மொத்தப் பக்கக்காட்சிகள்

முயற்சிப்பதா அல்லது இயல்பாயிருப்பதா? ஏ. சுந்தரராஜன்

முயற்சிப்பதா அல்லது இயல்பாயிருப்பதா?*
 
நான்  வாழ்க்கையை வாழும்போது 

அதில் மிகவும் ஈடுபட்டு 

அதை அனுபவிப்பதால் பல சமயங்களில் தன்னுணர்வின்றி இருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன் 

தன்னுணர்வோடு இருப்பதற்கு எனக்கு தீவிரமான முயற்சி தேவைப்படுகிறது என்றாலும்கூட 

நான் ஒவ்வொரு கணமும் முயற்சி செய்து தன்னுணர்வை கொண்டுவர வேண்டுமா...??? 

மக்கள் பல வழிகளில் பல விதமாக இருக்கின்றனர்  

இரண்டு பேர் ஒரே விதமாக இருக்க உறுதியாக வாய்ப்பே இல்லை

உனக்கு பொருந்தாத ஏதோ ஒன்றை நீ செய்ய ஆரம்பிக்கும் போதுதான் பிரச்னையே 

ஒரு சிறிய நிபந்தனையை நினைவில் கொள்ள வேண்டும்  

எது உனக்கு நல்ல உணர்வை தருகிறதோ 

தன்னிச்சையாக அமைதியை, ஆனந்தத்தை தானாகவே அளிக்கிறதோ ௭

அதுவே உனது வழி 

ஆனால் 

யார் தன்னிச்சையாக இல்லையோ

யாருக்கு தளர்வடைவது மிகவும் கடினமான செயலோ

யாருக்கு எதுவும் செய்யாமல் சும்மாவே உட்கார்ந்திருப்பது சாத்தியமில்லாததோ

அவர்களுக்காகவும் நான் பேசியாக வேண்டும் 

அவர்களுக்குத்தான் நான், முழுமையான தீவிரத்தோடு வாழு

முழு முயற்சியோடு இரு என்று சொல்கிறேன்

ஏனெனில் 

அதுதான் அவர்களுக்கு சுலபம்  

யாருக்கு எது சுலபமோ அதுதான் அவர்களை உண்மைக்கு அருகே கொண்டு வரும் 

உன்னைப் பொறுத்தவரை

அது சுலபமான விஷயமல்ல

நீ உனக்கு எதிராகவே பெருமுயற்சி செய்ய வேண்டும்  

ஆனால் 

அப்படி செய்வது நீ ஏற்கனவே உணர்ந்திருக்கும் அமைதி மற்றும் மௌனத்தின் முழு அழகையும் கெடுத்து விடும் 

நீ தன்னிச்சையாக இருப்பதன் மூலமாக

தளர்வாக இருப்பதன் மூலமாக  

இயல்பாக இருப்பதன் மூலமாக 

அமைதியையும், மௌனத்தையும், சக்தியையும் உணர்ந்தால் 

அப்போது அதுதான் உனது வழி

ஒவ்வொருவரும் தங்களது இதயத்துக்கு நெருங்கியது எது என்பதை அவர்களேதான் கண்டுபிடிக்க வேண்டும்

எது உனக்கு சரியானது என்பதை நீதான் கண்டுபிடித்து  கொள்ளவேண்டும் 

ஆகவே 

எதனுடன் உனது இதயம் லேசானதாக உணர்ந்தாலும் 

அதன் அடி ஆழம் வரை செல்  

அதனுடன் செல்

அது என்னவென்று உணர்ந்து கொள்

பிறகு திரும்பி பார்க்காதே  

மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே 🍂

Bitter memories
How to come out?
தற்சோதனை பதிவு.

நம் எல்லோருக்குமே கசப்பான அனுபவங்கள் உண்டு. மன ரீதியான பாதிப்பு 
தொழிலிலே, உறவிலோ,
குடும்பத்திலோ நிச்சயம் உண்டு.

அதனால் ஏற்படும் மனக்காயம்
ஆறாத ரணமாக இருந்து நம்மை
சிந்திக்க விடாமல் செய்யும். 
முன்னேற்றத்தை கூட தடுக்கும்.

இதை நாம் அனுமதிக்கவே கூடாது. மன அமைதி மிகவும் முக்கியம். உணர்ச்சிரீதியாக உங்களுக்கு இடையூறு விளைவிக்கும் எல்லாவற்றிலிருந்தும் நம்மை விடுவித்துக் கொண்டே ஆக வேண்டும் மன அமைதிக்காக.

தங்கள் அறியாமையாலும், பக்குவமின்மையாலும் மக்கள் நம்மை காயப்படுத்துகின்றனர். நம் சொந்த அறியாமையாலும் பக்குவமின்மையாலும் நாம் காயப்படுத்த அனுமதிக்கிறோம்.

பலன் தூக்கமற்ற இரவுகள், BP, அல்சர், நிம்மதியற்ற மனநிலை. யாருக்கு என்ன பிரயோசனம்?

நம்மை மனக்காயப்படுத்துவர்கள் ஒரு முறைதான் செயல்படுகிறார்கள். ஆனால் நாம் நம் மனதிற்குள் எண்ணற்ற முறை Rewindசெய்து நம்மை ஆழமாக காயப்படுத்தி கொள்கிறோம். தேவையா???

யாராக இருந்தாலும் சரி எந்த வேண்டாத எண்ணமாக இருந்தாலும் சரி,,
Dont invite and serve Tea at your cabin

உங்கள் நலம் விரும்பிகளுக்கு மட்டும் மனதில் இடம் கொடுங்கள். மீதி அனைத்தையும் துறந்தே ஆக வேண்டும். எப்படி?

இங்கு தான் ஞானிகளின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
தவமும் தற்சோதனையும்.

இங்கு நாம்தான் முனைப்போடு மனதிலிருந்து தேவையில்லாத களைகளை அறுவடை செய்ய வேண்டும். துறந்து விடு தேவையற்ற எண்ணங்களை,, அது நம் முயற்சியில்தான் உள்ளது.

இதில் வெற்றி பெறாவிட்டால், வாழ்வே சுமையாகிவிடும்.

*Let us complete the missions successfully and* *lead a peaceful and* *wonderful life,,,* 

*🍁வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க அனைத்து உயிரினங்களும்
 ஏ.சுந்தரராஜன் 
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...