பிரமாண்ட துபாய் எக்ஸ்போ 2020 - அழைக்கிறார் கார்த்திக் மணிகண்டன், இயக்குனர், ஜி.டி. ஹாலிடேஸ்.
ஒலிம்பிக் போட்டி, உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு பிறகு இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்ச்சியை இந்த உலகம் கண்டதில்லை. சுமார் 200 நாடுகள் பங்கேற்கும் துபாய் எக்ஸ்போ 2020, கோலாகலத்தின் உச்சம்!
கோவிட் -19 காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்க வேண்டிய இந்த சர்வதேச கண்காட்சி 2021 அக்டோபர் மாதத்தில்தான் துவங்கியது. இந்த நிகழ்வு 2022 பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை கிட்டத்தட்ட 1.1 கோடி பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
மாபெரும் கண்காட்சி
உலக நாடுகளுக்கு எல்லாம் சென்று, அங்கு நிலவும் கலாசாரம், உணவு, மக்கள் பற்றியெல்லாம் அறிய வேண்டும் என்பது உங்களின் ஆசை என்றால், அதற்கு சரியான டிரெய்லர்தான் துபாய் எக்ஸ்போ. இந்தியா உட்பட 192 நாடுகள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்பதால், அந்தந்த நாட்டின் முக்கிய விசேஷங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வியாபார வாய்ப்புகள், கலை & கலாசார அம்சங்களை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது.
இத்தனை நாடுகள் பங்கேற்கும் ஒரு மாபெரும் கண்காட்சி இதுவரை சரித்திரத்தில் நிகழ்ந்ததே இல்லை. மீண்டும் இதுபோன்றதொரு மாபெரும் நிகழ்வு எப்போது, எங்கு நிகழும் என்பது கேள்விக்குறியே!
அதனால்தான் சுற்றுலா விரும்பிகளின் புதிய வேடந்தாங்கலாக மாறியிருக்கிறது துபாய் எக்ஸ்போ...
உலக வரைபடத்தில் துபாய் என்பது மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளை இணைக்கும் மத்தியப் புள்ளியாக இருப்பதால், அனைத்து நாட்டினருக்கும் விரும்பமான சுற்றுலா தலமாக மாறியிருக்கிறது
இந்த எக்ஸ்போ. குறிப்பாக இந்தியாவிலிருந்து விமானத்தில்
3-4 மணி நேரத்துக்குள் துபாய்க்குப் பறந்துவிடலாம்!
எக்ஸ்போ மட்டுமல்ல, துபாயையும் சுற்றிப் பார்க்கலாம்!
"பயணம் என்பது நம் மனதை பரந்து விரியச் செய்கிறது. துவண்டு கிடக்கும்போது நாம் செல்லும் பயணம் நமக்கு நேர்மறையான எண்ணங்களைத் தருவதுடன், புதிய அனுபவங்களைக் கொடுத்து, நம்மைச் சிறந்த மனிதனாக்குகிறது. கோவிட் 19 வந்த பிறகு உலகமே முடங்கிப் போயிருந்தாலும், மார்ச் 2022 முதல் அனைத்து உலக நாடுகளும் தங்களின் சுற்றுலாத் தலங்களை மக்களுக்காகத் திறக்க உள்ளனர். அதனால் இந்தாண்டு நீங்கள் சுற்றுலா செல்ல நினைத்திருந்தால் அதற்கு நாங்கள் அனைத்து விதத்திலும் உதவக் காத்திருக்கிறோம்! குறிப்பாக சர்வதேச சுற்றுலா செல்வதற்கு, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சுற்றுலா கடன் (டிராவல் லோன்) பெற்றுத் தருகிறோம். மேலும் மாதத் தவணையாக சுற்றுலா கட்டணத்தை செலுத்தும் வாய்ப்பையும் வழங்குகிறோம். இது வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது" என்கிறார் கார்த்திக் மணிகண்டன், இயக்குனர், ஜி.டி. ஹாலிடேஸ்.
துபாய் எக்ஸ்போவுக்கு அழைத்துச் செல்வது மட்டுமல்லாது, விமானப் பயணச் சீட்டு, விசா, தங்கும் அனைத்து ஏற்பாடுகள், உணவு மற்றும் போக்குவரத்தை ஜி.டி ஹாலிடேஸ் பார்த்துக்கொள்கிறது.
5 நாள் சுற்றுப்பயணத்தில், துபாய் எக்ஸ்போ, துபாய் சிட்டி டூர், புர்ஜ் கலிஃபா, பாலைவன சஃபாரி, தோ க்ரூய்ஸ் கப்பல் சவாரி, குளோபல் வில்லேஜ் ஆகிய இடங்களுக்கும் கூட்டிச் செல்கிறது ஜி.டி ஹாலிடேஸ்.
கடந்த 2021 அக்டோபர் மாதம் முதல் சுமார் 2,500 சுற்றுலாப் பயணிகளை, ஜி.டி ஹாலிடேஸ் துபாய்க்கு அழைத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது!
மேலும் தகவல்களுக்கு, அழைக்கவும்: 99408 82200