மொத்தப் பக்கக்காட்சிகள்

அடால்ப் ஹிட்லர் நினைவு தினம் இன்று!

உன்னால் முடியும் குழுமம்

அடால்ப் ஹிட்லர் நினைவு தினம் இன்று!
ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டபோது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டு விட்டன

'இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!' என்று கூறி உலகத்தை தனது சர்வாதிகாரத்தால் ஆண்ட அடால்ப் ஹிட்லரின் நினைவு தினம் இன்று.

♦ சிறையில் இருந்தபோது 'எனது போராட்டம்' என்ற பெயரில் தன் சுயசரிதையை எழுதினார். இதில், உலகை வழி நடத்த தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டுமே என்று எழுதினார் ஹிட்லர்.

♦ 1928இல் நடந்த தேர்தலில் ஹிட்லரின் கட்சி தோல்வியடைந்தது. ஆனால், ஹிட்லர் சோர்ந்து போய்விடவில்லை.

♦ தன்னுடைய கட்சியின் பெயரை 'நாசி கட்சி' என்று பெயர் மாற்றி, நாடு முழுவதும் தீவிரவாதத்தில் ஈடுபட்டார். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் புரட்சிக்கு வழி வகுத்தார்.

♦ ஜனாதிபதியாக இருந்த ஹில்டன் பேர்க் மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார். 1933 ஜனவரி 30ஆம் தேதி ஹிட்லரை பிரதமராக நியமித்தார்.

♦ பிரதமராக இவர் பதவி ஏற்ற ஒன்றரை வருடத்தில் ஜனாதிபதி ஹில்டன் பேர்க் மரணமடைந்தார். ஜனாதிபதி பதவியையும் கைப்பற்றிக்கொண்டு ஜெர்மனின் சர்வாதிகாரியாக மாறினார்.

♦ ஹிட்லரின் தவறுகளால், அவரை பற்றிய நினைவுகள் உலக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டபோது, அவரின் சாதனைகளும் கூடவே மறக்கப்பட்டு விட்டன.

♦ 'விபச்சாரம் பிளேக் நோய் போன்றது. சிறிதும் தயவு காட்டாமல் அது அழிக்கப்பட வேண்டும். சமுதாயத்தின் அழுகிப்போன பகுதிகளை நாம் சுத்தப்படுத்த வேண்டும். எதிலும் ஆபாசம் இருக்க, நான் அனுமதிக்க மாட்டேன்' என்று எச்சரித்தவர்.

♦ ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவானது இவரது காலத்தில்தான்.

♦ ஜெர்மனியில் ஓடிய நதிகள் அத்தனையும் படு சுத்தமாக இருந்ததற்கு காரணம் என்னவெனில் மாசு அடையக்கூடாது என்று அவர் கொண்டு வந்த சட்டம்தான்.
 
♦ ஹிட்லரின் ஆட்சிக்காலம் பன்னிரண்டு ஆண்டுகள். அதில் அவரின் முதல் ஐந்தாண்டு கால சாதனைகள் மகத்தானவை.

♦ சாப்ளினின் முதல் பேசும் படம் 'தி கிரேட் டிக்டேட்டர்'. அதில் ஹிட்லராகவும் யூத இனத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளியாகவும் இரண்டு வேடங்களில் நடித்து சாப்ளின் நம்மை வயிறு குலுங்க சிரிக்கவைப்பார்.

♦ ஒருமுறை காந்தி தனது நண்பருக்கு, மடல் எழுதுகிறார். அந்த மடலில்... 'அன்பு தோழனே போரிட வேண்டாம், போரை நிறுத்திவிடு' என கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். அந்த நண்பன் வேறு யாருமில்லை... ஹிட்லர் தான்!
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...