மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆடு, மாட்டு கொட்டகை அமைக்க ரூ.1 லட்சத்திற்கு மேல் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி? Self

ஆடு, மாட்டு கொட்டகை அமைக்க ரூ.1 லட்சத்திற்கு மேல் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் (The Mahatma Gandhi National Rural Employment Guarantee Act )கீழ் ஏழை எளிய மக்களுக்கு ஆடு மாடு கொட்டகை கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளால் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் த்திட்டமானது 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
தகுதிகள்
பயனாளிகள் கண்டிப்பாக நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்திருக்கவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் குறைந்தது 10ஆடுகள் அல்லது 2 மாடு இருக்க வேண்டும்.
கொட்டகைக் கட்டுவதற்கான நிலம் பயனாளிகளின் பெயரில் இருக்க வேண்டும்.
தேவைப்படும் ஆவணங்கள்
ஆதார் அட்டை
ரேஷன் கார்டு
வாக்காளர் அடையாள அட்டை
ஆகியவற்றை இந்த விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் பகுதி கால்நடை மருத்துவரிடம் அல்லது ஊராட்சி செயலாளரிடம் தொடர்பு கொண்டு, இந்த திட்டத்தினைப் பற்றியக் கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.
மானியம் எவ்வளவு?
2 மாடுகள் வைத்திருந்தால் ரூ.53,425 வழங்கப்படும்
5 மாடுகள் வைத்திருந்தால் ரூ. 81,580 வழங்கப்படும்
10ஆடுகள் வைத்திருந்தால் ரூ.1லட்சத்து 2135 வழங்கப்படும்
20ஆடுகள் எனில் 1லட்சத்து 40,520ரூபாய் வழங்கப்படும்
மேலும் தகவல்கள் பெற கீழ்கண்ட இணைப்பை தொடரவும்.
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...