உலக சிரிப்பு தினம்.
*━━━━━━━━》❈《 ━━━━━━━*
உலக சிரிப்பு நாள்*
(World Laughter Day)
மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும்..
இத்தினம் முதல் முதலாக சனவரி 10, 1988 இல் கொண்டாடப் பட்டது. இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார். இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் 'லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
*தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள்*
(Labour Day அல்லது Labor Day)
என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன..
*╔•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╗*
*_நிகழ்வுகள்_*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉⊱• •═•╝*
305 – தியோக்கிளேத்தியனும், மாக்சிமியனும் உரோமைப் பேரரசர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
524 – பர்கண்டி (இன்றைய போலந்து) மன்னர் சிகிசுமண்டு 8-ஆண்டு ஆட்சியின் பின்னர் தூக்கிலிடப்பட்டார். அவரது சகோதரர் கொதோமார் ஆட்சியில் அமர்ந்தார்.
1169 – நோர்மானியக் கூலிப்படைகள் அயர்லாந்தில் பானொவ் விரிகுடாவில் தரையிறங்கியதுடன், அயர்லாந்தில் நோர்மானியரின் படையெடுப்பு ஆரம்பமானது.
1328 – இசுக்கொட்லாந்தைத் தனிநாடாக இங்கிலாந்து அங்கீகரித்தது. இசுக்கொட்லாந்து விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1576 – திரான்சில்வேனியா இளவரசர் இசுட்டீவன் பாத்தரி, அன்னா ஜாகியலனைத் திருமணம் புரிந்தார். இருவரும் போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தின் இனை ஆட்சியாளர்களாயினர்.
1707 – இங்கிலாந்தும், இசுக்கொட்லாந்தும் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்கும் ஒன்றிணைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
1753 – தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையினால் தாவர வகைப்பாட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.
1776 – இல்லுமினாட்டி குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.
1778 – அமெரிக்கப் புரட்சி: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.
1794 – பிரெஞ்சுப் படையினர் எசுப்பானியரைத் தோற்கடித்து, 1793 இல் தாம் இழந்த அனைத்துப் பகுதிகளையும் கைப்பற்றினர்.
1834 – பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் அடிமைத் தொழிலை நிறுத்தின.
1840 – உலகின் முதலாவது அதிகாரபூர்வ ஒட்டக்கூடிய தபால்தலை, பென்னி பிளாக் ஐக்கிய இராச்சியத்தில் வெளியிடப்பட்டது.
1844 – ஆசியாவின் முதலாவது நவீன காவல்துறை ஹொங்கொங் காவல் துறை அமைக்கப்பட்டது.
1851 – லண்டனில் பளிங்கு அரண்மனையில் பெரும் கண்காட்சி விக்டோரியா மகாராணியினால் திறந்து வைக்கப்பட்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க கூட்டு இராணுவம் நியூ ஓர்லென்சைக் கைப்பற்றியது.
1865 – பிரேசில் பேரரசு, அர்கெந்தீனா, உருகுவை ஆகிய நாடுகள் முத்தரப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
1866 – அமெரிக்காவில் மெம்பிசு இனக்கலவரம் ஆரம்பமானது. மூன்று நாட்களில் 46 கறுப்பர்களும், இரண்டு வெள்ளையினத்தவரும் கொல்லப்பட்டனர்.
1875 – 1873 இல் எரிந்து அழிந்த இலண்டன் அலெக்சாந்திரா அரண்மனை மீண்டும் அமைக்கப்பட்டது.
1884 – ஐக்கிய அமெரிக்காவில் எட்டு-மணிநேர வேலை நாள் வேண்டி பொது அறிவிப்பு வெளியானது.
1886 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக