மொத்தப் பக்கக்காட்சிகள்

ஃபியோ FIEO ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், கமாடிட்டி வாரியம், ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையங்களின் உச்ச அமைப்பு..!

ஃபியோ FIEO ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், கமாடிட்டி வாரியம்,  ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையங்களின் உச்ச அமைப்பு..!

 

ஃபியோ FIEO ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், கமாடிட்டி வாரியம்,  ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையங்களின் உச்ச அமைப்பு..!

 

ஃபியோ (FIEO - Federation of Indian Export Organisationsஎன்பது இந்தியாவில் உள்ள ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்கள், கமாடிட்டி வாரியங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையங்களின் (Export Promotion Councils, Commodity Boards and Export Development Authorities) உச்ச அமைப்பாகும். அனைத்து பொருள்கள் மற்றும் சேவைத் துறைகளைச் சார்ந்த  2,00,000க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களின் நலன்களுக்கு ஃபியோ அமைப்பு சேவை செய்து வருகிறது.

 

ஃபியோ அமைப்பு இந்தியா முழுவதும் 18 அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இணைய தளம் மூலம் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஏற்றுமதியாளர்களுக்குப் பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ் (Registration-cum-Membership Certificate – RCMC)  மற்றும் தோற்றச் சான்றிதழ் சான்றிதழ் (Certificate of Origin) வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது.

 

யார் பதிவு செய்யலாம்?

 

இறக்குமதியாளர் ஏற்றுமதியாளர் உரிமம் (IEC - Importer -Exporter Code) வைத்திருக்கும் வணிகர், உற்பத்தியாளர், வணிகர் மற்றும் உற்பத்தியாளர் / பல சேவைகள் (சேவை வழங்குநர்கள்) ஆகியோர் ஃபியோ அமைப்பில் பதிவு செய்து பயன் அடையலாம். ஃபியோ என்பது வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் (Foreign Trade Policy) கீழ் பலன்களைப் பெற, பல்வேறு பொருள்கள் மற்றும் பல்வேறு சேவைகளின் (Multi-Products & Multi - Services) ஏற்றுமதிக்கு ஒரு பதிவு-சேவை-உறுப்பினர் சான்றிதழை (RCMC) வழங்கும் ஒரே ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (Export Promotion Council - EPC) ஆகும்.

 

ஆர்.சி.எம்.சி (RCMC) பதிவு:

(பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ்)

·         வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் சலுகைகளைப் பெற..

 •  வணிக ஏற்றுமதியாளர்களுக்கு (Merchant Exporters) ஜி.எஸ்.டி - 0.1% உள்ளீட்டு வரிச் சலுகை (Input Tax - Credit)

·         சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் சந்தை அணுகல் சலுகைகளைப் பெறும் வசதி

·        வங்கி உத்தரவாத விலக்கு சான்றிதழ் (ஏற்றுமதி விற்றுமுதல் / ஜி.எஸ்.டி செலுத்தியது)

 

சான்றிதழ்கள் (CERTIFICATIONS)

·        தோற்ற சான்றிதழ் -முன்னுரிமை (APTA மற்றும் SAPTA) மற்றும் முன்னுரிமையற்றது

·         விசா பரிந்துரை கடிதம்

·         சுங்க வரிக்கான சான்றிதழ் - மாதிரிகள் / முன்மாதிரிகள் (Samples / Prototypes)

 

வணிக கூட்டணிகள் (TIE – Ups)

·        இ-பே (e-Bay)

·        ஃபியோகுளோபல் லிங்கர் (இந்திய வணிக போர்ட்டலில் உங்கள் ஆன்லைன் கடையை உருவாக்கவும்)

·        கடன் வசூலுக்காக MAH இன்டர்நேஷனல்

·        பொருள்களை அனுப்பும் வசதிக்காக ARAMEX கூரியர்

·        ஃபாரக்ஸ் சந்தை பகுப்பாய்வுக்காக Myforexeye - FOREX Pulse Weekly E - Bulletin –

·        ஃபியோ உறுப்பினர்களுக்கு அவர்களின் வர்த்தக நிதி தேவைகளுக்குச் சிறந்த தீர்வுகளை வழங்க 360 tf (www.360tf.trade)

·        அமேசான் பன்னாட்டு விற்பனை

·         15% தள்ளுபடியில் இ-காமர்ஸ் இணை தளம் உருவாக்கம் - REBEL CORP

 

உறுப்பினர்களுக்கு கிடைக்கும் பயன்கள்

·        வர்த்தக விசாரணைகள் / வர்த்தக வழிமுறைகளுக்கான அணுகல்

·        ஒவ்வொரு புதன்கிழமையும் பிற்பகல் 3.00 மணிக்கு டிஜி & சிஇஓ டாக்டர் அஜய் சஹாயுடன் வீடியோ கான்பரன்ஸ்

·        ஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது

·         உறுப்பினர்களுக்கு விருதுகள்

·        வெளிநாட்டு  இறக்குமதியாளர்களால் பார்க்கப்படுவதற்கான சலுகை (உங்கள் நிறுவனத்தின் வணிக சின்னம் (logo), நிறுவனத்தின் சுயவிவரம்உற்பத்தி பொருள்களின் படங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றவும்)

·        ஏற்றுமதியாளர்கள் இணையதளத்தில் ஃபியோ லோகோவைப் பதிவேற்றுவதற்கான சிறப்புரிமை

·        ஃபியோ மாத செய்திகள்

·        மாதாந்திர SPS TBT ஃபோகஸ் & TBT ஃபோகஸ்

·        வாராந்திர வர்த்தக புதிய விவரங்கள்

·        குறுஞ்செய்திகள் (SMS) & அறிக்கைகள் மூலம் அந்நிய செலாவணி புதுத் தகவல்கள்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...