*காவல் நிலையங்களில் இரவில் விசாரிக்கக் கூடாது - டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு*
காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் கைதிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அனைத்து மாவட்ட காவல் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
விசாரணை கைதிகளை இரவு நேரங்களில் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கூடாது. வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களிடம் (Night custody) எனப்படும் இரவு விசாரணை நடத்தக்கூடாது. கைது செய்யப்பட்டவர்களை மாலை 6-மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையிலும், திருவண்ணாமலையிலும் விசாரணை கைதி மரணம் அடைந்த விவகாரத்தை தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக