_வாழ்கையின் பாதை
*40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்*_
_*(குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).*_
_*50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.*_
_*(எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).*_
_*60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.*_
_*(ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).*_
_*70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்*_
_*(மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).*_
_*80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.*_
_*(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).*_
_*90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்*_
_*(ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).*_
_*100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்*_
_*(நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).*_
_*அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..*_
_*என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டு விடுவோம்.*_
_*மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது...*_
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக