சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
லோன் செயலி (LOAN APP) மூலம் கடன் வாங்குவது அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. அனைவரும் இதை தவிர்க்க வேண்டும். இதில் கடனுக்கு மிக வட்டி அதிகமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் கேட்கும் கடன் தொகையில் 30 சதவீதத்தை ஃபிராசசிங் செலவு என்று பிடித்து கொள்கிறார்கள்.
உதாரணத்துக்கு ரூ.10,000ம் கடன் கேட்டால், பிராசசிங் செலவாக ரூ.3,500-ஐ பிடித்துக்கொண்டு, ரூ.7,000 மட்டுமே தருவார்கள். ஆனால் ரூ.10,000 -த்தை வட்டியுடன் திருப்பிச்செலுத்த வேண்டும்.
இந்தக் கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பி செலுத்தாவிட்டால், வட்டி மிகவும் அதிகமாக உயர்ந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் கடன் வாங்கியவர்களை மிரட்டுவார்கள். பின்னர் நாளாக, நாளாக கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தி, மன உளைச்சலை உண்டாக்குகிறார்கள்.
எனவே, யாரும் அவசர தேவைக்கு லோன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.