மொத்தப் பக்கக்காட்சிகள்

சிட்பண்ட்_ஏலச்சீட்டு சேமிப்புக்கு 18% ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு Chit fund gst

#சிட்பண்ட்_ஏலச்சீட்டு சேமிப்புக்கு 18%  ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு:

ஏழை-எளிய சாமானிய மக்களின் சேமிப்பில் கைவைக்கும் வரிவிதிப்பை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்!

எஸ்.டி.பி.ஐ. வர்த்தகர் அணி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணியின் மாநில பொதுச்செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

வங்கிகள், வங்கி சாரா நிதிநிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி., வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு சிட்பண்ட் நிதி நிறுவனங்களுக்கு மட்டும் ஜி.எஸ்.டி., வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு நேரடியாகவே ஏழை-எளிய சாமானிய மக்களின் சேமிப்பில் கைவைக்கிறது.

சாமான்ய, நடுத்தர மக்களிடம் ஏலச்சீட்டு சிட்பண்ட் மூலம் பணம் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் சிட்பண்டு மூலம் ஏழை-எளிய நடுத்தர மக்கள், தொழிலாளர்கள், சேமிப்புகளை மேற்கொண்டு  திருமணம், மருத்துவம் போன்ற அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வது மற்றும் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்றவை காலம் காலமாக இருந்துவரும் சேமிப்பு பழக்கமாகும்.  அதேபோல் சிறு குறு வியாபாரிகள் அன்றாடம் சிட்பண்டுகளின் மூலமாக சேமிக்கும் சேமிப்பைக் கொண்டே தங்களின் வியாபாரங்களை தடங்களின்றி நடத்தி வருகின்றனர்.

இந்த சேமிப்பில் ஏமாற்றத்தை தவிர்க்க பதிவு செய்யப்பட்ட சிட்பண்ட் நிறுவனங்களின் மூலமாக மக்கள் தங்கள் சேமிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய சிட்பண்டுகள் தான் பெரும்பாலான மக்களின் அவசர பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் வாய்ப்பாக உள்ளன. இந்த சூழலில் ஒன்றிய அரசு சிட்பண்ட் நிதி நிறுவனங்களுக்கு 18%  விதித்துள்ள அறிவிப்பால் சிட்பண்ட் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சிட்பண்ட்க்கு 12 சதவீதமாக விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி., யை 5 சதவீதமாக குறைப்பதற்கு கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மேலும் வரி உயர்த்தியுள்ளது ஒன்றிய அரசு.  இந்த கூடுதல் வரிவிதிப்பால் சராசரி மக்களுடைய பொருளாதாரம் மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, சிறு-குறு, மத்திய தர தொழில் செய்வோர், சிறு வியாபாரிகள் என பல்வேறு  தரப்பினரும் பாதிப்படையும் நிலை ஏற்படும். அதோடு இதுபோன்ற வரி உயர்வால் பதிவு செய்யப்படாத சிட்பண்ட் நிறுவனங்கள் உருவாவதற்கும், பொதுமக்கள் அத்தகைய நிறுவனங்களை நாடுவதற்கும், அதன்மூலம் மோசடிகள் நடப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும் சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, ஒன்றிய அரசு நிதி நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகளை சிட்பண்ட் நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும். அதனடிப்படையில் சிட்பண்ட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.,யை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வர்த்தகர் அணி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். #👨மோடி அரசாங்கம்
https://sharechat.com/post/GE6WP3BQ?d=n&~campaign=WAShareExpcontrol&referrer=whatsappShare

ஷேர்சாட்டை பதிவிறக்கம் செய்து 1 லட்சம் வரை வெல்லுங்கள் https://sharechat.com?d=n 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...