இன்றைய தலைமுறையினரின் போக்கு.....
*2K KIDS க்கு -- 20ம் நூற்றாண்டின் குழந்தைகளுக்கு*
பிடித்த பேச்சாளர் - சீமான்
பிடித்த இயக்குநர் - அட்லீ
*பிடித்த சாப்பாடு - புரோட்டா& நூடுல்ஸ்*
பிடித்த இசையமைப்பாளர் - அனிருத்
*பிடித்த விளையாட்டு - பப்ஜி, ப்ளூ வேல்*
*பிடித்த வரலாற்றுப் புத்தகம் - வாட்ஸ்அப்*
*பிடித்த சொல் - மொக்கை*
*பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன்*
*படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.*
*கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்...*
*யாருக்குமே மரியாதை தரக்கூடாது..*
*தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை...*
*எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்...*
*விழுமியங்களே தேவையில்லை, சாதி, மதம்தான் எல்லாம்...*
*சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்..*
*பெண்கள் மீது மரியாதையே இல்லை..*
*ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி...*
*சினிமா பாடல் வரிகளைக் கூட சொந்த ரசனையோடு சொல்லத் தெரியாது..*
*வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை..*
*ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது..*
*ஒரு வரி கூட வாசிப்பதில்லை..*
*தப்பில்லாமல் தமிழோ, ஆங்கிலமோ எழுதவும், பேசவும் வராது...*
*ஒரு விஷயத்தை கோர்வையாகச் சொல்ல வராது..*
*பிரபலங்கள் வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந் தாலும் அதையும் சுயமி selfee எடுத்து முகநூலில் போட வேண்டும்..*
*பள்ளிச் சீருடையுடன் கூட டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்..*
*சின்ன வயசிலேயே வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை..*
*எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை..*
*எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்..*
*ஜட்டி தெரிய பேண்ட் போட்டு, காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி, எவரையும் கண்களைப் பார்த்து பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது....*
*இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை..*
*பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவுதான் தெரியும்..*
*பெற்றோர்கள் சுத்தம்;*
*அவர்களின் அளவுக்கு மீறிய செல்லம்தான் சகலத்துக்கும் காரணம்..*
*தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்...*
*வீட்டில் அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்....*
*இவர்கள் உள்ளுக்குள்* *வேறொரு உருவமாய்*
*வளர்ந்து கொண்டிருக் கிறார்கள்..*
*பள்ளியில் படிக்கிற போது அவன் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவ தில்லை..*
*கடந்த ஐந்தாண்டுகளில் கல்லூரி மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்..*
*தான் பார்க்கும் பெண்ணோ ஆனோ தான் தன் எதிர்கால துணை என இருபாலருமே முடிவெடுத்துக் கொண்டு பெற்றோருக்கும் உற்றோருக்கும் தெரியாமலேயே தங்கள் உறவை வளர்த்துக் கொண்டு உடம்பையும் உள்ளத்தையும் இழக்கிறார்கள்.*
*நான் 80, 90 s kid களுக்கும் வகுப்பெடுத்திருக்கிறேன்...*
*இவர்களுக்கும் அந்த இரு தலைமுறையினருக்கும் மலையளவு வித்தியாசம்..*
*மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று என்ன வேண்டாம்.* *இது இருபாலருக்கும் பொருந்தும்.*
*நான் பேசுவது பொதுவான மனநிலை குறித்த பார்வையில்தான்..*
*விதிவிலக்கு களை அல்ல..*
*பல பெற்றோர்கள் தம் பிள்ளைகள் அந்த விதிவிலக்குகளில் தம் பிள்ளையும் ஒரு ஆள் என்று பொய்யாக நம்பிக் கொண்டிருக்கின்றனர்.*
*காலம் காலமாக மூத்தோர் இளையோர் மீது வைக்கிற குற்றச்சாட்டாக இதை எண்ணி விடாதீர்கள்*.
*எனக்கு இரண்டுக்கும் வேறுபாடு தெரியும்.*
*சமீபமாக வகுப்பறைகளில் ரசித்த சினிமா பாடல்களின் வரிகளையாவது சொல்லுங்க என்று கேட்டு அதற்குக் கூட பதில் வராமல் ஏமாந்து கொண்டிருக்கி றேன்*.
*ஐந்தாண்டு களுக்கு முன்பெல்லாம் இப்படிக் கேட்டால் மாணவர்கள் அசத்தி விடுவார்கள்.* *காரணம் யாராக, எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்*.
*ஆனால் யதார்த்தம் இதுதான்.*
*காதுகளே இல்லாத தலைமுறையிடம் நாம் பழைய சொற்களோடு தோற்றுக் கொண்டிருக் கிறோம்*
*கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களில்* *இப்படி ஒரு ரசனை கெட்ட,*
*சுய சிந்தனையற்ற*, *சோம்பலும் அலட்சியமும் கொண்ட* *தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை*.
*எதிர்கால வரலாறு இந்தத் தலைமுறையைக் காறி உமிழும்.*
*மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை.*
*😒பயமாக இருக்கிறது...*
*இன்றைய தலைமுறையின் போக்கு.....*
-சமூக அக்கறையுள்ள ஆசிரியராய்
😤😎😤😎😤😎😤😎😤
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக