மொத்தப் பக்கக்காட்சிகள்

Savings safety சேமிப்பு எனும் தற்பாதுகாப்பு


................................

'''சேமிப்பு எனும் தற்பாதுகாப்பு.''.
...............................

சிறுவயதில் கற்றுக் கொள்ளும் நல்ல பழக்கவழக்கங்கள் பிற்காலத்தில் நலமுடன் வாழவும், பிரச்சனைகளைத் தவிர்க்கவும், மிகவும் உதவிகரமாகவும் இருக்கும். 

அப்படிப்பட்ட சிறப்பான பழக்கவழக்கங்களில் ஒன்று தான் சேமிக்கும் பழக்கம். 

சேமிப்பினைக் குறித்து சிறு வயதில் இருந்து வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் அறிவுறுத்தி ஊக்கப்படுத்தும் நிலை அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது.

''சிறு துரும்பும் பல் குத்த உதவும்" என்பது பழமொழி. சேமிக்கும் சிறிய தொகையும் கூட மாணவர்களின் சிறுசிறு தேவைகளை நிவர்த்தி செய்யும். 

ஏதோ ஒரு ரூபாய் தானே என்று ஆரம்பத்தில் நினைக்கும் மனம், சிறுசேமிப்பு பெட்டி நிரம்பிய உடன் ஆச்சரியம் ஆகிறது. 

காரணம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று சேர்த்த பணம் நூறுகளைக் கடக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் வெளிப்பாடே, சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அவசியமான அவசரத் தேவைகளுக்கு உதவக் கூடியது சேமிப்பு மட்டுமே. 

நாம் உண்ணும் உணவும், பருகும் நீரும் கூட சேமிப்பின் பயனை தெளிவாக உணர்த்தும். 

நாம் உண்ணும் சோறு ஒரே பருக்கையால் ஆனது அல்ல. எண்ணிலடங்கா அரிசிகள் இணைந்து நமக்கு உணவாகி, பசியினை ஆற்றுகிறது. 

சிறு சிறு நீர்த்துளிகள் இணைந்து தாகம் தீர்க்கும் அமிர்தமாக மாறுகிறது. அதுபோன்று தான் சேமிப்பும். 

சிறு சிறு தொகைகள் இணைந்து, சில காலத்திற்குப் பிறகு பயன் தரும் பெரும் தொகையாக நமக்கு உதவுகிறது. 

கிடைக்கும் கால அளவு குறைவாக இருப்பது போன்று தோற்றம் அளிக்கும். நிகழ்கால சூழலில், வீணாக்கும் ஓவ்வொரு நிமிடமும் நட்டமே. 

ஆம்.,நண்பர்களே..

எனவே சேமிப்பு எனும் நல்லதொரு பழக்கத்தை உடனடியாக உள்வாங்கிக் கொள்வோம்.

ஏனெனில் நிகழ்காலம் பொருளாதார நோக்கம் கொண்ட காலமாகவே இருக்கிறது..

நிலையான வாழ்வினை குழப்பம் இன்றி வாழ்வதற்கு நிலையான வருமானம் தேவைப்படுகிறது. 

எதிர்பாராமல் வரும் செலவுகளை எதிர்கொள்வதற்கு ''சேமிப்பு எனும் பாதுகாப்பை'' ஏற்படுத்திக் கொள்வோம்..

*பகிர்வு - தகவல் உலா*
💐💐💐🙏🏻🌺🌺
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...