மொத்தப் பக்கக்காட்சிகள்

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் புதிய பங்கு வெளியீடு மார்ச் 29, 2022 அன்று தொடக்கம்

வெராண்டா  லேர்னிங்  சொல்யூஷன்ஸ் லிமிடெட்:  பொது மக்களுக்கான புதிய பங்கு வெளியீடு மார்ச் 29, 2022 அன்று தொடக்கம்


ரூ. 10 முக மதிப்பு கொண்ட வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சம பங்கு ஒன்றின் பங்கு விலைப்பட்டை  ரூ. 130 முதல் ரூ. 137  ஆகும்.
பங்கு வெளியீடு மார்ச் 29, 2022 செய்வாய் கிழமை தொடங்குகிறது. மார்ச் 31, 2022 வியாழக் கிழமை நிறைவு பெறுகிறது.
குறைந்தபட்சம் 100 பங்குகளுக்கு ஏலம் கேட்க வேண்டும். அதன் பிறகு 100-ன் மடங்குகளில் ஏலம் கேட்கலாம்.

 


மும்பை மார்ச், 24, 2022:  வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (Veranda Learning Solutions Limited - Company” or the “Issuer”),  பொது மக்களுக்கான புதிய பங்கு வெளியீட்டை (Initial Public Offering -the “Offer”) மேற்கொள்கிறது. இந்தப் பங்கு வெளியீடு மார்ச் 29, 2022 அன்று தொடங்குகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான ஏலம் ( Anchor Investor Bidding) மார்ச் 28, 2022 அன்று நடக்கிறது. ரூ. 10 முக மதிப்பு கொண்ட சம பங்கு ஒன்றின் பங்கு விலைப்பட்டை  ரூ. 130 முதல் ரூ. 137  என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 100 பங்குகளுக்கு ஏலம் கேட்க வேண்டும். அதன் பிறகு 100-ன் மடங்குகளில் ஏலம் கேட்கலாம். ரூ. 10 முக மதிப்பு கொண்ட சம பங்குகள் ("Equity Shares"), மொத்தம் ரூ. 2,000 மில்லியன் மதிப்புக்கு வெளியிடப்படுகிறது.

 

கடந்த 1957 ஆம் ஆண்டின், பத்திரங்கள் ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிமுறைகள் (Securities Contracts (Regulation) 19(2)(b)-ன் படி செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, திருத்தப்பட்ட விதிமுறை 31 (“SCRR”), செபி (Issue of Capital and Disclosure Requirements) விதிமுறைகள் 2018 படி (“SEBI ICDR Regulations”) இந்தப் புதிய பங்கு வெளியீடு நடக்கிறது.  செபி ஐ.சி.டி.ஆர் விதிமுறைகள், விதிமுறை 6(1)-ன் கீழ் ,ஏல முறையில் (Book Building Process) பங்கு விற்பனை நடைபெறுகிறது. நிகர பங்கு விற்பனையில்  75 சதவிகிதத்துக்கு மேற்படாமல் தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு  (“QIBs”, the “QIB Portion”), நிறுவனம் மற்றும் பங்கு விற்பனையாளர்  ஒதுக்க வேண்டும். இதில், 60% விருப்பத்தின் அடிப்படையில் பெரிய முதலீட்டாளர்களுக்கு (“Anchor Investor Portion”), செபி அமைப்பின் ஐ.சி.டி.ஆர் விதிமுறைகளின்படி ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மூன்றில் ஒரு பங்கு,  பங்குகள் ஆங்கர் முதலீட்டாளர்கள் ஏலம் கேட்டுள்ள விலை அல்லது அதை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில்  அவை உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், நிகர கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில்  ("Net QIBPortion") 5% பங்குகள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும். மீதமுள்ள கியூ.ஐ.பி ஒதுக்கீட்டில் உள்ள பங்குகள் விகிதாச்சார அடிப்படையில், செல்லத்தக்க ஏலங்கள் வெளியீட்டு விலையில் அல்லது அதற்கு மேலாக கேட்கப்பட்டிருக்கும்பட்சத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளிட்ட கியூ.ஐ.பி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும். 

மேலும், மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத (Non-Institutional) முதலீட்டாளர்களுக்கும், 10 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு தனிநபர் ஏலத்தாரர்களுக்கும் (RIBs) செபி அமைப்பின் ஐ.சி.டி.ஆர் விதிமுறைகளின்படி பங்குகள் ஒதுக்கப்படும். பங்கு வெளியீட்டு விலை (Issue Price) அல்லது அதற்கு அதிகமான விலையில் கேட்கப்பட்டால் செபி அமைப்பின் விதிமுறைகள் படி இப்படி பங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து தகுதியுள்ள முதலீட்டாளர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) அனைவரும் அஸ்பா  (“ASBA” - Applications Supported by Blocked Amount) முறையில் மற்றும் ஆர்.ஐ.பி –ன் யூ.பி.ஐ ஐ.டி (UPI ID) முறையில் பங்குகளுக்கு  விண்ணப்பிக்க வேண்டும். இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதேநேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை வங்கி கணக்கில், சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகள் (Self Certified Syndicate Banks -“SCSBs”) அல்லது யூ.பி.ஐ சிஸ்டத்தில் முடக்கி  (Blocked) வைக்கப்பட்டிருக்கும். ஆங்கர் முதலீட்டாளர்கள் இந்த அஸ்பா முறையில் விண்ணப்பிக்க அனுமதி இல்லை.

இந்தச் சம பங்குகள் பி.எஸ்.இ (BSE) மற்றும்  தேசியப் பங்குச் சந்தை  ஆகிய  இரண்டு பங்குச் சந்தைகளிலும்  பட்டியலிட உத்தேசிக்கப்பட்டுள்ளன. வரையறுக்கப்படாத இந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பெரிய சொற்களும் (capitalised terms) ரெட் ஹியரிங் விவரக் குறிப்பில் பரிந்துரைக்கப்பட்ட அதே பொருளைக் கொண்டிருக்கும்.

 

Disclaimer:

 

The Issuer is proposing, subject to receipt of requisite approvals, market conditions and other considerations, an initial public offering of its Equity Shares and has filed a red herring prospectus dated March 22, 2022 (the "RHP") with the Registrar of Companies, Tamil Nadu (“RoC") and Securities Exchange Board of India ("SEBI"). The RHP is available on the website of SEBI at www.sebi.gov.in; the website of Book Running Lead Manager at www.systematixgroup.in; and Issuer at www.verandalearning.com

 

Any potential investor should note that investment in equity shares involves a high-degree-of risk. For details, potential investors should refer to the RHP, including the section titled "Risk Factors" beginning on page 30 of the RHP. Potential investors should not rely on the RHP for any investment decision."

 

The information contained herein been prepared for publication or distribution in India and may not be released in the United States. This presentation of information does not constitute an offer of securities for sale in any jurisdiction, including the United States, and any securities described in this announcement may not be offered or sold in the United States absent registration under the U.S. Securities Act of 1933 or an exemption from registration. Any public offering of securities to be made in the United States will be made by means of a prospectus that may be obtained from the Issuer and that will contain detailed information about the Issuer and management, as well as financial statements. However, the securities described herein are not being offered or sold in the United States.

  

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...