மொத்தப் பக்கக்காட்சிகள்

சுபகிருது புத்தாண்டே சுபமாய் மலர்கவே!

*அ* ல்லல்கள் அகன்று
    *அ* மிழ்தென வாழ்வினிக்க,
*ஆ* ணவங்கள் விலகி
    *ஆ* னந்தம் மிளிர,
*இ* ல்லாமைகள் இல்லாமல்
    *இ* ல்லங்கள் சிறக்க,
*ஈ* னங்கள் மறைந்து
    *ஈ* கைக் குணம் உயர,
*உ* ற்ற பகை விடுத்து
    *உ* றவுகள் உயர்ந்திட,
*ஊ* னங்கள் நீங்கி
    *ஊ* ரெல்லாம் செழிக்க,
*எ* திரிகளே இல்லாமல்
    *எ* ல்லோரும் இன்புற,
*ஏ* மாற்றங்கள் நீங்கி
    *ஏ* ற்றங்கள் நிறைய,
*ஐ* யங்கள் தெளிந்து
    *ஐ* க்கியம் வளர,
*ஒ* ற்றுச்சதிகள் ஒழிந்து
    *ஒ* ற்றுமை உயர,
*ஓ* லக்குரல் அமிழ்ந்து
      *ஓ* ரினமாய் இணைய,
*ஔ* வியம் பேசாமல்
    *ஔ* வை நெறி வாழ்ந்திட,

சுபகிருது புத்தாண்டே
     சுபமாய் மலர்கவே!
அபயம் அருளும் 
    இறைவன் கருணையாய்,
இயற்கை வழங்கும்
    வளங்களின் வாழ்த்துகளாய்,
புத்தாண்டே நீ வருவாய்!
    புதுமைகள் தருவாய்!
நல்லாண்டாய் மலர்ந்து
    நன்மையெலாம் அருள்வாயே!!

இனிய தமிழ் புத்தாண்டில்
இதயம் நிறைந்த வாழ்த்துகள்!!
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024

  முகமது அலி , தலைவர் – கிரெடாய் , சென்னை   சென்னை குடியிருப்பு வீடு ரியல் எஸ்டேட் சந்தை 2024     நடப்பு ஆண்டின் து...