மொத்தப் பக்கக்காட்சிகள்

கவின்கேர் – எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கவின்கேர் – எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை, 28 ஜுலை 2022: வருடாந்திர நிகழ்வாக நடைபெறுகிற கௌரவமிக்க கவின்கேர் – எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுக்கு தொழில்முனைவோர்கள் மற்றும் பிசினஸ் நிறுவனர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிதியாண்டு 2020-21ல் ரூ. 100 கோடிக்கும் குறைவான விற்றுமுதல் (turn-over) கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் சிறு & நடுத்தர தொழில் நிறுவனங்கள், தேவையான விபரங்களோடு சேர்த்து 11வது கவின்கேர் – எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் விருதுக்கு https://ckinnovationawards.in/ என்பதில் விண்ணப்பிக்கலாம் அல்லது +91 97899 60398 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் தரலாம். விருதுக்கான விண்ணப்பத்தை (நாமினேஷனை) பெறுவதற்கான இறுதித் தேதி  01 ஆகஸ்ட்  2022 .

 

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கிவரும் எஃப்எம்சிஜி துறையின் பெரு நிறுவனமான கவின்கேர், மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் (MMA) உடன் இணைந்து மேற்கொள்ளும் ஒரு செயல்முயற்சியான இவ்விருது தொழில்முனைவோர்களின் தயாரிப்புப் பொருள்/சேவை ஆகியவற்றின் தனித்துவமான அம்சங்களுக்காக அவர்களை அங்கீகரித்து கௌரவிக்கிறது; இதில், தர மற்றும் அளவை உயர்த்தும் திறன், நிலைப்புத்தன்மை மற்றும் மக்களுக்கு கிடைக்கும் பலன் ஆகியவை இந்த தனிச்சிறப்பான பண்புகளில் உள்ளடங்கும். இவ்விருதை வெல்லும் வெற்றியாளர்களுக்கு ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும். அத்துடன் சேர்த்து தொழில் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல், ஐபி-ஐ(Intellectual property) பெறுதல் மற்றும் வங்கிகள் மற்றும் நிதிசார் நிறுவனங்களோடு நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் ஆகிய செயல்பாடுகளில் ஆதரவையும் வெற்றியாளர்கள் பெறுவார்கள்.

 

கவின்கேர் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. சி கே ரங்கநாதனின் தந்தையான காலஞ்சென்ற திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது நிகழ்வை கவின்கேர் சிறப்பாக நடத்திவருகிறது. திரு. ஆர். சின்னிகிருஷ்ணன் அவர்கள் 'சாஷே புரட்சியின் தந்தை' என நாடெங்கிலும் அறியப்படுபவர்.

 

இந்நிகழ்வுபற்றி திரு. சி கே ரங்கநாதன் பேசியபோது, "எமது வருடாந்திர புத்தாக்க விருதுகள் நிகழ்வு தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அர்த்தமுள்ள, பயனளிக்கக்கூடிய சிறப்பான புத்தாக்கங்களை மேற்கொள்கிற திறன்மிக்க சாதனையாளர்களை கண்டறிவது உண்மையிலேயே ஒரு ஆனந்தமான அனுபவமாகும். இந்த ஆண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் செயல்முறை இப்போது தொடங்கப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இவ்விருது நிகழ்வுக்காக கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான ஆதரவின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்த ஆண்டுக்கான சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருதுகள், முந்தைய நிகழ்வுகளைவிட இன்னும் பெரிதாக, சிறப்பானதாக மற்றும் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது நிச்சயம். ரூ. 100-கோடி வரை விற்றுமுதலைக் (Turnover) கொண்டிருக்கும் நிறுவனங்களை விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களாக சேர்த்துக்கொள்ள நாங்கள் முடிவுசெய்திருப்பது, இந்த ஆண்டு நிகழ்வை இன்னும் சிறப்பானதாக ஆக்குகிறது. இவ்விருது, பிசினஸ் செயல்பாடுகளில் மிகச்சிறப்பான சிந்தனையாளர்களை நாடு முழுவதும் அறியுமாறு செய்யும். இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து விருது நிகழ்வுகளுக்கும் தொழில்துறையின் பிரம்மாண்டமான வரவேற்பும், அங்கீகாரமும் எங்களுக்கு தொடர்ந்து கிடைத்து வந்திருக்கிறது; இந்த ஆண்டு நிகழ்வும் அதுபோலவே வெற்றிகரமான ஒரு நிகழ்வாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று கூறினார்.

 

2011ம் ஆண்டில், முதன்முறையாக தொடங்கப்பட்டதிலிருந்து கவின்கேர் – எம்எம்ஏ சின்னிகிருஷ்ணன் இனோவேஷன் விருது, தொழில்முனைவு திறனின் ஆர்வத்தையும், சிறப்பையும் கொண்டாடி வந்திருக்கிறது. இதுநாள்வரை, பல்வேறு வகையினங்களின் கீழ் 30 தொழில்முனைவோர்கள் இவ்விருதைப் பெற்றிருக்கின்றனர்.


