போது ஐடியா இல்லை!

24 நம்மள விட ஜாதி அந்தஸ்த்தில் கொஞ்சம் கம்மி – வேண்டாம்!

25 படிப்பு பத்தாது – அதனால் வேண்டாம்!

26 ஒல்லிக் குச்சியா இருக்கார் – ஆகாது!

27 இந்தப் பையனை ஏற்கனவே பாத்திட்டோம் – வேண்டாம்!

28 ஒரு பொண்ணு அவங்க வீட்டில திரும்பி வந்துடுச்சு – அதனால் வேண்டாம்!

29 சும்மா தான் பதிவு பண்ணி வச்சோம்- அவசரம்னா வேற இடம் பார்த்துக்குங்க!

30  கப்பலில் வேலை ? எப்ப வீட்டுக்கு வருவான்னு தெரியாது – வேண்டாம்!

31 மாப்பிள்ளையோட அப்பா சுத்த தண்ணீர் வண்டி போல  வேண்டாம்!

32 ஒரு சில பொண்ணு வீட்டுக் காரங்க தங்களைப் பற்றிய விவரம் கொடுக்கும் போது , நிபந்தனைகள் மற்றும் சில விதிகள் கூறி  ஜாதகம் கொடுப்பார்கள்.

லக்கினத்தில் சனி செவ்வாய் சேரக் கூடாது ., இரண்டில் சனி, ஐந்தில் சனி , ஏழில் சனி , சனி – செவ்வாய் சேரக் கூடாது ., சூரியன் -செவ்வாய் எந்தக் கட்டத்திலும் சேரக் கூடாது.  இரண்டு-எட்டில் ராகு கேது இருக்கக் கூடாது!

33 தமிழ் நாட்டு எல்லை தாண்டித் தர மாட்டோம் -வேற இடம் பார்த்துக்கோங்கோ!

34 ஜாதகத்தை மாற்றிக் கொடுத்திட்டாங்க – ஆரம்பமே இப்படியா ?

35 ரொம்ப காலமாய் ஜாதகம் மார்க்கெட்டில் சுத்துது – வேண்டாம்!

36 படிப்பிலே பொய் சொல்லிட்டாங்க – வேண்டாம்!

37 மாப்பிள்ளை வீட்டார் வருமானம் இன்றி இருக்கும் போது பெண்ணின்!

வருமானத்தில் காலம் ஓட்டினால்  கண்டிப்பாய் பெண் தர மாட்டோம்!

38 பத்து ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதி வாங்கிட்டுத் கொடுப்போம்- சம்மதமா?

39 மாப்பிள்ளை கொஞ்சமாகத் தான் குடிப்பானாம் – அதனால் வேண்டாம்!

40 பழைய காதலி இன்னும் தொடர்பில்  தான் இருக்கிறாள் – அதனால் வேண்டாம்!

41 ஜாதகத்தில் எதிர்காலம் கேள்விக் குறியாக இருக்கு – அதனால் வேண்டாம்!

42 பெண்ணின் படிப்புக்கு மாப்பிள்ளை படிப்பு  கம்மியாக இருக்கு – வேண்டாம்!

43 பெண் வீட்டில் நல்ல வசதி -பையன் வீட்டில் கம்மி- வேண்டவே வேண்டாம்!

44 தை மாசம் தலைக் கல்யாணம் செய்ய மாட்டோம்!

45 பிறந்த மாசத்தில் கல்யாணம் ஆகாது – வேண்டாம்!

46 அக்கினி நட்சத்திரம் கல்யாணம் ஆகவே ஆகாது!

47 கார்த்திகை தீபம் வந்துருச்சு -அப்புறம் பாத்துக்கலாம் – அதனால் வேண்டாம்!

48 இதை எல்லாம் தாண்டி வருபவர்களுக்கு சிவப்புக் கம்பளம் வரவேற்பு உண்டு!

49 அரசு உத்தியோகம்  மற்றும் வங்கி வேலையைத் தவிர மற்றவர்கள் அணுக வேண்டாம்!

50 வாடகை நிறைய வருதுன்னு சொல்லிட்டு வண்டி ஒட்டுகிறவர்கள் வரவே வேண்டாம்!

51 விவசாயத்தை நம்பி பெண் கொடுக்கிற மாதிரி ஐடியா இல்லை!

52 கோவிலில் பூ கேட்டுப்  பார்த்தோம் , சாமியே சம்மதிக்க வில்லை என்று மொத்தத்தையும் ரிட்டன் செய்து விடுவார்கள்!

53 இன்னும் விட்டுப் போன விஷயங்கள் நிறைய உண்டு – அதை நீங்கள் அனுபவித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!

54 எங்க ஜாதி தவிர வேற ஜாதிக்கு  இட ஒதுக்கீடு இல்லை  ( இங்கேயும் வந்துட்டிங்களா ?)

55 ரொம்ப தூரமா இருக்கு ? நாங்க இங்க பக்கத்தில தான் பார்க்கிறோம்

56 இந்த பொண்ணு வீட்டுக் காரங்கிட்ட பேசிப் பேசியே ., அப்படி என்ன கேட்டுப் போய்ட்டாங்க!  இந்தப் பையனின் கல்யாணம் முடிந்தவுடன் பாகப் பிரிவினை பண்ணி சொத்தை மாத்திக் கொடுத்திருவீங்களா ?

57 பத்தாயிரம் சம்பளத்திருக்கெல்லாம் பொண்ணு கிடைக்காது ., சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதீங்க!

58 எம் இ படிச்சவன் நிலைமை அதை விடக் கொடுமையா இருக்கு, பிரபஸர் வேலைக்குப் போகலாம்னு பல இடங்களுக்கு விண்ணப்பிச்சி வேலை கிடைக்காமல் வீட்டில் சும்மா இருப்பவருக்கு நிச்சியம் பொண்ணு தரமாட்டோம்!

59 ஒரு பொண்ணு வீட்டுக் காரன் மாப்பிள்ளை வீட்டிற்கு , போட்டா அனுப்ப முற்பட்ட போது தாவணி போட்ட காலத்தில் எடுத்த போட்டவை அனுப்பி வைத்துள்ளான் எதற்கு என்று தெரிய வில்லை .

60, ரயில் பெட்டிகளின் இணைப்பு மாதிரி திசை சந்திப்பு!  பையனுக்கு திசை சரியில்லை! அதனால் நிச்சயம் பெண் கொடுக்க முடியாது!

61 பையன் gym வச்சி நடத்துறான் கோவகரான இருப்பான்...அதனால பொண்ணு தரமாட்டோம் ...

62 பையன் பையனாக இருக்கான் அதனால பொண்ணு தரமாட்டோம்

இது போன்ற  செக் லிஸ்டில் உள்ள பல விநோதமான விதிகளை மீறி , 
உங்களுக்கோ,  உங்கள் ஆண் பிள்ளைகளுக்கோ,  உங்கள் உறவினர்,  நண்பர்களின் பிள்ளைகளுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ 

பெண் பார்க்கும் பந்தயத்தில் 

நீங்கள்  வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
 
வாழ்க வளமுடன்🙏

அருணகிரி
24 ஜூலை 2022
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...