மொத்தப் பக்கக்காட்சிகள்

Air வீட்டிற்கு காற்றோட்டம் மிக முக்கியம் - பயணம் அருணகிரி சங்கரன்கோவில்

இன்று காலை நடையில் இரண்டு பெண்கள் பேசிக்கொண்டு நடந்தார்கள். 

நான் வீடு மாறி மூன்று மாதங்கள் ஆகின்றன. நல்ல காற்று வருகின்றது. இப்போதுதான் மூச்சு விடுகின்றேன். 
அதனாலேயே எனக்கு பாதி கவலைகள் குறைந்து விட்டது என்றார் ஒரு பெண். 

அதைத்தான் நான் வலியுறுத்துகின்றேன். காற்று நுழைய முடியாத சந்து பொந்துகளில் வாழ்வது கேடு கெட்ட வாழ்க்கை என்கிறேன். ங

நீங்கள் வாழ்வது ஒருமுறை...ஓரளவு நல்ல வீட்டில் வாழுங்கள். 
அடுத்த ஓராண்டுக்குள் வீடு மாறுங்கள்.
உங்கள் பழைய வீட்டை விற்று, கடன்களை அடைத்துவிட்டுப் புதிய வீடு வாங்குங்கள்.

2. இன்று காலை நடையில், 
முதலில் ஒரு தம்பியுடன் பேசினேன். 

அரும்பாக்கம் வைணவக் கல்லூரியில் பி.ஏ. முடித்து விட்டு, எம்பிஏ படிக்கப் போவதாகச் சொன்னார். 
அவருக்கு வயது 20 தான். 
ஆனால், உடல் இரண்டு மடங்கு பருத்து விட்டது. 
நடக்க முடியவில்லை. 

தம்பி, எப்படியாவது உடல் எடையைப் பாதியாகக் குறையுங்கள். 
இதுவரை சாப்பிட்ட உணவில், 
இன்று முதல் கால் பங்கு குறைத்து விடுங்கள். 
பசி எடுத்தால் சாப்பிடுங்கள். 

உங்கள் தந்தை அரசு ஊழியர். 
எனவே, வங்கிக் கடன் கிடைக்கும். 
கனடா அல்லது ஏதேனும் அயல்நாட்டில் எம்பிஏ படியுங்கள் என்றேன். 

அடுத்து ஒரு தம்பி....
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்காரர். 
ஸ்கை வாக் அங்காடிக்கு அருகில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் பணிபுரிகின்றார். 
நர்சிங் அல்ல.....Physician Assistat என 
அதற்காகவே ஒரு படிப்பு இருப்பதாகச் சொன்னார். 

தம்பி, மருத்துவத் துறையில் உலகம் முழுமையும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. 
நீங்கள் அயல்நாட்டில் குடியேறுங்கள். 
எந்த நாட்டுப் பெண்ணைத் திரும்ணம் செய்யப் போகின்றீர்கள்? என்று கேட்டேன். 

நான் தமிழ்நாட்டுப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்றார். 

சாதி, மதங்களை ஒழிக்க வேண்டும் என்றால், உங்களைப் போன்ற இளைஞர்கள், 
சீன ஜப்பானிய ஆப்பிரிக்க ஐரோப்பியப் பெண்களைத் திருமணம் செய்ய வேண்டும் என்றேன். 

3. Hi anna,
நமது முகநூல் நட்பு சீனிவாசன் இராஜாராம், இங்கிலாந்து நாட்டில் கார்ன்வால் பகுதியில் எடுத்த படங்களை, 
நேற்று பகிர்ந்து இருந்தேன். 
அதற்கு அவர் நன்றி கூறி இருக்கின்றார். 
கழுகுமலை அருகில் துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர். 

ஆனால் தமிங்கில மொழியில் எழுதி இருக்கின்றார். 

உங்கள் அலைபேசியில் 
gboard பதிவு இறக்கம் செய்யுங்கள். 
அதில் தமிழ் மொழியைத் தேர்வு செய்யுங்கள்
முகநூல், வாட்ஸ் அப் வலது புறத்தில் ஒரு ஒலிபெருக்கி படம் தெரியும்.
அதைத் தொடுங்கள். வணக்கம் என்று சொல்லுங்கள். 
அது அப்படியே எழுத்தாக மாறும். உஙகள் கருத்துகளைப் பேசுங்கள். 
பதிவு செய்தபிறகு சரி பாருங்கள். பிழைகள் இருக்கும். அதை எடிட் செய்து திருத்துங்கள். அவ்வளவுதான். 

இந்த வேலையை இப்போதே செய்யுங்கள். 
ஊர் சுற்றுங்கள் உங்கள் வாழ்க்கையைப் பதிவு செய்யுங்கள். 

அருணகிரி
9444 39 39 03
2 மே 2022
FB Arunagiri Sankarankovil
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி BIS

தரம் மற்றும் பாதுகாப்பிற்காக நீங்கள் செல்ல வேண்டிய செயலி 8 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் மற்றும் வளர்ச்சி. நீங்கள் பதிவிறக்கம் செய்...