கவின்கேர் லிமிடெட் குறித்து: கவின்கேர் பிரைவேட் லிமிடெட், தனிநபர் பராமரிப்பு, தொழில்முறை பராமரிப்பு, உணவுகள், பால்பொருட்கள், பானங்கள், சூழல் மற்றும் சலூன்கள் ஆகிய துறையில் தொழிற்பிரிவுகளைக்கொண்டு, ஒரு பன்முக செயல்பாடுள்ள ஒரு எஃப்எம்சிஜி பெருநிறுவனமாகும். இதன் பிராண்டுகள் தொகுப்பில் ஷாம்புகள் (சிக், மீரா, கார்த்திகா மற்றும் நைல்), ஹேர் வாஷ் பவுடர்கள் (மீரா மற்றும் கார்த்திகா), தேங்காய் எண்ணெய் (மீரா), ஃபேர்னஸ் கிரீம்கள் (ஃபேர் எவர்), டியோடரண்ட் மற்றும் டால்க் (ஸ்பின்ஸ்), ஊறுகாய்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் (ருச்சி, சின்னிஸ் & கார்டன்), ஹேர் கலர்ஸ் (இன்டிகா), ரீடெய்ல் சலூன் தயாரிப்புகள் (ராகா புரொஃபஷனல்), பானங்கள் (மா), பால் பொருட்கள் (கவின்ஸ்), மற்றும் பியூட்டி சலூன்கள் (கிரீன் டிரென்ட்ஸ் & லைம்லைட்) ஆகியவை அடங்கும். உடல்நலம் மற்றும் தூய்மை வகையினத்தில் தனது செயல்பாடுகளை சமீபத்தில் விரிவாக்கம் செய்திருக்கும் கவின்கேர், காய்கறிகள் மற்றும் பழங்களின் தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காக சாஃபூ (மற்றும் பல்வேறு மேற்பரப்புகள் மற்றும் சாதனங்களுக்கான தொற்றுநீக்கியான பாக்டோ-வி என தொற்றுநீக்கல் செய்து தூய்மைப்படுத்தும் தயாரிப்புகளின் அணிவரிசையை வழங்குகிறது. இதன் முக்கியமான ஃபர்சனல் கேர் பிராண்டுகளின் கீழ் ஹேண்டு சானிடைசர்கள் மற்றும் லிக்விட் சோப்பு தயாரிப்புகளையும் கவின்கேர் வழங்கி வருகிறது. இதன் பெரும்பாலான பிராண்டுகள் அவைகளுக்குரிய தயாரிப்பு வகையினங்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிற பிராண்டுகளாகும். நவீன சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப திறன்கொண்ட ஒரு பிரத்யேக ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் மையமானது, இந்த பல்வேறு துறைகள் முன்னேற்றம் காண்பதற்கு தொடர்ந்து பெரிதும் உதவுகிறது. மிகப்பெரியளவில் சந்தையாக்கல் செய்வதற்கான யுக்திகளையும், அம்சங்களையும் மிகச்சரியாக புரிந்துகொண்டிருக்கும் இந்நிறுவனம், தேசிய அளவிலான சந்தையில் மிக வலுவாக காலூன்றி இருக்கிறது. "பேரார்வமும், பெருமகிழ்ச்சியும் கொண்ட பணியாளர்கள் வழியாக புத்தாக்கத்தை ஊக்குவித்து மக்களால் பெரிதும் விரும்பப்படும் பிராண்டுகளை உருவாக்குவதன் மூலம், தொழில்துறையின் வளர்ச்சியை விட கணிசமான அளவு இன்னும் சிறப்பாக நாங்கள் வளர்ச்சி காண்போம்" என்ற தனது கார்ப்பரேட் செயல்நோக்கம் மற்றும் திட்டத்தின் மீது வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதே கவின்கேரின் வெற்றிக்கு காரணமாகும்.

 

மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (MMA) குறித்து:

மேலாண்மைக் கல்வி, பயிற்சி மற்றும் முன்னேற்ற செயல்பாடுகளை நாட்டின் இப்பகுதியில் ஊக்குவிக்க வேண்டும் என்ற பிரதான நோக்கத்தோடு, 1956-ம் ஆண்டில் மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் (MMA) நிறுவப்பட்டது. தனது உறுப்பினர்களாக 8000-க்கும் அதிகமான கார்பரேட் நிறுவனங்கள், தொழிலகங்கள், தொழில்முறை நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் எக்ஸிகியூட்டிவ்களை MMA கொண்டிருக்கிறது.

 

ஊடக விசாரணைகளுக்கு, தயவுசெய்து தொடர்புகொள்க: 

ஐஸ்வர்யா N | +91 9048934826 | aiswarya@brand-comm.com

 

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற . - பஜாஜ் ஃபின்சர்வ் ELSS வரி சேமிப்பு ஃபண்ட் .!

திரு .  எஸ் .  கார்த்திகேயன் ,  நிறுவனர் ,  https://winworthwealth.com/ மாத சம்பளக்காரர்கள் மற்றும் முதல் முறை முதலீட்டாளர்களுக்கு   ஏற்ற . ...