மொத்தப் பக்கக்காட்சிகள்

ஆன்லைன் கார் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் ‘KUWY’ செயலி அறிமுகம்!

B Ganesh Kumar, CEO & Co-Founder, Kuwy

ஆன்லைன் கார் வர்த்தக செயலி குவை KUWYLaas டிஜிட்டல் முறையில் நிதியுதவியை வழங்கும் முதல் செயல்தளம் என்ற பெருமையைப் பெறுகிறது ~

சென்னை, 3 பிப்ரவரி 2022:

இந்தியாவில் ஆன்லைன் கார் விற்பனையை மேலும் துரிதமாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போக்ஸ்வேகன் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகவும்இந்தியாவின் முதல் மற்றும் முன்னணி ஆட்டோமோட்டிவ் ஃபின்-டெக் ஸ்டார்ட்-அப் நிறுவனமாகவும் திகழும் KUWY, இந்தியாவிற்கான அதன் சமீபத்திய தொழில்நுட்ப செயலி (KUWYLaas) என்பது தொடங்கப்படுவதை  அறிவித்திருக்கிறது. 

இந்திய ஆன்லைன் கார் விற்பனை பிரிவில் முதன்முறையாக நிதியுதவி வழங்கலை ஒரு சேவையாக அறிமுகம் செய்யும் KUWYLaas பிளாக் செயின் தொழில்நுட்பத்தோடு செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் (ARTIFICIAL INTELLIGENCE) ஒரு செயல்தளமாகும்.  கார் வாங்குபவர்விற்பனையாளர்கார் மற்றும் நிதி உதவி வழங்குனர் ஆகிய அனைவரையும் நேர்த்தியாக ஒருங்கிணைப்பதன் வழியாக ஆன்லைனில் கார் விற்பனை பரிவர்த்தனையை இது மேற்கொள்கிறது

முழுமையான வெளிப்படைத்தன்மையோடுஆன்லைன் வழியாக கார் விற்பனையை அனைவரும் எளிதாக பயன்படுத்த இது வகை செய்கிறது.  கூடுதலாகவிற்பனையாளர்வாங்குனர் மற்றும் நிதியுதவி வழங்குனர் ஆகிய மூன்று நபர்களும் சரியான முடிவை செய்யவும் மற்றும் விரும்புவதை தேர்ந்தெடுக்கவும் அதிக அளவிலான தகவலையும் இத்தொழில்நுட்பம் வழங்குகிறது.

குவை(KUWY) நிறுவனத்தின் இணைநிறுவனரும்தலைமை செயல் அலுவலருமான திரு.பி. கணேஷ் குமார் இந்த அறிமுகம் குறித்து கூறியதாவதுஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் புதிய மற்றும் பயன்படுத்திய கார்களை நிதியுதவியுடன் வாங்குவதற்கு KUWY “Lending as a Service” (ஒரு சேவையாக நிதியுதவி வழங்கல்) என்பதனை அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  இந்தியாவில் ஆன்லைன் கார் ரீடெய்லிங் செயல்பாட்டை இன்னும் மேம்படுத்துவதற்கு KUWYLaaS உதவும்இதிலுள்ள தொழில்நுட்ப புத்தாக்கம்இன்றைக்கு ஆன்லைன் கார் விற்பனையில் காணப்படுகின்ற சவால்கள் அனைத்தையும் அகற்றிவிடும் என்பதோடுகார் வாங்குபவர்களுக்கு சிறப்பான அனுபவத்தையும் தரும்.  ஆன்லைன் பரிவர்த்தனையை பூர்த்திசெய்ய ஏதுவாக்கும் மிக ஆழமான உள்நோக்குகளையும்கண்ணோட்டங்களையும் சேர்த்து வழங்கும்காரின் விவரக்குறிப்புகளில் தொடங்கிநிதியுதவிக்கான விருப்பத்தேர்வுகளையும்கடன்வழங்கும் நிறுவனத்தையும் தேர்வுசெய்வது மற்றும் முற்றிலும் காகித பயன்பாடு இல்லாத ஒரு செயல்பாட்டின் வழியாக நிதியுதவிக்கு உடனடி ஒப்புதலை பெறுவது வரை இதில் உள்ளடங்கும்.  இவையனைத்தும்அதிகம் தேவைப்படுகின்ற தொழில்நுட்பமாக KUWYLaaS ஆக்குகிறது என்று நான் நம்புகிறேன்

 

இந்தியாவில் கார் விற்பனை பிரிவின் ஒட்டுமொத்த சூழலமைப்பையும் இது வலுப்படுத்துவது மட்டுமின்றி உலகத்தரத்தில் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப புத்தாக்கங்களுக்கு நிகராக நமது நாட்டையும் நிலைநிறுத்தும்.”

 

கார் தயாரிப்பாளர்கள்டீலர்கள்கார் அக்ரிகேட்டர் செயல்தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள்அவர்களது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையிலான ரீடெய்லிங் சேவையை சிறப்பாக வழங்க இப்புதிய செயல்தளமான KUWYLaaS உதவுகிறது.  ஆன்லைனில் வெளிப்படையானமுழுவதும் தானியக்க முறையிலான நிதியுதவியை அவர்களது வாடிக்கையாளர்களுக்கு இவர்கள் வழங்கும் அதே நேரத்தில்அவர்களது சொந்த பிராண்டின் கீழ் கார் ரீடெய்லிங் அனுபவத்தையும் இதில் இணைப்பதை இது சாத்தியமாக்குகிறதுவெளிப்படைத்தன்மையுடன்முற்றிலும் தானியக்க முறையில் செயல்படும் நிதியுதவி தீர்வையும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க இச்செயல்தளம் அனுமதிக்கும்.   

திருகணேஷ்  இது குறித்து மேலும் பேசுகையில், “கார் விற்பனையில் உலகளவில் முதன்மையான ஐந்து நாடுகளுக்குள் தரவரிசையில் ஐந்தாவது இடத்தை இந்தியா கொண்டிருக்கிறது.  எனினும் தொழில்நுட்ப மேம்பாடுதகவல் பகிர்வின் அடிப்படையில்,  கார் வாங்கும் மற்றும் விற்கும் செயல்பாடுகளும்நடத்தை முறைகளும் வேறுபடுகின்றனசரியான முடிவை எடுக்கவும் மற்றும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனையை உடனடியாக முடிக்கவும், KUWYLaaS உதவுகிறதுதொடர்புடைய அனைத்து தரப்புகளுக்குமான வாய்ப்புகள் மற்றும் விருப்பத்தேர்வுகள் பற்றி விரிவான தகவலை வழங்குவதன் மூலம் இப்பிரச்சனைக்கு குவைலாஸ் தீர்வு காண்கிறது.  இந்த ஒட்டுமொத்த செயல்முறையிலும் அனைத்துப் பிரிவினரும் திறனதிகாரம் பெறுமாறு செய்வதால்அவர்களது பிசினஸ் செயல்பாடுகளை இது மேம்படுத்தும்அதைவிட மிக முக்கியமாகஇந்த ஒட்டுமொத்த தொழில்பிரிவையும் வெளிப்படைத்தன்மை உள்ளதாகவும்ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டதாகவும் இது ஆக்கும்,” என்று குறிப்பிட்டார்.

புதிய மற்றும் பயன்படுத்திய கார்களை டிஜிட்டல் முறையில் வாங்கி விற்கும் ரீடெய்லிங் செயல்பாட்டை எளிதாக்க ஆன்லைனில் காருக்கான நிதியுதவியை எளிதாக பெறும் வசதியையும்சிறப்பான ஒருங்கிணைப்பையும் கார் தயாரிப்பாளர்கள்டீலர்கள்ஆன்லைன் அக்ரிகேட்டர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு KUWYLaas வழங்குகிறது

  • புதியபயன்படுத்திய மற்றும் சான்றளிக்கப்பட்ட கார்கள் மீது டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்தல்
  • KUWY லோன் டெசிஷன் இன்ஜின்’ என்பதன் வழியாக நிகழ்நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு நிதி / கடன் வழங்கல் மீதான முடிவெடுத்தல்
  • 25-க்கும் அதிகமான இந்தியாவின் முன்னணி கார் நிதி நிறுவனங்களிலிருந்து சரியான நிறுவனத்தை தேர்வுசெய்தல்
  • நிதி நிறுவனங்களின் முன்-ஒப்புதல் பெற்ற 27+ KUWY கடன் செயல்திட்டங்களைப் பெறுவதற்கான வசதி
  • எம்பெடட் கவுன்ட்டர்ஆஃபர் தொழில்நுட்பம்
  • வாகனத்தை வாங்கும் நபருக்கு ஆவணங்களை மாற்றுவதற்கான KUWYன் சொந்த செயல்திட்டத்திற்கு அணுகுவசதி

மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பதிப்புகளாக குவைலாஸ் கிடைக்கிறதுஇதை தேவைக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக அமைத்துக்கொள்ள இயலும். API சூட் வழியாகஏற்கனவே இருந்துவரும் வலைதளம், DMS அல்லது உள்ளார்ந்த LOS ஆகியவற்றுடன் இதை எளிதாக ஒருங்கிணைக்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.


குவை குறித்து – சென்னையை அடித்தளமாக கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான KUWY (தமிழில் டிஜிட்டல் நிதி என பொருள்படும்), 2017 – ம் ஆண்டில் திரு. B. கணேஷ்குமார் அவர்களை இணை – நிறுவனராகக் கொண்டு தொடங்கப்பட்டது.  ஆட்டோமோட்டிவ் தொழில்துறையில் நிதியுதவி செயல்பாட்டை வெளிப்படைத்தன்மையோடு ஜனநாயகப்படுத்துவது மற்றும் டிஜிட்டல்மயமாக்குவதே இதன் குறிக்கோளாகும்.  டீலர்கள்நிதி நிறுவனங்கள்வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் இணைக்கின்ற இந்தியாவின் முதல் ஆட்டோமோட்டிவ் ஃபின்-டெக் செயல்தளம் என்ற பெருமையை குவை கொண்டிருக்கிறது.  டிஜிட்டல் முறையில் நிதியுதவி மற்றும் கடனுக்கான ஒப்புதல்அதன் செயல்முறை மற்றும் கடன்வழங்கல் ஆகியவற்றை மேற்கொள்வதன் வழியாக கார்களை வாங்குவதற்கான நிதியுதவியை பெறுவதை இது எளிதாக்குகிறது.  இந்தியாவெங்கும் 500+ அமைவிடங்களில் செயலிருப்பைக் கொண்டுள்ள KUWY டீலர்களின் மிகப்பெரிய வலையமைப்போடு (4500+) செயல்படுகிறது.  KUWY போக்ஸ்வேகன் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமாகும்

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

தொழில் பழகுவோம் புத்தகம் RxT - A Financial Health Clinic

RxT - A Financial Health Clinic நிறுவனத்தின் முதல் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக, "தொழில் பழகுவோம்" ...