கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டி -2022 பரிசு வழங்குதல், தேர்வு செய்யப்பட்ட கவிதைகள் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.
*
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப் போட்டி -2022 யில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் நூல் வெளியீடு ஆகியவை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களுடைய நினைவு நாளான ஜூன் இரண்டாம் தேதி சென்னை ரஷ்யன் கல்ச்சுரல் சென்டர் அரங்கில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிற விழாவில் நிகழ உள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்
கவிஞர் #கனிமொழி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டியில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்குகிறார்.
பரிசு பெற்ற கவிதைகளை நூலாகவும் விழாவில் வெளியிடப்படுகிறது.
விழாவிற்குத் தலைமை ஏற்று 'கவிக்கோவும் ஹைக்கூவும்' என்ற பொருண்மையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் விழாப் பேருரை ஆற்றுகிறார்.
இயக்குனர் என்.லிங்குசாமி கவிக்கோ ஹைக்கூ போட்டியின் நோக்க உரையை ஆற்றுகிறார்.
கவிஞர் ஜெயபாஸ்கரன், கவிஞர் விவேகா, பேராசிரியர் முனைவர் இராம. குருநாதன், கவிதை ஆர்வலர் விஷ்ணு அசோசியேட் ஆர். சிவக்குமார் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
நான் வரவேற்புரை ஆற்ற நூலை வெளியிடும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் நன்றி உரையாற்றுகிறார்.
ஒரு லட்ச ரூபாய் பரிசோடு இந்த கவிக்கோ நினைவுக் கவிதை போட்டி இவ்வாண்டு முதல் தொடர்ந்து நடத்தப்படும் என்று இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளனர்.
கவிக்கோவின் புகழ் தமிழ்நாடு தாண்டி உலகெங்கும் பரவும் வகை செய்வோம்.
தமிழ் ஹைக்கூ வளர்ச்சிக்கு இவ்விழா ஒரு ஊக்கத்தை அளித்து தமிழ் ஹைக்கூ சாலையில் ஒரு மைல் கல்லாக விளங்கும் என்று நான் நம்புகிறேன்.
ஹைக்கூ கவிஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் விழாவில் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்படையச் செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
*
பிருந்தா சாரதி.
*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக