கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி கொண்டு வந்த முக்கிய திட்டங்களில், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா என்ற இரண்டு காப்பீடு திட்டங்கள் முக்கியமானவை.
வங்கிகள் சேமிப்புக் கணக்கு மூலமாக அமல்படுத்தப்பட்டு வரும் இந்தக் காப்பீடு திட்டங்களில் பல கோடி மக்கள் சேர்ந்துள்ளனர்.
இதில், ஜீவன் ஜோதி திட்டத்துக்கு தினமும் ரூ.1.25 என்ற விகிதத்தில் ஆண்டுக்கு ரூ.330 பிரிமியம் தொகை பெறப்பட்டு வருகிறது. அதேபோல், சுரக்ஷா காப்பீட்டு திட்டத்துக்கு தினமும் ரூ.12 பிரிமியம் தொகை வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்தக் காப்பீட்டு திட்டங்களை நாட்டின் ஒரே பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த பாலிசிகளில் இழப்பீடு அதிகரித்துள்ளதால் இந்த காப்பீடு திட்டங்களுக்கான பிரிமியத்தை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது.
இதன்படி, ஜீவன் ஜோதி திட்டத்துக்கான ஆண்டு பிரிமியம் ரூ.330லிருந்து ரூ.436 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. சுரக்க்ஷா பீமா திட்டத்துக்கான தினசரி பிரிமியம் தொகை ரூ.12ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது, 2022 ஜூன் 20222 முதல் அமலுக்கு வருகிறது..
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக