உலக புகையிலை ஒழிப்பு தினம்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில்,
புகையிலையின் தீமைகளை விளக்கும் "மணல் சிற்பம்" உருவாக்கப்பட உள்ளது.
புகையிலைப் பழக்கத்திலிருந்து வெளியே வர உதவக்கூடிய மொபைல் அப்ளிகேஷனும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஆண்களுக்கு வரும் புற்றுநோய்க்கு 43 சதவீதமும் பெண்களுக்கு புற்றுநோய்களை உருவாக்குவதில் 16 சதவீதமும் புகையிலை பயன்பாடுதான் காரணம் என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
மேலும், புகையிலைப் பொருட்கள் தயாரிப்பதற்காக 6 கோடி மரங்கள் ஆண்டு தோறும் வெட்டி வீழ்த்தப் படுகின்றன. ஏராளமான தண்ணீர் விரயமாகிறது. சுற்றுச்சூழலை கெடுப்பதில் புகையிலைப் பொருட்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
மனித குலத்திற்கும் இயற்கைக்கும் தீங்கு தரும் புகையிலை.
- சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
(தொடர்புக்கு பேராசிரியர் V. சுரேந்திரன்.
ஆர்.சதீஷ்(8148760887).
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக