பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் செயல்படும் புதிய கரன்சி (Central bank digital currency - CBDC) ஒன்று ரிசர்வ் வங்கியால் வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
இதற்கான பணிகளை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நிலையில், விரைவில் இதற்கான விதிமுறைகளையும் அறிவிக்கவிருக்கிறது.
கிரிப்டோகரன்சிகள் போல இதுவும் பிளாக்செயினில் இயங்கினாலும், இது ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தோடு வருவதால், இது அரசின் இன்னொரு கரன்சியாகவே கருதப்படும். இதன் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உட்பட வாய்ப்பு இல்லை. இந்த டிஜிட்டல் கரன்ஸி ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக