•• சொந்த வருமானத்திற்கு வரி கட்டி, அந்த வரி கட்டிய வருமானத்தில் வந்த பணத்தையும், வேலையையும் மூலதனமாக வைத்து வாகன கடன் வாங்குகிறேன்...
•• வாங்குற கடனுக்கும் Processing fee / Service charge எல்லாம் கட்டி, வட்டியும் கட்டி கார் வாங்குகிறேன்..
•• வாங்குற கார்க்கும் அப்போவே GST கட்டுகிறேன்.. பின்பு அதை ரெஜிஸ்டர் பண்ண கட்டணம்.. பின்பு அந்த காரை ரோட்டில் ஓட்ட Road Tax கட்டுகிறேன்🤷🏻♂️
••• என்ன தான் road tax கட்டினாலும், திரும்பவும் அதே ரோட்ல வண்டி ஓட்ட Toll உம் கட்டுறேன், Toll recharge பண்ண fastag வாங்குறேன்.. அந்த recharge க்கும் சர்வீஸ் charge கட்டுறேன்..
••• வருடம் வருடம் car Insurance கட்டுறேன்.. அந்த insurance க்கும் GST கட்டுறேன்..
••• இத்தனை வரி போட்டு, Toll கொடுத்து ஓட்டுற கார்க்கு வரி வாரி கொடுத்து Petrol போடுகிறேன்.
••• அந்த காரை service செய்ய திரும்பவும் GST கட்டுறேன்.. Spare மாத்த GST கட்டுறேன்🤷🏻♂️
வெள்ளைக்காரன் வரி கப்பம் என்று வாங்குனானு போராட்டம் பண்ணுன கதை படிச்சி இருக்கோம்.. அதை விட மோசமான வரி கப்பம் இது..
திங்குற சாப்பாடு முதல், எரியுற சுடுகாடு வரை வரி கப்பம்.. இதை மாற்ற இங்கே ஒரு கட்டபொம்மனும் இல்லை என்பதே நிதர்சனம் 🙏🏻
GST ஒரு தனி மனித சுரண்டல் 🤷🏻♂️
எனது சம்பளம் உயரவில்லை..
சம்பளத்திற்கான வரி உயருது..
வாங்குற பொருட்களுக்கு GST உயருது..
Inflation விலைவாசி உயருது..
ஆனால் அரசு சொல்வது, மக்கள் நலமாய் மகிழ்வாய் வாழ்கிறார்கள் என்று 🤔
அதிக வரி வசூல் வேட்டை ஆடும் நாடுகளில் இந்தியா டாப் ஆக போய்க்கொண்டு இருக்கிறது 👍
இதை சொல்ல நான் பொருளாதார நிபுணர் இல்லை... உங்களை போல் வரி சுமையில் இருக்கும் குடிமகன் (குடிக்காத குடிமகன்)😂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக