மொத்தப் பக்கக்காட்சிகள்

India debt கடன் சுமை இந்தியா தப்புமா?

கடன் சுமை
இந்தியா தப்புமா?

அரிசிக்கும் வரி போட்டாச்சு,
சோத்துக்கும் வரிபோட்டாச்சு,அடுத்து பிணத்தை அடக்கம் செய்வதற்கும் வரிபோடலாம் என்கிற நிலையும் வந்தாச்சு,அரசு சொத்துக்களையும் விட்டுவைக்க
வில்லை இந்த நிலையில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடி இந்தியா அதளபாதாளத்தில் விழும் நிலை உருவாகும் என்கின்றனர் உலக பொருளாதார நிபுணர்கள்.
ஆனா மோடியும்,
நிர்மலாவும்,
இப்படி எதுவும் நடப்பதாகவே காட்டிக் கொள்ளாமல் ஆட்சியை கலைப்பதிலும்,அடுத்த மாநிலத்தை குறிவைப்பதுமாக உலா வந்து கொண்டுள்ளனர்.என்கின்றனர் டெல்லி தலைவர்கள்.
ஏன்னா சமீபகாலமாக
சர்வதேச சந்தையின் தாக்கத்தால் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால்  இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது, கடந்த வாரம்  அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சற்றும் எதிர்பாராத வகையில் 79.32 ரூபாய் வரையில் சரிந்தது.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் விலைவாசி மட்டும் தான் உயரும் என்று நினைப்பவர்களுக்கு இந்தியாவுக்கு வர இருக்கும் நெருக்கடி பற்றி கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.ஏன்னா வெங்காயம் சாப்பிடும் பழக்கம் இல்லாததால் அதன் விலையேற்றம் பற்றி தெரியாது என நாடாளுமன்றத்திலேயே பேசிய நிர்மலா இந்த நெருக்கடியையும் பூசி மெழுகி மக்களை திசை திருப்புவதில்தான் முயற்சிப்பார் என்கின்றனர்  டெல்லி தலைவர்கள். 
ஏன்னா
 இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்கனவே ஜூன் மாதம் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துப் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளோம். இந்நிலையில் இந்தியா அடுத்த சில மாதத்தில் செலுத்த வேண்டிய கடன் தொகை மலைபோல் நிற்கிறது, இது நாட்டின் அன்னிய செலாவணியைப் பெரிய அளவில் பாதிக்கும் என்கின்றனர். 

இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் 621 பில்லியன் டாலரில், அடுத்த 9 மாதத்தில் வெளி சந்தையில் வாங்கிய சிறிய காலக் கடனுக்கான தவணை மட்டும் சுமார் 267 பில்லியன் டாலர் செலுத்த வேண்டியுள்ளது. இது நாட்டின் மொத்த அன்னிய செலாவணி இருப்பில் கிட்டதட்ட 44 சதவீதமாகும்.

 இதே நேரத்தில் பணவீக்கம், பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாகப் பல முன்னணி கார்பரேட் நிறுவனங்கள்,  இந்திய சந்தையில் முதலீடு செய்வதைக் குறைத்துவிட்டது.

இதேவேளையில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை காப்பாற்ற அதிகளவில் வெளியேற்றியும் வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும் இந்திய ரூபாய் மதிப்பை பாதிக்கும் வகையில் கச்சா எண்ணெய், தங்கம், எலக்ட்ரானிக்ஸ், உற்பத்தி பொருட்கள் எனப் பல உள்ளது. அதற்கு அனைத்திற்கும் டாலர் இருப்பு தேவை என்பதால், இதே சூழ்நிலை அடுத்த 9 மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தியாவின் அன்னிய செலாவணி இருப்பில் நெருக்கடி நீடிக்கும் நிலை உருவாகும்.

அப்போது பொருளாதார வீழ்ச்சியை யாராலும் காப்பாற்ற முடியாது. இது அடுத்த 2 வருடத்திற்குத் தொடர்ந்தால் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளைப் போல் இந்தியாவும்   
தள்ளப்படும் என்கின்றனர்.
இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டு வர மத்திய நிதியமைச்சகம் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன செய்யப்போகிறார் என்பது தான் தற்போது முக்கியக் கேள்வி. மோடி அரசு முன்னாள் அரசு போல் இந்தப் பொருளாதார மந்த நிலையைச் சமாளிப்பது பெரும் சவாலான காரியம். 2008 நிதிநெருக்கியில் அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மறந்துவிட முடியாது.

பிரிட்டன் நாட்டில் ஆட்சி கவிழ்ந்தது, அமெரிக்காவில் பணவீக்கம் தாண்டவமாடுகிறது, சீனாவில் கொரோனா தொற்று குறைந்தபாடு இல்லை, ரஷ்யா சொல்லவே வேண்டாம்.. அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாள் நிலமை விளிம்பில் உள்ளது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் உலகளவில் இருக்கும் பொருளாதார வல்லுனர்கள் 2008 போல் சர்வதேச நிதிநெருக்கடி வரும் எனக் கணித்துள்ளனர். இதேபோல் இன்னும் சில மாதங்கள் பொருளாதார மந்த நிலை தொடர்ந்தாலே 2008 ஆம் ஆண்டு நிலை உருவாகும் என எச்சரிக்கின்றனர்.நிர்மலாவும் மோடியும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...