எல்.ஐ.சி சேர்மன் திரு. எம்.ஆர். குமார் பதவிக் காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
இந்தியாவின் ஒரே பொதுத்துறை நிறுவனம் எல்.ஐ.சி (LIC). இதன் சேர்மன் திரு. எம்.ஆர். குமார், பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவர் 2023 மார்ச் 13-ம் தேதி வரைக்கும் பதவியில் இருப்பார். புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐ.பி.ஓ) எல்.ஐ.சி தயாராகி வரும் நிலையில் எம்.ஆர். குமார் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
திரு. எம்.ஆர். குமாருக்கு இதுவரை இரண்டு முறை பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.