மொத்தப் பக்கக்காட்சிகள்

குடியரசுத் தலைவர் பொறுப்புகள், கடமைகள், அதிகாரங்கள் - சங்கரன்கோவில் அருணகிரி

குடியரசுத் தலைவர் 

பொறுப்புகள், கடமைகள், அதிகாரங்கள்.

தினமணி விளக்கக் கட்டுரை.
26.07.2022
அவர்கள் எழுதி இருக்கின்ற வடமொழிச் சொற்களை நீக்கி,
ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் தனித்தனியாக முழுமையாக எழுதி இருக்கின்றேன். 

படியுங்கள்.. பரப்புங்கள் 

மேலாண்மை அதிகாரங்கள்.

1. ஒன்றியத் தலைமை அமைச்சர் மற்றும் அமைச்சர்களை அறிவித்தல்.

2. ஒன்றிய அரசின் 
தலைமை வழக்கு உரைஞர், தலைமை கணக்குத் தணிக்கையாளர், 
தலைமை தேர்தல் ஆணையர் மற்ற தேர்தல் ஆணையர்கள்,
ஒன்றிய பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்.

3. மாநிலங்களின் ஆளுநர்களைத் தேர்வு செய்து அறிவித்தல்.

4. ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளுக்கு, துணைநிலை ஆளுநர்களை அறிவித்தல்.

5. அரசு சார்ந்த எந்த ஒரு தகவலையும்,
ஒன்றிய தலைமை அமைச்சரிடம் கேட்டுப் பெறுதல்.

6. நாட்டின் எந்த ஒரு பகுதியையும்,
பழங்குடி மற்றும் பட்டியல் இனப் பகுதியாக அறிவித்தல்.

7. ஒன்றிய அமைச்சர்கள் அவை தீர்மானித்த முடிவுகளை, 
மறு ஆய்வு செய்யக் கூறுதல்.

நிதி சார்ந்த அதிகாரங்கள்.

1. பணம் வரவு செலவு தொடர்பான சட்ட முன் வரைவுகளை,
குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகுதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்.

2. குடியரசுத் தலைவரின் பெயரில்தான், நிதிநிலை அறிக்கை வாசிக்கப்படுகின்றது.

3.நெருக்கடி காலங்களில் 
அரசு நிதியை விடுவித்தல்.

4. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதித் குழுவைத் தேர்வு செய்து அறிவித்தல்.

நீதிசார் அதிகாரங்கள்.

1. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்ற நீதிபதிகள்,
உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்தல்.

2. குறிப்பிட்ட சட்டம் தொடர்பான கருத்துகளை உச்ச நீதிமன்றத்திடம் கோரிப் பெறுதல்.

3. நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கவும்,
தண்டனையைக் குறைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

பாதுகாப்பு சார் அதிகாரங்கள்:

1. முப்படைகளின் தலைமைத் தளபதிகளைத் தேர்வு செய்தல். 

2. எந்த ஒரு நாட்டின் மீதும் போர் தொடுக்க ஆணை பிறப்பித்தல்.

நெருக்கடி நிலை அதிகாரங்கள்

1. நாடு முழுமையும் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் நெருக்கடி நிலையை அறிவித்தல்.

2. மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அறிவித்தல்

3. நிதி சார் நெருக்கடி அறிவித்தல்

சட்டம் சார்ந்த அதிகாரங்கள்

1. நாடாளுமன்றம் நிறைவேற்றுகின்ற சட்ட முன் வரைவுகள்,
குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகுதான்
சட்ட வடிவம் பெறும்.

2. நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்துவதற்கான அழைப்பு விடுத்தல், முடித்து வைத்தல்,

3. நாடாளுமன்றம் நடைபெறாத வேளைளில் 
தேவைப்படும் சட்டங்களைப் இடைக்காலமாகப் பிறப்பித்தல்.

4. மக்கள் அவை மாநிலங்கள் அவையின் கூட்டுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தல்.

5. ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளிலும்,
புதிய அரசு பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடரிலும்.
குடியரசுத் தலைவர் சிறப்பு உரை ஆற்றுவார்.

6. தேர்தலில் போட்டியிடாத பல்துறை விற்பன்னர்கள் 12 பேரைத்  தேர்வு செய்து,
மாநிலங்களவை உறுப்பினர் ஆக்குதல்.

7. மக்கள் அவையை கலைக்கும் அதிகாரம்.

8. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி நீக்கம் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துடன் கலந்து பேசி முடிவு எடுத்தல்.

9. நாடாளுமன்றம் நிறைவேற்றுகின்ற சட்ட முன் வரைவுகளைத் திருப்பி அனுப்பவும், காத்திருப்பில் வைக்கவும் அதிகாரம்.

10. ஒன்றிய பணியாளர் தேர்வு ஆணையம், நிதிக் குழுவின் ஆண்டு அறிக்கைகளை 
நாடாளுமன்றத்தின் முன் வைத்தல்.

11. மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மாநில சட்டமன்றங்களின் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளிப்பது,காத்திருப்பில் வைப்பது.

அதற்கு காலக்கெடு எதுவும் இல்லை

குடியரசுத் தலைவருக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டு இருந்தாலும்,
அவற்றை அவர் தன் விருப்பம் போலச் செயல்படுத்த முடியாது.

பெரும்பாலான அதிகாரங்களை, ஒன்றிய அமைச்சர்கள் அவையின் ஒப்புதல் பெற்ற பிறகுதான்
அவரால் செயல்படுத்த முடியும்.

ஒன்றிய அமைச்சர்கள் அவையின் அறிவுரைப்படியே செயல்பட வேண்டும் என அரசு அமைப்புச் சட்டம், குடியரசுத் தலைவருக்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

பதவி விலகலும் தகுதி நீக்கமும்

குடியரசுத் தலைவர் பொறுப்பு விலக விரும்பினால்,
விலகல் கடிதத்தை குடியரசுத் துணைத் தலைவர் இடம் வழங்க வேண்டும்.

குடியரசுத் தலைவரைத் தகுதி நீக்கம் செய்வதற்கு,
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தேவை.

அருணகிரி
27.07.2022
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...