மத்திய அரசு சார்பாக பாரத ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) சாவரின் கோல்டு பாண்ட்களை (Sovereign Gold Bond - SGB) வெளியிடுகிறது. இதை ஒரு கிராம் அளவுக்குக்கூட வாங்கலாம்.
ஒரு கிராமை ஒரு யூனிட் என்பார்கள். அதிகபட்சமாக ஒருவர், ஒரு நிதி ஆண்டில் 4 கிலோ வரைக்கும் வாங்கமுடியும். இதன் முதலீட்டுக் காலம் 8 ஆண்டுகள். அதன்பிறகு அதை விற்றால் நீண்ட கால மூலதன ஆதாய வரி கிடையாது.
ஆரம்பத்தில் செய்யும் முதலீட்டுத் தொகைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும்.
இந்த வட்டியை ஆறு மாதத்துக்கு ஒரு முறை முதலீட்டாளர் வங்கிக் கணக்கில் வரவு வைப்பார்கள்.
இந்த பாண்டுகளை ஆண்டுக்கு சில முறைகள் தான் ஆர்.பி.ஐ வெளியிடுகிறது. அடுத்த பாண்ட் வெளியீடு 2022 பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கி மார்ச் 4-ம் தேதி (February 28-March 04, 2022) நிறைவு பெறுகிறது.
நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும்.
அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி
nithimuthaleedu@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக