பேங்க் ஆஃப் இந்தியா: நிகர லாபம் 2022 மூன்றாம் காலாண்டில் 90.02% அதிகரித்து ரூ.1,027 கோடி
முக்கிய அம்சங்கள் –
2021-22 ஆம் நிதி ஆண்டு மூன்றாம்
காலாண்டு (Q3FY22)
● நிகர லாபம்
ரூ. 1,027 கோடி, ஆண்டு கணக்கில்
90% அதிகரிப்பு
● சொத்துகள் மூலமான வருமானம்
0.51% ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன்
ஒப்பிடும் போது.0.23% அதிகரிப்பு
● பங்கு மூலதனம் மூலமான வருமானம் 11.59% ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன்
ஒப்பிடும் போது. 2.05% அதிகரிப்பு
● வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் 16.66%,
CET-1 விகிதம் 13.16% ஆக உள்ளது.
● மொத்த வாராக் கடன் விகிதம் 10.46% ஆக உள்ளது. இது முந்தைய காலாண்டை விட 1.54%
குறைவு
● நிகர வாராக் கடன் விகிதம் 2.66% ஆக உள்ளது. இது முந்தைய காலாண்டை விட 0.13%
குறைவு.
● வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (PCR) 86.86% ஆக உள்ளது.
● புதிய வாராக் கடன் உருவாக்கம்
0.47% மற்றும் கடன் செலவு 0.71% ஆக உள்ளது. .
● சிறு கடன், விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ (RAM)
கடன்
வழங்குவது 12.47% வளர்ச்சிக் கண்டுள்ளது.
இவை மொத்தக் கடனில் 54.24% ஆக உள்ளது. .
● வங்கி வழங்கிய மொத்த கடன்களில் முன்னுரிமை துறையின்
பங்களிப்பு 42.35% ஆக உள்ளது.
● காசா டெபாசிட்கள், 10.74% அதிகரித்துள்ளது.
காசா விகிதம் 44.07% ஆக உள்ளது.
2021, டிசம்பர்
31 ஆம் தேதியுடன் முடிந்த காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகள் (Financial Results for the Quarter ended 31st
Dec. 2021)
லாபத்தின்
தன்மை (Profitability):
·
பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் (Net
Profit) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் (டிசம்பர் காலாண்டு) 90.02% அதிகரித்து
ரூ.1,027 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம்
காலாண்டில் ரூ..541 கோடியாக இருந்தது.
·
செயல்பாட்டு லாபம் (Operating
Profit) 2021-22 –ம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில்
ரூ. 2,096 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம்
காலாண்டில் ரூ. 2,665 கோடியாக இருந்தது.
·
நிகர வட்டி வருமானம் (Net
Interest Income -NII) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 3,408 கோடியாக உள்ளது.
இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 3,739 கோடியாக இருந்தது.
·
வட்டி சாரா வருமானம் (Non-Interest
Income) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 1,835 கோடியாக உள்ளது. இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ. 1,897 கோடியாக இருந்தது.
விகிதங்கள் (Ratios):
2021-22 –ம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிகர வட்டி
வரம்பு (NIM - Global) 2.27% ஆகவும் உள்நாடு 2.51% ஆகவும் உள்ளது.
·
2021-22 –ம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சொத்துகள் மூலமான வருமானம்
(Return on Assets - RoA) 0.51% ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டில்
(Q3FY21) 0.28% ஆக இருந்தது. இது மேம்பாடாகும்.
·
கடன்கள் மூலமான வருமான வசூல் (Yield
on Advances - Global) 2021-22 –ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 7.02% ஆக உள்ளது.
இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 7.67% ஆக இருந்தது.
·
நிதித் திரட்டும் செலவு (Cost of Deposits -Global) 2021-22 –ம் நிதி ஆண்டின்
மூன்றாம் காலாண்டில் 3.75% ஆக மேம்பட்டுள்ளது.
இது 2020-21 ஆம் நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 4.03% ஆக இருந்தது.
·
புதிய
வாராக் கடன் உருவாக்க விகிதம் (Slippage ratio) 0.47% மற்றும் கடன் செலவு (Credit Cost) 0.71% ஆக
உள்ளது.
வணிகம் (Business):
·
சர்வதேச வணிகம், 2021 டிசம்பர் காலாண்டில் 3.28% அதிகரித்து
ரூ. 10,60,519 கோடியாக உள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டில் ரூ.10,26,866 கோடியாக இருந்தது.
·
திரட்டப்பட்ட சர்வதேச டெபாசிட்கள் (Global
Deposits), முந்தைய நிதி ஆண்டின் டிசம்பர் காலாண்டை விட 1.84% அதிகரித்து
ரூ. 6,23,120 கோடியாக உள்ளது. திரட்டப்பட்ட
உள்நாட்டு டெபாசிட்கள் 2021 டிசம்பர் காலாண்டில் 1.71% அதிகரித்து
ரூ. 77,761 கோடியாக உள்ளது
·
வழங்கப்பட்ட பன்னாட்டு கடன்கள் (Global
Advances) 5.40% அதிகரித்து
ரூ. 4,37,399 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட
உள்நாட்டு கடன்கள் (Domestic Advances), முந்தைய நிதி
ஆண்டின் டிசம்பர் விட 5.33% அதிகரித்து ரூ. 3,82,365 கோடியாக உள்ளது.
வெளிநாட்டு கடன்கள் 5.88% அதிகரித்து
ரூ. 55,034 கோடியாக உள்ளது.
·
உள்நாட்டு காசா (Domestic
CASA), முந்தைய நிதி ஆண்டின் இதே டிசம்பர் காலாண்டை விட 10.74% அதிகரித்து
ரூ. 2,14,826
கோடியிலிருந்து
ரூ. 2,37,906 கோடியாக அதிகரித்துள்ளது. காசா 44.07% ஆக இருக்கிறது.
·
சிறு கடன், விவசாயம் மற்றும் எம்.எஸ்.எம்.இ (RAM)
கடன்
வழங்குவது 12.47% வளர்ச்சிக் கண்டு ரூ. 2,07,381 கோடியாக உள்ளது. இவை மொத்தக் கடனில்
54.24%
ஆக
உள்ளது
·
2021 டிசம்பர் காலாண்டில் சில்லறை கடன்கள் 15.96% வளர்ச்சிக் கண்டு ரூ.75,542 கோடியாக உள்ளது.
·
2021 டிசம்பர் காலாண்டில் வேளான் கடன்கள் 12.38%
வளர்ச்சிக் கண்டு ரூ.64,439 கோடியாக உள்ளது.
·
2021 டிசம்பர் காலாண்டில் எம்.எஸ்.எம்.இ கடன்கள் 8.87% வளர்ச்சிக் கண்டு ரூ. 67,400 கோடியாக உள்ளது.
சொத்து தரம்
(Asset Quality):
·
மொத்த வாராக் கடன் (Gross NPA) 2021 செப்டம்பர் காலாண்டில் ரூ. 50,270 கோடியாக இருந்தது. இது 8.97% குறைந்த்து 2021 டிசம்பர் காலாண்டில் ரூ. 45,760 கோடியாக உள்ளது.
·
நிகர வாராக் கடன் (Net NPA) 2021 டிசம்பர் காலாண்டில் ரூ.10,708 கோடியாக உள்ளது. இது 2021 செப்டம்பர்
காலாண்டில் ரூ.10,576 கோடியாக இருந்தது.
·
மொத்த வாராக் கடன் விகிதம் 2021 டிசம்பர் காலாண்டில் 10.46%
ஆக இருந்தது. இது 2021 டிசம்பர் காலாண்டில்
12.00% ஆக மேம்பட்டுள்ளது.
·
நிகர கடன் விகிதம் 2021 டிசம்பர் காலாண்டில் 2.79% ஆக இருந்தது. இது 2021 டிசம்பர் காலாண்டில்
2.66% ஆக மேம்பட்டுள்ளது.
·
வாராக் கடன் ஒதுக்கீட்டு விகிதம் (Provision
Coverage Ratio - PCR) 2021 டிசம்பர் காலாண்டில் 86.86% உள்ளது. இது
2021 செப்டம்பர் காலாண்டில் 87.81% ஆக இருந்தது.
மூலதன தன்னிறைவு
(Capital Adequacy):
·
வங்கியின் மொத்த மூலதன தன்னிறைவு விகிதம் (Capital Adequacy Ratio-CRAR) 31.12.2021 நிலவரப்படி 16.66% ஆக உள்ளது. இது 2021 செப்டம்பர்
காலாண்டில் 17.05% ஆகவும் 2020 டிசம்பர் காலாண்டில் 12.51% ஆகவும் இருந்தது.
·
CET-1 விகிதம், டிசம்பர்
2021-ல் 13.16% ஆக உள்ளது. இது 2021 செப்டம்பர் காலாண்டில் 13.43% ஆகவும்
2020 டிசம்பர் காலாண்டில் 9.44% ஆகவும் இருந்தது.
முன்னுரிமை
துறை & அனைவருக்கும் நிதிச் சேவை & டிஜிட்டல் வங்கி (Priority Sector, Financial Inclusion &
Digital Banking):
·
முன்னுரிமை துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் (Priority Sector advances), முந்தைய நிதி
ஆண்டின் டிசம்பர் காலாண்டு உடன் ஒப்பிடும் போது, 2021 ஜூன் காலாண்டில் 10.61% அதிகரித்து
சரிக்கட்டப்பட்ட நிகர வங்கிக் கடனில் (Adjusted Net Bank Credit – ANBC) இதன் பங்களிப்பு 42.35% ஆக உள்ளது.
வேளாண் கடன்கள் விதிமுறைகளின் படி 18% வழங்கப்பட்டுள்ளது.
·
நிதிச்
சேவை, செயல்பாட்டுடன்:
·
பி.எம்.எஸ்.பி.ஒய் (PMSBY) : முழு ஆண்டு இலக்கு 30%, நிறைவேற்றம் 34.11%
·
பி.எம்.ஜே.ஜே.பி.ஒய் (PMJJBY): முழு
ஆண்டு இலக்கு 15%, நிறைவேற்றம் 15.70%
·
ஏ.பி.ஒய் (APY) கிளை ஒன்றுக்கு: முழு ஆண்டு இலக்கு 70%, நிறைவேற்றம் 67%
·
டிஜிட்டல்
வங்கி (Digital Banking):
·
இணைய வங்கி பயனாளர்கள் (Internet Banking users):
2020 டிசம்பரில் 7.41 மில்லியனாக இருந்தது. இது 2021 டிசம்பரில்
8.18 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
·
மொபைல் வங்கி பயனாளர்கள் (Mobile Banking users):
2020 டிசம்பரில் 3.89 மில்லியனாக இருந்தது. இது 2021 டிசம்பரில்
5.61 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
·
யூ.பி.ஐ பயனாளர்கள் (UPI users): 2020
டிசம்பரில் 9.01 மில்லியனாக இருந்தது. இது
2021 டிசம்பரில் 12.31 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது.
*******
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக